ராமநவமி ஸ்பெஷல். ************************* வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார். '' ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."' மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ...