கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்தது குறித்து, பாஜகவை தவிர்த்து அ தி மு க, தி மு க, காங்கிரஸ், பா ம க உட்பட தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதுவரை தங்களின் நிலைப்பாட்டையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை


கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்தது  குறித்து, பாஜகவை தவிர்த்து அ தி மு க, தி மு க, காங்கிரஸ், பா ம க உட்பட தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதுவரை தங்களின் நிலைப்பாட்டையோ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை.  'அரசியல் வியாபாரம்' பாழாகி விடும் என்பதே மிக முக்கிய காரணமாக இருக்கும் என எண்ணுகிறேன். மதசார்பற்ற நாடு என்று முழங்கும் அரசியல் தலைவர்கள், பெரும்பான்மை மதத்தை இழிவுபடுத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த குற்றத்தை கண்டிக்காமல் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகளே. இறை வழிபாட்டில் நம்பிக்கை உள்ள அரசியல்வாதிகள் அமைதி காப்பது முறையற்ற செயல். இராவணனும் இறை நம்பிக்கை கொண்டவன் தான். ஆனால் தர்மத்திற்கு எதிரானவன் என்பதையும், சீதை என்ற பெண்ணை இழிவுபடுத்த முயற்சித்ததாலேயே அழிந்தான் எனபதையும்   அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தற்போதைய கந்தசஷ்டி கவசம் குறித்த விவகாரமும்  பெண் இனத்தை இழிவுபடுத்தியே விமர்சிக்கப்பட்டுள்ளது. பெண் உரிமைக்காக பேசுவதாக  மார்தட்டி கொள்பவர்கள், பகுத்தறிவு கொள்கை என்று முழுங்குபவர்கள்,  பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு மௌனம் காப்பவர்கள், பெண் இனத்தை இழிவுபடுத்தும் நாசகார கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு  தெரிவிப்பதாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள். தாய், மனைவி, சகோதரி, மகள்கள்,  உள்ள அரசியல்வாதிகள் இதை உணர்ந்து மௌனம் கலைப்பது, அவர்களுக்கு சிறப்பை தரும். 

மாற்று மதத்தினர், அமைப்பினர் இது குறித்து பேசவில்லையே என்பது குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. அவர்களை, அவர்களின் கடவுள்களை  விமர்சனம் செய்வதும் இந்த விவகாரத்தில் அவசியமில்லை என கருதுகிறேன்.

எதற்கெடுத்தாலும் தங்களின் கருத்துக்களை, கண்டனங்களை பதிவு செய்யும், கடவுள் நம்பிக்கை உள்ள  திரை உச்ச  நட்சத்திரங்கள் பலர் இந்த விவகாரத்தை கண்டும் காணாமல் இருப்பது தமிழக திரை துறையில் இறை நம்பிக்கை இல்லாத, திராவிடர் கழக சித்தாந்தம்  கொண்ட, ஹிந்து விரோத எண்ணம் கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது. தங்களின் தொழில், வருமானம் பாதிக்கப்பட்டு விடும் என்ற எண்ணத்தில் மௌனம்  காப்பது உச்ச நட்சத்திரங்களின் வருமானத்தை, இன்று குலைப்பது போல் தெரிந்தாலும், நிரந்தரமாக அவர்களின் நிம்மதியை குலைக்கும் என்பதை விரைவில்  உணர்வார்கள்.

அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால் அரசன் 'அன்றே' கொல்லாத போது,  தெய்வம் நின்று விடாது. அரசனின் பணியை தெய்வமே  நிறைவேற்றும். சூரசம்ஹாரம் துவங்கட்டும்.

நாராயணன் திருப்பதி.

Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.