அருட்பெருஞ்ஜோதி* *தயவுடையோரே....* *தயை கூர்ந்து இறுதி வரை படிக்க வேண்டுகிறேன்* 🙏
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
*அருட்பெருஞ்ஜோதி*
*தயவுடையோரே....*
*தயை கூர்ந்து இறுதி வரை படிக்க வேண்டுகிறேன்* 🙏
*ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய உறவுகளே!*
*அன்பு சால் நண்பர்களே!!*
*அனைவருக்கும் எனது தயவுடன் பணிவான ஆன்மநேய சன்மார்க்க வந்தனம்!*
*காணொளியில் காணப்படும்" இமேஜ் மனநலம் குன்றிய ஆதரவற்றோர்களுக்கான இல்லம் & பள்ளி" தேனி மாவட்டம் தேவாரம் அருகில் மேட்டுப்பட்டியில் இயங்கி வருகிறது.*
*இதன் நிறுவனர் & சேவகர் தயவு திரு.முருகன் ஐயா அவர்கள்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மிகுந்த சிரமத்துடனும் தடைகளைக் கடந்தும் நிறுவியுள்ளார்.*
ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் இவரது கவனத்திற்கு வந்தால் அந்த ஊர் காவல் நிலையத்தில் பதிவு செய்து பிறகு தேவாரத்தில் உள்ள காவல் நிலையத்திலும் பதிவு செய்து இவர்கள் இல்லத்தில் வளர்த்து வருகிறார்.கிராம நிர்வாகத்தினரும் இதன் செயல்பாடுகளை அவ்வப்போது கவனித்து வருகின்றனர்.
இந்த இல்லத்திற்கு சென்ற வருடம் (17,டிசம்பர்,2019) எனது மாமனார் நினைவு நாள் அன்று அங்கு உள்ள தெய்வக் குழந்தைகளுக்கு பசியாற்றும் நிகழ்விற்காக செல்ல நேர்ந்தது.
தயவு திரு முருகன் ஐயா எளிமையானவர்.அடிப்படைத்தகுதியில் பள்ளிப்படிப்பு முடிக்காத தையல் கலைஞர்!
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து இந்த குழந்தைகளுக்கான இயற்கை உபாதைகள் நீங்க, சுத்தம் செய்து ( சில குழந்தைகள் நினைவின்றி படுக்கையில் மலஜலம் கழித்திருப்பர்)குளிப்பாட்டி உணவு ஊட்டும் செயல்கள் வரை இவரும் இவர் துணைவி & இவர் தம்பி குடும்பத்தினரும் சேர்ந்து செய்து வருகின்றனர்.
*இவ்வளவு பெரிய சேவை மனப்பான்மை இறைவன் திருவருள் சம்மதமின்றி நிறைவேறாது.*
இந்த இல்லத்திற்கு தேவையான (infrastructures)
கட்டுமானங்களை தேனி மாவட்டத்தில் உள்ள தயவாளர்கள் செய்து கொடுத்துள்ளனர். கொடுத்து வருகின்றனர்!
*ஆனால் அன்றாடப் பசி நீக்குதல் என்று வரும் பொழுது இவர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.*
கருணை உள்ளம் படைத்தோர் அரிசி, காய்கள், பணம் சிறிய அளவில் கொடுத்து வருகின்றனர்.
அரசு சார்பில் எந்த உதவியும் கிடைப்பதில்லை.
மற்ற ஆதரவற்றோர் இல்லங்கள்/நிறுவனங்கள் போல் ஐயா அவர்கள் பெரிதாக விளம்பரம் செய்யாமல் இருப்பதால் வெளியூர், மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து நிதி உதவி அவ்வளவாக கிடைப்பதில்லை.
*பிறந்தநாள், திருமண நாள்,நினைவு நாள் போன்ற நிகழ்வுகளுக்காக அன்பர்கள் அளிக்கும் " சிறப்பான உணவு" மட்டுமே அவர்களுக்கு விருந்து.*
மற்ற வேளைகளில் இருப்பதைக் கொண்டும் விருந்துகளில் மீதமான உணவுகளையும் உண்டு பசியாற்றி வருகின்றனர்.
நிற்க!
*இந்த இல்லத்தை விட்டு விடை பெறும் போது ஐயா அவர்களிடம்*
*"அருட்பெருஞ்ஜோதி" மகா மந்திரத்தை தினமும் குழந்தைகள் உச்சரிக்கும் படி அவர்களுக்கு எழுதிக் கொடுத்து வந்தேன்!* ஏனெனில் தன்னலம் கருதாது இவ்வளவு பெரிய கருணை நிறைந்த சேவைகளை எல்லாம் வல்லவர் திருவருள் சம்மதமின்றி நடைமுறைப் படுத்த இயலாது.
*மேலும் ஐயா அவர்களிடம் தயவு செய்து குழந்தைகளுக்கு எவ்விதத்திலும் அசைவு உணவு கொடுக்க வேண்டாம் என்றும் அதன் காரணத்தையும்* *தயவுடன் கூறி வந்தேன். மற்றொரு அன்பரும் இதன் காரணத்தைக் கூறியதால் ஐயா அவர்கள் உடனே ஏற்றுக் கொண்டார்.* *அதேபோல் சைவ உணவுகள் மட்டுமே கொடுத்து வருகிறார். வெளியில் இருந்து வரும் அசைவ உணவுகளையும் தவிர்த்து விடுகிறார்.*
*இந்த நிலையில் தற்போது நிலவி வரும் " கொரோனா ஊரடங்கு மற்றும் பேரிடரால் இந்த இல்லத்தில் உள்ளோரின் பசிப்பிணி எங்கள் " வள்ளலார் கருணைக் குழு" கவனத்திற்கு வந்தது.*
எங்கள் குழுவில் இருந்து ₹5000/ (ஏப்ரல் மாதம்) அனுப்பிவைத்தோம்.
*குழுவில் உள்ள தயவாளர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவி வந்தனர்.*
ஒருமாத காலம் ஊரடங்கு என்ற நிலை மாறி நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் ஊரடங்கு முடியவில்லை!
*இதற்கிடையே,*
சென்ற மாதம் முதல் அரசு மருத்துவர் இரமேஷ் என்பவர் தன்னார்வத்துடன் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து நலிவுற்ற குழந்தைகளுக்கு வேண்டிய சத்து மாத்திரைகள் இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மனோஜ் குமார் என்ற (physio therapist) முடநீக்க வல்லுநர் ,இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
*இந்த மருத்துவப் பணிக்கான செலவுகளில் விழுப்புரத்தில் உள்ள தயவாளர் திரு ஆனந்த் ஐயா அவர்களின் பங்கு அளப்பரியது.*
முட நீக்க மருத்துவத்திற்கான தனி கட்டிடம் ( Physio therapy hall) நிறைவேறும் பணியில் பெரிய அளவில் நிதிஅளித்துள்ளார்.
மருத்துவஉபகரணங்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த மருத்துவப் பணிகள் தொடர்ந்து செயல்பட மருத்துவருக்கும்
முடநீக்க வல்லுநருக்கான மாதாந்திர சம்பளத்தின் பெருந்தொகையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
*15 ஆண்டுகளில் நடந்த பெரிய மாற்றம் என்று திரு முருகன் ஐயா எனக்கு அலைபேசியில் கூறினார்.*
*அதேசமயம் சமீபத்தில் உணவு பற்றாக்குறையால் இல்லத்தில் உள்ளோர் ஒரு நாள் பசியுடன் இருந்ததை கம்பம் சன்மார்க்க சங்கத்தில் உள்ள தயவு திரு கோபால் ஐயா மூலம் தான் அறிய நேர்ந்தது. தயுவு திரு கோபால் ஐயாவும் அவர்கள் நண்பர்களும் சேர்ந்து அரிசி & பணம் கொடுத்து உதவி உள்ளனர்.*
*இமேஜ் மனநலம் குன்றிய* *ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தின் மீது*
*நம் வள்ளல் பெருமான் அவர்களின் கருணை நிறைந்த பார்வை பதிந்துள்ளது.*
*காரணம் தன்னிலை அறியாத விசித்திர* *தெய்வக் குழந்தைகள்*
*"அருட்பெருஞ்ஜோதி" மகா மந்திரம் கூறி வருகின்றனர்!*
*சைவ உணவிற்கு மாறி உள்ளனர்.*
சன்மார்க்கத்தில் உள்ள தயவாளர்களிடமும் மற்றைய கருணை உள்ளங்களிடமும் அடியேன் சாற்றும் தாழ்மையான விண்ணப்பம்
*இமேஜ் மனநலம் குன்றிய* *ஆதரவற்றோர்களுக்கான இல்லத்தில் உள்ள தெய்வக் குழந்தைகள் எப்போதும் பசிப்பிணி இன்றி இருக்க*
*தங்களால் இயன்ற பொருளுதவியோ சிறு அளவில் பண உதவியோ அளித்து* *ஜீவகாருண்யத்தை பாகம் செய்து கொள்ளும்படி தங்கள் பாதங்களை*
*வள்ளல் பெருமானின் திவ்யத் திருவடிகளாகக் கருதி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.*
நீங்கள் வழங்கும் சிறு உதவி கூட இந்தப் பேரிடர் காலத்தில் பேருதவியாக இருக்கும்.
தற்போது மேற்படி இல்லத்தில் 70 தெய்வக் குழந்தைகளும் முருகன் ஐயா & அவர் தம்பி குடும்பத்தினர்(4 நபர்கள்) மற்றும் துணை ஊழியர்கள் ஐந்து பேரும் உள்ளனர்.
தயவு திரு முருகன் ஐயா அவர்களின் அலைபேசி
9944036874
வங்கிக் கணக்கு
Account Name :Correspondent Image special school
Account Number :880173661
IFSC Code :IDIB000T016
INDIAN BANK
THEVARAM BRANCH
சுதர்சன்
மதுரை- திருமங்கலம்
Comments
Post a Comment