எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும் மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்

 





பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம்


பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்


பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம்


பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்


எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும்


நல்மரங்களை நடுகின்றாரோ அவரிடம்


தேவதைகளும் முனிவர்களும் தேவதைகளும் கந்தர்வர்களும்


மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர் 


இன்றைய மரம் மதுரை பதிவு சற்று வித்தியாசமானது 


உங்களுக்காக மரங்கள் பற்றிய நூலிருந்து

மரங்களை பற்றிய சற்றே வித்தியாசமான

சுவாரசியமான தகவல்களை

தொகுத்து வளங்கியிருக்கிறோம்


கண்டிப்பாக படிக்கவும்


‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணன் கூறுகிறார்.


ஒரு அரச மரம் நட்டால் ஒரு ஆண்டு சொர்க்க லோக பதவி கிட்டும் என்று விருஷ ஆயுர்வேதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறதாம்.


பல ஆண்டு கால சொர்க்கலோக வாசத்துக்கு பல அரச மரங்கள் நட வேண்டும். 

*அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரசமரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்றச் சொல்லியிருப்பதன் மருத்துவ காரணங்கள் உள்ளன*


அரச மரத்தின் அதிக பிராணவாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. 

புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே என்றும் அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கினார்கள்.


ஆல மரம் வாக்கின் அடையாளம் என்றும் அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான பனியாக்கள் அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள் என்றும் அதன் காரணமாகவே 

அது ஆங்கிலத்தில் பான்யன் ட்ரீ என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதன் காரணமாக ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டியவை.


சாஸ்திர முறைப் படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் இடம் உண்டு என்றும் விருஷ ஆயுர்வேதம் நூல் சொல்கிறது.


மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக இலுப்பை மரத்தையும் அது ஏன் ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது என்பதைப் பற்றியும் கூறுகிறார். 


தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது.


அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி

ரைட்ஸ் உருவானது.


நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப் பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.


நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் அசோக மரங்களாக கருதப் படுகின்றன. உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.


இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும், பிரமிப்பையும் அளிக்கின்றன. தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருவாலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான் போலிருக்கிறது. நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்ப மரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. புங்கை மரத்தை அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம் என்கிறார். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைச் சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கைஎண்ணெய்தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் ,


படித்ததில் பிடித்தது 


இவன் 

🔥அரும்பை பிச்சைகாரன் 🔥


Comments

Popular posts from this blog

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

கில்ஜி வந்தபோது, ​​ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வரவேற்க வெளியே வந்தனர், அவர் நன்றி தெரிவிக்க அங்கு இருப்பதாக நினைத்தனர். அதற்கு பதிலாக, கில்ஜி சிரித்துக்கொண்டே தலைமைத் துறவியின் தலையை தனது வாளால் துண்டித்தார் - அவர் தயாராக வந்திருந்தார். பின்னர் அவர் கேரட் மற்றும் முள்ளங்கி போல ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொன்று, அவர்களை ஆச்சரியப்படுத்தினார். அடுத்து, உலகளாவிய அறிவு மற்றும் அறிவியலின் இதயமான பிரமாண்டமான நூலகத்திற்கு தீ வைத்தார். புத்தகங்கள் மூன்று மாதங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.