தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்*

 



*தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும்  ஆரோக்கிய நன்மைகள்* 


1 தினை அரிசியில் உள்ள சத்துக்கள்


2  தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்


3. அதிக அளவு நார்ச்சத்து


4.உடல் எடை குறைக்க உதவும்


5.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்.


6. புரத சத்து நிறைந்தது


7.பீட்டா கரோட்டின் நிறைந்தது


8. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது


9. வலிமையான எலும்புகள்


*தினை அரிசி,  சிறு தானிய வகைகளில் மிக முக்கியமான ஒன்று ஆகும்.* இதனை உண்பதால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.இதனை சீனா மற்றும் இந்தியா நாடுகளில் மிக அதிக அளவு பயிரிடப்படுகின்றது. இப்பொழுது நாம் தினமும் தினை அரிசி உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம்.


*தினை அரிசியில் உள்ள சத்துக்கள்*


தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்து, இரும்புசத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.


*தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்*


தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம்.


1. அதிக அளவு நார்ச்சத்து

தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.


2.உடல் எடை குறைக்க உதவும்

தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரலாம்.


தொப்பையினை குறைக்க பெரிதும் உதவுகிறது


3.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்

தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.


4. புரத சத்து நிறைந்தது

தினை அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.


5. பீட்டா கரோட்டின் நிறைந்தது

தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள். 


6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது

தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்கள் உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசியை உட் கொள்ளுங்கள்.


7. வலிமையான எலும்புகள் ஏற்பட

கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.


இவ்வளவு நன்மைகள் தினை அரிசி போன்ற சிறுதானியங்களில் அதிக அளவில் உள்ளதால் அரிசி போன்ற தானியங்களை தவிர்த்து சிறுதானியங்களை உண்டு வாருங்கள் . 


1 kg 94 rs only..... Contact 9597299959......Ramya .....Tirupur.....

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது