70 ஆண்டுகளில் தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்,
இந்தியாவினை சில நாடுகள் கொண்டாடிகொண்டிருக்கின்றன சில நாடுகள் கைகுலுக்கி வெல்டன் இந்தியா என சொல்லிகொண்டிருக்கின்றன
விஷயம் மிக சீரியசானது
இந்தியா சீன நிறுவணங்களுக்கு தடைவிதித்தும் சீன செயலிகளை விரட்டி அடித்ததும் அனைவரும் அறிந்தது, இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக என்ற ஒருவரியோடு விளக்கத்தை நிறுத்திகொண்டது
இப்பொழுது பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதேபோல் சீன செயலிகளையும் மற்றும் சில நிறுவணங்களையும் தடை செய்திருக்கின்றன, அவை சொல்லும் விஷயம் அதிர்ச்சி ரகம்
ஆம், ஏராளமான சீன நிறுவணங்கள் சீன ராணுவம் மற்று உளவுதுறையுடன் சம்பந்தபட்டவை, தொழில் மற்றும் செயலி என சில நாடுகளில் நுழையும் சீனா இவற்றை கொண்டு பெரும் கலவரங்களையும் குழப்பங்களையும் தூண்டிவிடுகின்றது
உலக அரங்கில் முதன் முதலில் இதை கண்டறிந்து தடை செய்த நாடு இந்தியா, இதை அடுத்தே அமெரிக்காவும் பிரிட்டனும் நிலமையின் வீரியத்தை உணர்ந்து சீன கம்பெனிகளை விரட்டியிருக்கின்றன
சீன குடிமக்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உண்டு அவர்கள் மூலமாகவும் இன்னும் மாணவர் மற்றும் தொழில்நிறுவணம் மூலம் ஊடுருவும் சீன உளவுதுறை எம்.எஸ்.எஸ் சம்பந்தபட்ட நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தது
இந்தியாவில் சீன மக்கள் இல்லா நிலையில் தொழில்நிலையம், செயலி என புகுந்த சீனா இங்கிருக்கும் குழப்பங்களுக்கு கொம்பு சீவ முயன்றிருக்கின்றது
குடியுரிமை எதிர்ப்பு சட்ட போராட்டத்திலும் சீனகரம் இருக்கலாம் என்ற தியரி இப்பொழுது வருகின்றது, எப்படியோ சுதாரித்த இந்தியா ஆபத்தை களைந்திருக்கின்றது
அமெரிக்க சி.ஐ.ஏ இந்திய உளவுதுறை மிக விழிப்பாக இருப்பதை பாராட்டியிருக்கின்றது, ஆம் அஜித்தோவல் என்பவரின் இக்காலம் இந்திய உளவு மற்றும் காவல்துறைக்கு பொற்காலம்
மோடியின் மிக மிக அட்டகாசமான வெற்றி இது, உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கின்றது இந்தியா
"சீப்பை ஓளித்து வைத்தால்" என எகத்தாளம் பேசிய கூட்டத்தின் மேலும் சில பார்வை விழுந்திருக்கின்றது
தமிழக ஊடகங்கள் மேல் பெரும் கவனம் இந்திய மேலிடத்தால் திரும்பியிருக்கின்றது
காரணம் தமிழக ஊடகமோ டிவியோ விளம்பரத்தில் இயங்குபவை, கட்சிகளும் அப்படியே. சீனாவின் நிழலில் இருக்கும் இந்திய நிறுவணம் அவர்களுக்கு பணம் கொடுத்ததா அதில் தங்களை மறந்து சிக்கினார்களா? எனும் அளவு நிலமை செல்கின்றது
இந்தியாவில் சீன நிறுவணங்களை விரட்டினால் என்ன? சீனாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளும் இன்னும் சில கட்சிகளே உண்டு என்பது யாருக்கும் தெரியாதது அல்ல
உலகெல்லாம் சீனாவின் கரங்கள் துண்டிக்கபடும் நேரம் இந்தியாவிலும் பெரும் நடவடிக்கை இருக்கலாம் என்கின்றார்கள், குறைந்த பட்சம் சில போலி போராளிகளின் குரல்களாவது அடங்கும்
மிக மிக முந்திகொண்டு சீனாவால் ஏற்படும் உள்நாட்டு குழப்பங்களை தவிர்த்த இந்திய அரசினை உலகமே வாழ்த்தும்பொழுது இந்தியராகிய நாமும் வாழ்த்துவதே கடமை
சீனாவுக்கு ஆதரவாகவோ இல்லை வேறு விவகாரங்களை பயன்படுத்தி இங்கு கூக்குரலிடும் ஒவ்வொருவரும் கண்காணிக்கபடுகின்றார்கள், எல்லை மீறும்பொழுது எச்சரிக்கபடுகின்றார்கள், இன்னும் மீறினால் செய்வதை சிறப்பாக செய்ய அரசு காத்திருக்கின்றது
70 ஆண்டுகளில் தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள், சாணக்கியனின் பூமி மிக சரியாக அப்பெயரை நிலை நிறுத்தியிருக்கின்றது
Comments
Post a Comment