சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

 



சிறுகதை: 

*வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??*


வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்... 

எல்லாமே கரெக்டா இருக்கு...

 அவளுக்கு வேதம் உபநிஷத் மற்றும் நம்ப பிராமண சம்பிரதாயங்கள் எல்லாம் நல்லாவே தெரிகிறது...

அப்பா சொன்னார் "இருந்தாலும் ஒரு தடவை யோசிச்சுக்கோ உனக்கு இதுவரைக்கும் நல்ல வரன் வரலைன்னு எனக்கும் உன் அம்மாவுக்கும் வருத்தம் தான்...

 ஆனால் நீ எது செய்தாலும் நாங்கள் குறுக்கே நிற்கவில்லை...


 ஏன்னா கடந்த பத்து வருஷமா நாங்களும் அலைந்து தேடி பார்த்தாச்சு ஒரு பிராமண பொண்ணு உனக்கு சம்பிரதாய பிரகாரம் கிடைக்கல சில பேரு காதல் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா...


சில பேரு ஏதேதோ காரணம் சொல்லி தட்டி கழிச்சுட்டா...

 பொண்ணே கிடைக்கல ...

அதனால உன் முடிவு படி செய்... 

வெங்கட்ராமன் அப்படி என்னதான் முடிவு செய்தான்?

அவன் இன்று நேரில் சென்று பார்த்த பெண், ஒரு கம்ப்யூட்டர் ரோபோட்.... 

அந்த ரோபோட் பெயர் சீதா...


மிகச் சிறப்பாக அது நவீன தொழில்நுட்ப வடிவமைத்திருந்தார்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் சிறப்பாக கொடுத்து இருந்தார்கள்...

மிக அழகாக வடிவமைத்து இருந்தார்கள்....


வெங்கட்ராமன் அந்த ரோபோட் பெண்ணை மணமுடிக்க பூரண சம்மதம் தெரிவித்து விட்டான்.

 அவ்வளவு அழகாக பிராமண முகம் அவளுக்கு செதுக்கப்பட்டு இருந்தது...

அங்க அடையாளங்கள் சாமுத்திரிகா லட்சணத்தில் படைக்க ப்பட்டு இருந்தது...

 எல்லா வீட்டு வேலைகளும் அந்த ரோபோட்டுக்கு கற்றுக் கொடுத்திருந்தார்கள்...

 ஒரு சிறந்த மனைவியாக இருக்க வேண்டிய விஷயங்களும் அதற்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள்...

என்ன ஒரே குறை?

 மனுஷ பெண் இல்லை...

 குழந்தை பிறக்க முடியாது...

 நானும் இதைக் கேட்டவுடன் முதலில் அதிர்ந்து போனேன்...

 பிறகு என்ன செய்வது ??பிராமண பெண் கிடைக்கவில்லை ...

வெங்கட்ராமன் முடிவு சரிதான்...

நானும் கல்யாணத்துக்கு வந்து விட்டேன்... 

சிறிது அச்சு அசல் கூட தெரியவில்லை... அவள் ரோபோட் என்று....

 அப்படியே பிராமண பெண் போல் எல்லாம் செய்கிறாள் அவனுக்கு எப்படியும் சிறந்த துணையாக இருப்பாள் ...

என்ன குறை??

 வெங்கட்ராமனுக்கு குழந்தை ஒன்றுதான் பிறக்காது...

அதை பற்றி கவலைப்பட வேண்டாம்...

 வெங்கட்ராமனையும் அந்த ரோபோ சீதா... 

சீதா வெங்கட்ராமன் வாழ்த்திவிட்டு கல்யாணம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தாம்பூலத்தோடு கனத்த இதயத்தோடு வீட்டில் வந்து இறங்கினேன்...


How is the story???


Story first feedback:


Dumbfounded.... 🤐


🔥🙏

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.