பாரதத்தின் ராஜதந்திர ராஜாளி சுப்பிரமணிய ஜெய்சங்கர்.

 


#நவீன_இந்தியாவின்_சாணக்கியர்


🍁❣🍁 பாரதத்தின் ராஜதந்திர ராஜாளி சுப்பிரமணிய ஜெய்சங்கர்.


💖Happy 65th Birthday ! 

Honble MEA Subrahmanyam Jaishankar Ji!


இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம், உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் #வெளிநாட்டு_தூதரக_பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வதும்..


🌵ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் பனி, ஒரு பக்கம் பள்ளம், ஒரு பக்கம் நாகம் என சுற்றும் உலகில் தேச நலன் எனும் எண்ணெய் கிண்ணத்தை கைகளில் வைத்து மெல்லிய கம்பியில் நடந்து மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டியது  போன்றதொரு பணி அது.


கடும் ஆபத்திலும் சிக்கலிலும் சுயநலம் தேடும் உலகிலும் பிராந்திய நலம், இந்திய கண்டத்தின் நலம் இன்னும் பலவகையான நலன் என இழுத்துவிட்டு அவைகளின் நம்பிக்கையினை பெற்று அதே நேரம் எதிர்தரப்பினையும் பகைக்காமல் லாவகமாக நடந்து தன் நாட்டின் நலனை காப்பது பெரும் திறமை, அப்படி ஒரு ராஜதந்திரி கிடைப்பது வரம்.💕


அப்படி ஒரு மாபெரும் வரம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கின்றது அவர் பெயர் #சுப்பிரமணியம் #ஜெய்சங்கர். தமிழர்.


👉இன்று 65 வயதை எட்டும் அவரின் பணி சிறக்க வாழ்வாங்கு வாழ நாமும் தாராளமாக வாழ்த்துவோம்.


🍁 வெளியுறவு துறை பணி அவருக்கு 22 வயதான பொழுது 1977ல் தொடங்குகின்றது, முதல் பணியாக இரு வருடங்கள் மாஸ்கோவில் அன்றைய சோவியத் யூனியனில் இருந்தார். அது இந்திய சோவியத் உறவு உச்சத்தில் இருந்த காலம், உலக அரசியலை அந்த சிகப்பு பூமியில்தான் கற்க தொடங்கினார் கூடவே நிறைய கற்றார் ஜெய்சங்கர்.


2004ல் அமெரிக்க தூதரனார் அந்த காலகட்டம் இந்தியா அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அடம்பிடித்த காலம் மிக கடுமையாக மிரட்டிய காலம், அதில் இந்திய நலன்களை காத்து, அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து மீட்டவர் அவர்தான்


👉2004ல் இந்தியாவினை சுனாமி தாக்கியபொழுது உலகெல்லாம் இருந்து மீட்புகுழு வரவும் ஜெய்சங்கர் முக்கிய காரணம் அவரின் தொடர்பு அப்படி இருந்தது


ஒரு கட்டத்தில் வெளியுறவு துறையின் பெரும் அதிகாரியனார், காங்கிரஸ் அரசு அவரை அதிகாரியாகவே வைத்து சிங்கப்பூரின் தூதராக அனுப்பியது, அங்கு ஓசைபடாமல் ஒரு காரியம் செய்தார், ஆம் சிங்கப்பூரில் இந்தியாவுக்கான அவசரகால ராணுவ விஷயம் சில உண்டு


அட்டகாசமாக அதை சாதித்தார் ஜெய்சங்கர் அதன் பின் சீனாவுக்கான தூதரனார்💝


அது சிக்கலான காலகட்டம் சீனா ஒருமாதிரி அடம்பிடித்து கைலாச யாத்திரைக்கு விடமாட்டோம், அருணாசல பிரதேசம் தெற்கு திபெத் என அடம்பிடித்த காலத்தில் சீன தூதராக இருந்தும் திபெத்துக்குள் வந்தார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திர அணுகுமுறையால் கைலாச யாத்திரை திறக்கபட்டது


👉திபெத்தில் கால் வைத்த அல்லது வைக்க அனுமதிக்கபட்ட முதல் இந்திய தூதர் அவர்தான்.


சீனா பொதுவாக யாரையும் நம்பாது, அந்த சீனாவினையே இந்தியா சீனாவுக்கு எதிரி அல்ல என ஓரளவு தெளிவினை கொடுத்தவர் ஜெய்சங்கர், அவரின் சாதனை அது.


அதன்பின் மறுபடி அமெரிக்க தூதரனார், அப்பொழுது பல ராஜதந்திர சர்ச்சைகளும் தேவயாணி கோப்ரகடே என்ற அதிகாரி சிக்கி கொண்ட விஷயமும் நடந்தது அதை எல்லாம் சமாளித்தது ஜெய்சங்கரே.


நிச்சயம் நீண்ட அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர், உலகில் அவர் கால் படா நாடு இல்லை, அவரை அறியாத வெளிநாட்டு துறைகள் இல்லை. எல்லா இடத்திலும் அவருக்கு நற்பெயரே.


இதைத்தான் மோடி குறித்துகொண்டார்.


மோடி தன் இரண்டாம் ஆட்சியில் பெரும் திட்டங்களை வைத்திருந்தார், அவை உலகை உலுக்கபோகும் விஷயம் எனவும், தேர்ந்த ராஜதந்திரியின்றி அவை சாத்தியமில்லை என்பதையும் நன்றாக உணர்ந்தபொழுது அவர் கண்முன் வந்தவர்தான் ஜெய்சங்கர்.


கொஞ்சமும் யோசிக்காமல் அவரிடம் வெளியுறவு துறை அமைச்சர் பதவியினை கொடுத்தார் மோடி


அதன் தாக்கம் காஷ்மீர் விவகாரத்தில் 370 ரத்து செய்யபடும் பொழுது தெரிந்தது, தன் தேர்ந்த அனுபவத்தாலும் தன் அகில உலக தொடர்பாலும் உலகில் ஒரு குரல் ஒலிக்காமல் பார்த்துகொண்டார்.


அரபு நாடுகளையே அசால்ட்டாக கட்டிபோட்டார் ஜெய்சங்கர்.


பாகிஸ்தானை அடுத்து முணுமுணுத்த நாடு சீனா, அவ்வளவுதான் ஜின்பெங்கை மாமல்லபுரத்துக்கு இழுத்து வந்து அசத்தினார் ஜெய்சங்கர்.


அதன்பின் துருக்கி முணுமுணுத்தது அதுவும் ஓரிருநாளில் அமைதியாயிற்று.


இதெல்லாம் மாபெரும் சாதனைகள், ஒரு வரியில் விளக்கமுடியாதவை.


இந்தியாவுக்கு அந்த தேர்ந்த அமைச்சரை மோடி நியமித்தது மிக பெரும் நல்ல விஷயம், மோடிக்கு ஏன் சில இடங்களில் கைதட்டுகின்றோம் என்றால் இதற்காகத்தான்.


☝கிட்டதட்ட 22 வயதில் இருந்து 43 வருடமாக இந்தியாவுக்கு உழைத்து வருபவர் ஜெய்சங்கர், அவர் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் எடுத்த பயிற்சியே இன்று காஷ்மீர் சிக்கலை உலக தலையீடு இன்றி தீர்க்க முடிந்தது.


இன்றும் சீனா இந்தியாவோடு இனி உரசல் இல்லை என சொல்லிவிட்டது, அமெரிக்கா இந்தியாவினை தேடுகின்றது, ஈரான் தேடுகின்றது, ஜெர்மன் தேடுகின்றது இன்னும் ஏகபட்ட நாடுகள் நட்புறவில் இருக்கின்றன என்றால் காரணம் ஜெய்சங்கர்

இலங்கையில் இந்தியா இன்று கால்பதிகின்றது என்றால் அன்று பார்த்தசாரதி எனும் தமிழனிடம் தமிழன் ஜெய்சங்கர் பெற்ற அனுபவமும் மகா முக்கிய காரணம்.


🌵மோடி ஊர்சுற்றுவார் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருப்பான், அவரின் ஒவ்வொரு பயணத்தின்பொழுதும் ஒரு நாட்டு நலன் இருக்கும் அதை ஜெய்சங்கர் திட்டமிட்டு வைப்பார் மோடி சென்று கையெழுத்திடுவார்.


அந்த அளவு உலக அரங்கில் தனி இடம் பெற்றிருக்கின்றார் ஜெய்சங்கர் எனும் தமிழர்


"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர்.


ஆம் அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் காஷ்மீர் விவகாரம் உலக விஷயமாகி இந்திய மானம் சந்தி சிரித்து காட்சிகளே மாறியிருக்கும்.


பண்டைய சேர, பாண்டிய மன்னன் வரிசையில் அந்த இமயமலையினை மீட்டெடுத்தவர்  ஜெய்சங்கர்.


*இந்த தமிழரை பற்றி இங்கு யாராவது பேசுவார்களா?,*


*இந்த மாபெரும் ராஜதந்திர் தமிழன், உலகில் இந்தியாவுக்கு தனி இடம் பெற்றுகொடுத்திருக்கும் தமிழன் பற்றி தமிழக ஊடகமோ டிவியோ பேசுமா என்றால் பேசாது*


*நடிகர் ஜெய்சங்கர் தெரிந்த அளவு இந்த மாபெரும் சாதனையாளர் தமிழர் தேசிய ஜெய்சங்கர் தமிழனுக்கு தெரியாது*


அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரைவேக்காடு அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவே இல்லா அடிப்பொடிகள் மட்டுமே, தமிழகத்தின் சாபக்கேடு அப்படி. என்ன செய்ய.....


நாம் அந்த அற்புத தமிழனை எப்பொழுதும் நன்றியோடு நினைப்போம், தகுதியான தமிழனாய் பொருத்தமான பதவியில் இருந்து அதில் பெரும் சாதனைகளை செய்து வரும்,


 மாபெரும் ராஜதந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


சுக்குக்கு மிஞ்சின வைத்தியம் அல்ல


இந்த சுப்பிரமணிக்கு மிஞ்சின ராஜாங்க செயலாளர் இல்லை என்றால் அது மிகையாகாது.


இந்த ஜெய்சங்கரும் டெல்லி  பல்கலைகழகத்தில்தான் படித்தார், ஆனால் நாட்டுக்கு எப்படி நல்ல பொறுப்பான ராஜதந்திரியாக உருவாகிவிட்டார் பார்த்தீர்களா? 


அந்த பெருமைமிக்க நிறுவனத்தின் இன்றைய நிலை என்ன? 

இன்று தேசவிரோதிகளால் நிறைந்து குட்டிசுவரானது தான் மிச்சம்.


"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்றார் கண்ணதாசன்


அப்படி நாட்டின் மானம் காத்து நிற்கும் ஜெய்சங்கர் சரித்திரமாகி நிற்கின்றார்.


அவர் பதவியில் இருந்து 

ஆயிரம் பிறைகள் காண வாழ்வாங்கு வாழ ஸ்ரீ ரங்கத்து திவ்ய தம்பதிகள் கடாஷித்து அருள்பாலிக்கட்டும்.


வாழிய நீ எம்மான், வாழிய வாழியவே.!!


நன்றி Shri Ram


Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: