ஒரு கோவை பெண்மணியின் மகத்தான அனுபவம்:
ஒரு கோவை பெண்மணியின் மகத்தான அனுபவம்:
2015 வருடம் என்னுடைய உத்திரப்பிரதேச நண்பர் அமித் அகர்வால் எனக்கு போன் செய்து என்னுடைய நண்பரொருவர் கோவை வருகிறார், அவரை பேரூரில் ஒரு ஆசிரமத்தில் இறக்கிவிட வேண்டும் ஒரு கார் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்டார்
அவர் எங்கள் ஊர் எம்பி, மிகவும் எளிமையானவர், நல்ல மனிதர் கண்டிப்பாக நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் இருந்து தேவையானவற்றை சாதித்துக் கொள்ள முடியும், நம்மிடம் ஏன் உதவி கேட்கிறார்கள் என்று அவரிடம் கேட்டேன்.
வாய்ப்பிருந்தால் நேரில் போய்ப் பாருங்கள் உங்களுக்கு புரியும் என்றார், நானே போய் உதவுகிறேன் என்று உறுதியளித்தேன்.
விமான நிலையத்திலிருந்து ஒரு பையை தூக்கிக் கொண்டு வேகமாக என்னை நோக்கி நடந்து வந்து, நலம் விசாரித்து வண்டியில் ஏறிக் கொண்டார், நண்பர் என்னைப் பற்றி அவரிடம் சொல்லி இருந்தார் மேலும் என்னுடைய தொலைபேசி எண்ணையும் அவளிடம் கொடுத்து விட்டு இருந்தார்.
எனக்கும் அவரைப் பற்றி விவரங்களை எல்லாம் அனுப்பி வைத்திருந்தார், போகும் வழியில் ஒரு காபி சாப்பிடலாம் என்று கேட்டேன்.
சரி என்றார், kg மருத்துவமனை அருகில் உள்ள அன்னபூர்ணா உணவகத்திற்கு சென்றோம், அவர் எதுவும் சாப்பிடாமல் நீங்கள் ஆர்டர் சொல்லுங்கள் என்றார்,
நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றேன்.
இல்லை எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்கள் திருப்பூரில் இருந்து எனக்காக வந்து உள்ளீர்கள், கண்டிப்பாக களைப்பாக இருப்பீர்கள், நீங்கள் காபி சாப்பிடுங்கள் என்றார்.
ஐயா நீங்கள் லக்னோவில் இருந்து 2 விமானம் மாறி வந்துள்ளீர்கள், நீங்கள் தான் களைப்பாக இருப்பீர்கள் அதுவுமில்லாமல் என்னுடைய விருந்தினர் நீங்கள் கண்டிப்பாக ஏதாவது சாப்பிட்டாக வேண்டும் என்றேன்.
அவரோ நான் உணவு கொண்டு வந்து விட்டேன் வெளி உணவு எனக்கு சேராது இதை நான் முதலிலேயே சொல்லியிருந்தால் நீங்கள் காபி குடிக்க மாட்டீர்கள் அதனால்தான் சொல்லவில்லை என்றார்.
நான் மட்டும் ஒரு காபியை சொல்லிவிட்டு திரும்புவதற்குள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் சப்ளையர்கள் வடநாட்டவர், மற்றும் ஊழியர்கள் மேலாளர்கள் பாகுபாடு இல்லாமல் வரிசையாக வந்து அவர் காலில் விழ ஆரம்பித்தார்கள்.
எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது, சூப்பர்வைசர் ஒருவர் இவர் தொகுதியைச் சேர்ந்தவர், இவரைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வரிசையாக வந்து காலில் விழ ஆரம்பித்து விட்டார்கள் என தெரிந்தது.
நான் குடித்த அந்த காபிக்கு காசு நான் தான் கொடுப்பேன் என்று அவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டார்கள்..
அதன் பாராளுமன்ற உறுப்பினர் தான் பின்னோக்கி கிடந்த கோரக்பூர் தொகுதியை முன் நோக்கி இழுத்து வந்த மகத்தான பணியைச் செய்தவர், இவர் 1998 முதல் 2017 வரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தன் தொகுதி மக்களுக்கு செய்த பணிகள் மகத்தானது.
இளம் வயதில் கோரக்பூரில் மடாதிபதி ஆனவர்.
26 வயதில் எம்பி ஆகப் பதவி ஏற்றுக் கொண்டவர், இவருடைய குடும்பத்தினர் யாருக்கும் இவரால் ஒரு காரியங்கள் கூட செய்து தரப்படவில்லை.
உடன்பிறந்தவர்கள் பெட்டிக்கடை மற்றும் சாலையோரத்தில் வியாபாரம் செய்தும் பிழைத்து வருகிறார்கள் என்று விபரம் தெரிந்தது.
ஒவ்வொரு நிமிடமும் புதிய அனுபவம் கிடைத்தது, எனக்கு உயர்வாக தெரிந்த அந்த மனிதரை ஹிந்தி தெரிந்த காரணத்தினால் பல விஷயங்களைப் பேசி புரிந்து கொள்ள முடிந்தது.
Rss வளர்ப்பு, மக்கள் நலனில் மட்டுமே பற்று, பிரம்மச்சாரி, எதற்கும் ஆசைப்படாதவர், அவருடைய கையால் அன்று இரவு கோதுமை ரொட்டி சுட்டுக் கொடுத்தார்.
அவர் அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தார், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் போன் செய்வார் நானும் போவேன்.
பூஜை செய்வது, உபதேசம் செய்வது, கோசாலை பராமரிப்பது, என்று ஏதாவது ஒரு இறைபணி செய்து கொண்டே இருப்பார்.
வெறும் நிலத்தில் தான் படுத்து உறங்குவார்.
அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு நான் உடன் சென்று டெல்லிக்கு வழியனுப்பி வைத்தேன்..
அன்று முதல் இன்று வரை தினமும் நினைவில் வரும் ஒரு மாமனிதர், அவர் கையால் எனக்கு உணவு தயாரித்துக் கொடுத்தவர், நாட்டு நலனையும், மக்கள் வளம் பெறவும், பல கருத்துக்களை வித்தியாசமான கோணத்தில் சொல்லிக் கொடுத்தாவர்,
உத்திரபிரதேசம் மாநிலத்தை இப்பொழுது வேகமாக வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும் மாமனிதர்.
அவர் தான் இன்றைய உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்.."
இராஜேஷ்வரீ விஸ்வநாதன்
Comments
Post a Comment