மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை 'ஊறுகாய் அம்மையார்' என ஜாதிய துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையில் கேவலப்படுத்தி பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்...
#பிராமண_துவேஷம்_என்னும்_வெறுப்பு_அரசியல்
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை 'ஊறுகாய் அம்மையார்' என ஜாதிய துவேஷத்தை வெளிப்படுத்தும் வகையில் கேவலப்படுத்தி பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்...
தான் வகித்த பதவியின் மாண்பை குலைக்கும் வகையில் அமைந்திருக்கிறது அவரது பேச்சு...
நாட்டிற்காக இரவு பகல் பாராது அயராது உழைப்பதைத் தவிர நிர்மலா சீதாராமன் ஜி வேறு எந்த தவறும் செய்ததாக நமக்குத் தெரியவில்லை...
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவமானப்படுத்தி பேசலாம் என்று ஆகிவிட்டது...
எந்த ஒரு ஹிந்து சமுதாய பிரிவை போல பிராமண சமூகமும் இந்து மதத்தின் பிரிக்க முடியாத அங்கமே...
பாண்டவர்களோ, மூவேந்தர்களோ, சந்திர குப்தரோ, வீர சிவாஜியோ, விஜயநகரப் அரசர்களோ எந்த ஒரு ஹிந்து அரசராக இருந்தாலும் அவர்களுக்கு ராஜகுருவாக இருந்து வழிநடத்தியது பிராமணர்களே...
ஆரிய-திராவிட கட்டுக்கதையை நாம் நிச்சயமாக ஏற்கவில்லை...
அப்படியே ஒருவேளை நாம் திராவிடர்களாக இருந்தாலும்கூட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட பிராமணர்கள் அனைவருக்கும் திராவிடர்களே...
உண்மையாக கூறவேண்டுமென்றால் திராவிடம் என்ற வார்த்தையை பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வந்தவர்கள் பிராமணர்களே...
வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் பஞ்ச திராவிட பிராமணர் என்ற பக்கத்தை பார்க்கவும்..
இப்படி இருக்கையில் இந்து சமயத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் தென்னிந்திய பிராமணர்களை வட இந்தியர்களாக கதை கட்டி மாபெரும் சமூக அநீதியை ஒரு கூட்டம் திராவிடம் என்ற கருத்தியலின் அடிப்படையில் செய்து வருகிறது...
எங்கிருந்தோ வந்து நமது நாட்டின் மீது படையெடுத்து நம்மை அடிமைகளாக்கி, அடக்கி ஆண்டு, கொடுமைப்படுத்தி, மதமாற்றம் செய்து, நமது சொத்துக்களை கொள்ளையடித்து அட்டூழியம் செய்தவர்களின் பரம்பரையினரை ஹிந்துக்களின் தொப்புள்கொடி உறவு என்கிறார்கள்...
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடையே வாழ்ந்து வருகிற பிராமணர்கள் வந்தேறிகளாம்...
ஹிட்லர் எப்படி ஜெர்மனியில் தனது அரசியல் லாபத்திற்காக சிறுபான்மையினராக இருந்த யூத சமூகத்தின் மீது வெறுப்புணர்வை பரப்பி நாசிசம் என்ற ஒரு வெறுப்பு அரசியலை செய்து வந்தாரோ அதே வேலையை தான் இங்கே திராவிடம் என்ற நச்சுக் கருத்தியல் நீண்ட காலமாக செய்து வருகிறது...
நிர்மலா சீதாராமன் என்ற ஒரு தமிழரின் திறமையை உணர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவின் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரிய பதவியை வழங்கி திரு நரேந்திர மோடி கௌரவித்திருக்கிறார்...
அப்படிப்பட்ட பெருமைக்குரிய ஒரு தமிழரை நாம் போற்றி கொண்டாடா விட்டாலும் பரவாயில்லை தமிழரான நாமே அவரை ஜாதி ரீதியாக தூற்றி அவமானப் படுத்தாமல் இருக்கலாம் இல்லையா...
ஆனால் இப்படிப்பட்ட தூற்றுதல்கள் எவையும் பிராமணர்களை பாதிக்கவில்லை என்பது உண்மை...
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழிக்கேற்ப எப்படி பசு பன்றியை கண்டால் விலகுகிறதோ அதே போல பிராமணர்கள் என்னவோ இந்த வெறுப்பு அரசியல் வாதிகளிடம் இருந்து ஒதுங்கியே தான் இருக்கின்றனர்...
உண்மையான பாதிப்பு என்னவோ தமிழ்நாட்டிற்கு தான். தமிழகம் புறக்கணித்தால் என்ன..? அமெரிக்காவும் பிற இந்திய மாநிலங்களும் அவர்களை அரவணைக்க தான் செய்கிறது. பிராமண எதிர்ப்பு என்பது இல்லாமல் இருந்திருந்தால் நிர்மலா சீதாராமன் உண்மையில் தமிழ்நாட்டில் தான் பணி செய்து கொண்டிருப்பார்...
வருடத்திற்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஊதியம் பெறும் சுந்தர் பிச்சை போன்ற பல திறமையான தமிழர்கள் அமெரிக்காவிற்க்கு போயிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...
எனவே பிராமண துவேஷத்தை பற்றி பிராமணர்கள் கவலைப்படாமல் இருந்தாலும் நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒரு காலகட்டம் இப்போது உருவாகி இருக்கிறது...
ஏனென்றால் திராவிட வெறுப்பு அரசியலின் காரணமாக நம்மிடையே இருந்திருக்க வேண்டிய ஹிந்து சகோதரர்களான பிராமணர்களை நாம் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம். பல லட்சம் தமிழக பிராமணர்கள் தமிழ்நாட்டை விட்டு சென்று விட்டனர்...
காஷ்மீரிலும் இதேபோல் அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் முஸ்லிம்களால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இன்று வரை தனது தாய் மண்ணிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...
பிராமண துவேஷம் என்பது இந்து விரோதத்தின் ஒரு பகுதியே. இனி இதுபோன்ற துவேஷ பேச்சுக்களை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது...
நமது கடுமையான கண்டனங்களை சமூக ஊடகங்கள் எங்கும் பரப்புவோம்...
அனைவரும் தயவுசெய்து இந்த பதிவை பகிரவும்...
மோடிதாசன்
Comments
Post a Comment