மனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 : ஹலோ! யார் பேசுறது? பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... : நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.

 

மனம் விட்டு சிரியுங்க😆

வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍


: ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...

: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.

-----------------------------------

நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ

ஸ்வீட்டா இருக்கு..SISTER

நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,

இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."

-----------------------------------

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க

விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!

-----------------------------------

மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.

கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

-----------------------------------

ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது

மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க

-----------------------------------

முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?

ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!

முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு

-----------------------------------

மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”

நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”

----------------------------------

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??

கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...

டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...

-----------------------------------

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?

கணவன்: என்னம்மா விஷயம்?

மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(

கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..

மனைவி: ????

-----------------------------------

நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்


டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க.

-----------------------------------

டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?

-----------------------------------

வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கினா  எப்படி கட்டுவீங்க?

கிராமத்தான் : கயிற்றாலே தான்.

-----------------------------------

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."

"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

-----------------------------------

நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.

டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க. என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.

-----------------------------------

அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!

குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?

இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!

-----------------------------------

"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்

பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து

குடுங்களேன்."

"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."

----------------------------------

 நபர் 1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்

கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.

நபர்  2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது