நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... -------------------------------------------- நமது முன்னோர்கள்..... "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள் ------------------------------------------ 💥 சித்திரை - 1 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy Tamil New Year 🔥🙏 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🔥🙏
Sobhakiruthu Varsham Uthrayanam Vasantharuthu. Mesham Chitirai 01. 14.04.23. Krishna Paksham. Navami Thithi. Bruguwar Friday. Uthrashada (Uthradam) Star upto 8.02 am & then Sravanam. Siddha/Saddhya Yogam. Thaitulai Karanam. நல்ல நேரம் : காலை 9.30 - 10.30 pm & 4.30 - 5.30 pm. சூரிய உதயம் : காலை 6.04 am. சூரிய அஸ்தமனம் : மாலை 6.20 pm. RGK 10.30 - 12 hrs. EG 3 - 4.30 pm. Kuligan 7. 30 - 9 am. சந்திராஷ்டமம் : ஆரூத்ரா (திருவாதிரை) & புனர்வசு (புனர்பூசம்) Stars. சூலம் : மேற்கு. பரிகாரம் : வெல்லம். ஸ்ரார்த்த திதி : சூன்ய திதி. தமிழ் வருடப் பிறப்பு இன்று. Sivayanamaha.
🔥🙏🔥🙏🔥🙏
🌞 தமிழ் புத்தாண்டு...!?
(14-04-2023)
சித்திரை ஒன்று அன்று தான் தமிழ் புத்தாண்டு !
ஐப்பசி மாதம் அம்மாவாசை தீபாவளி !
தை ஒன்று பெரும் பொங்கல் பண்டிகை !
என்பதை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்!
💥 சித்திரை 1
💥 ஆடி 1
💥 ஐப்பசி 1
💥 தை 1
--------------------------------------------
எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!
Ok. Lets look at the science behind it...
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....
என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா?
கண்டிப்பாக இல்ல...
--------------------------------------------
நம்ம education system அ ஏடாகூடமாக ஒரு design செய்த வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....
--------------------------------------------
ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்....
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!
--------------------------------------------
சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க....
--------------------------------------------
சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)
அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox)
Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்.....
"தன்னிகரற்ற"
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்
------------------------------------------
💥 சித்திரை - 1
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🔥🙏
சித்திரையே சீர் கொண்டு வா
எந்தன் தமிழ்தாயே எழுச்சிமிகு சித்திரையே
கந்தன் கைப்பொருளே காசினியின் முதற்பொருளே
சுந்தர தமிழுக்கு சூட்டிடும் பூமாலை
சந்தக் கோர்வையாம் சரக்கொன்றை பூவாலே
சிந்தும் சிந்தாலே சித்திரை நாயகிக்கு
வந்துக் கொடுக்கின்றேன் வகையான பரிசொன்றை
தந்துப் பெற்றிடவே தமிழ்ப்புதையல் கேட்டிடவே
முந்தி கேட்கின்றேன் முத்தமிழ் நாயகியே
சித்திரை பூமகளே சிங்கார பாமகளே
முத்திரை பதித்திடவே முழுச்சீரை கொண்டுவா
இத்தரை யாவைக்கும் ஈகையை சீராக்கி
சித்தரை போலவே சிந்தையும் சீராக்கி
வையத்து வாழ்வோரின் வாழ்வையும் சீராக்கி
ஐயங்கள் இல்லாமல் அகிலத்தை நேராக்கி
கையடக்க இதயத்தில் கன்னித்தமிழை நிலையாக்கி
பொய்யில்லா மாந்தர்க்கு பொற்குவியல் பரிசாக்கி
இளையோரின் இதயத்தில் இழைந்தோடும் ஆசைகளை
அலைபாயும் சிந்தைகளை அழகான வடிவாக்கி
மலைபோல துன்பமும் மடுவாக மாற்றிடவே
கலைமகளே சித்திரையே காசினியின் முத்திரையே
நிலைக்கள புவிக்குள்ளே நிம்மதி நிலைப்பெறேவே
மலைமகளே சித்திரையே மங்காத சக்தியே
இளைப்பாறும் வையத்தில் இன்பத்தை நிலையாக்கிடவே
தடையகற்றும் தமிழ்மகளே தமிழ்பாடி வந்திடுவாய் உமாமகேஸ்வரிகிருபாகர் இன்றைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்
இந்தசோபக்ருது வருஷம் பொதுவாக எல்லோருக்குமே எல்லா நன்மைகளையும் பெற்று தரப் போகிறது
இந்த சோபன வருஷத்தில்
சித்திரையைச் சீராக்கி
வைகாசியை வசந்தமாக்கி
ஆனியை ஆனந்தமாக்கி
ஆடியை ஆரோக்கியமாக்கி
ஆவணியை ஆசீர்வாதமாக்கி
புரட்டாசியைப் புனிதமாக்கி
ஐப்பசியை அற்புதமாக்கி
கார்த்திகையைக் காருண்யமாக்கி
மார்கழியை மாண்பாக்கி
தையைத் தைரியமாக்கி
மாசியை மாணிக்கமாக்கி
பங்குனியைப் பக்குவமாக்கி
அவளை இன்முகம் கூறு வாழ்த்தி வரவேற்போம்
உங்கள் அனைவருக்கும் இனிய சோபக்ருது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் வணக்கங்கள்

Comments
Post a Comment