அழிவு நிலையில் இந்துக்களும் & ஹிந்துக் கோவில்களும் :

 






அழிவு நிலையில் இந்துக்களும் & 

ஹிந்துக் கோவில்களும் : 


ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.


ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார். 


அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது


 “இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில், 


அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஹிந்துக் கோவில்கள் எப்படி, மக்களாட்சியில், அரசாளும் அரசியல்வாதிகளால், மிகவும் நலிவடைந்து விட்டன என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார். 

    

இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள், ஹிந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார். 


இதை நாம் சொன்னால் தானே, இங்குள்ளப் “பகுத்தறிவுவாதிகள்”, திட்டுவார்கள்!. 


ஸ்டீஃபன் நேப்பை என்ன செய்து விட முடியும்? அவரது ஆராய்ச்சிக்கு, இவர்களால் ஈடு கொடுக்க முடியுமா? 


சமீப கால வரவுகளான,கிறித்தவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும், அரசின் பிடியில் சிக்கித் தவிக்க வில்லை. 


இவை சிறுபான்மை நிலையில் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன. 


ஆனால், புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட, “ஹிந்து மத மற்றும் தர்மஸ்தாபனங்கள் சட்டப்படி” (Hindu religious and charitable endownments Act)  அரசால் எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன. 


மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள், ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும், ஆகம விஷயங்களிலும், அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும், தங்கள் “மூக்கை நுழைக்க” ஆரம்பித்து விட்டனர். 


இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது. 


தெளிவாகச் சொல்வது ஸ்டீஃபன் நேப்.


அவர் , “ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும். 


அவைகளுக்கு சொத்துக்களையும், ஆபரணங்களையும், அவர்கள் தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள். 


அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை. 


இப்போது உள்ள ஜனநாயகத்தில், இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை. 


அப்படி இருக்கும் போது, தங்களுக்குக் கொஞ்சமும் உரிமை இல்லாத் இவ்விஷயத்தில் , அரசு எப்படி நுழைந்து , 


எப்படி

ஹிந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?” என்று கேட்கிறார்.. 


பகுத்தறிவுக் களஞ்சியங்கள் பதில் சொல்லலாமே!

     


ஆந்திராவில் உள்ள 43000 ஹிந்துக் கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான், இக்கோவில்களுக்கு செலவழிக்கப் படுகிறது.  


மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது. 


திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3100 கோடி ரூபாய். இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது. 


ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து, ஒரு “கால்ஃப்” மைதானம் கட்டுகிறது. 


இதைப் போல, 10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்? கேட்கிறார், ஸ்டீஃபன் நேப். பதில் சொல்லுங்கள்.

     


கர்நாடகாவில், ஹிந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில், 7 கோடியைத் தாராளமாக (!) , இக்கோவில்களின் பராமரிப்புகளுக்கு அரசு செலவிடுகிறது. 


இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், 59 கோடி, ஹஜ் யாத்திரைக்குத்  திருப்பி விடப் படுகிறது என்பது தான். 


இதில், 13 கோடி ரூபாய், சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கும் அரசு, “ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது. 


நிதி இல்லாமல், இதுவரை 50000 ஹிந்துக் கோவில்கள் மூடிக் கிடக்கின்றன.இதுவும், ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு” தான். 

     


கேரளாவில் உள்ள குருவாயூர் 

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தில், கேரள அரசு கை வைக்காத நாளே இல்லை. அங்குள்ள ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல், அனைத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். 


இப்போது உள் நுழைவு டிக்கெட்டின் இமாலய விலை பற்றி எவரும்

எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.


சபரிமலை, ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு சொந்தமான , ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்டக் காடுகளை, கிறித்தவர்களுக்குக் கொடுத்து, காட்டை அழித்து வருகிறார்கள். 


இப்போதுள்ள, “திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டைக்” ஓர் அவசரச் சட்டத்தின் மூலம்,  கலைத்து விடலாமா என்று கூட அரசு எண்ணி வருகிறது. 


இதுவும் ஒரு அமெரிக்கப் பகுத்தறிவுவாதிக் கிறிஸ்தவரின் நோக்கு தான். நிச்சயமாக, ஸ்டீஃபன் நேப் ஒரு ஹிந்து அல்ல.

     


இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது என்றும் மஹாராஷ்ட்ராவிலும் சுமார் 4 லட்சம் கோவில்கள் நலிவு அடைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் விவரிக்கிறார்.

    

 தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நானே ஹிந்து அற நிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன என்றும், கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை என்றும், மண்டபபங்களோ, மதில்களோ, திருக் குளங்களோ, கொஞ்சம் கூடப் பராமரிக்கப் படுவதில்லை என்றும், ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் முறைப்படி வழங்கப்படுவதில்லை என்றும், அரசு அதிகாரிகள், கோவில் சொத்துக்களை தங்கள் இஷ்டம் போல விற்று, வேறு காரியங்களுக்குச் செலவைப்பது பற்றியும்,  புள்ளி விவரங்களுடன் ஸ்டீஃபன் நேப் விளக்குகறார்.

     


இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில், ஹிந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்குக் காரணமாக, ஹிந்துக்களின் விழிப்புணர்வு இல்லாத நிலையும், அரசியல்வாதிகளின் கொள்ளைக்கார மனப் பான்மையும், ஊடக்ங்களின் ஹிந்து எதிர்ப்பு சதியும், முக்கியக் காரணங்களாகக் கூறுகிறார் இவ்வாசிரியர்.

     


ஹிந்துக்களே! இனியாவது விழிப்படையுங்கள். நம் ஆலயங்களில், அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.


 “பகுத்தறிவு வாதிகள்” என்று அழைத்துக் கொள்ளுபவர்கள்  பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள். 


ஒவ்வோர் ஊரிலும் ஹிந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துங்கள். தட்டிக் கேளுங்கள். 

     

 ஒரு நியாயமான கிறிஸ்தவருக்கு , 

ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியருக்கு, 


உள்ள அறிவு கொஞ்சமாவது நமக்கு வேண்டாமா? 


நம் இளைஞர்களிடம் பேசுங்கள். அவர்களை ஒற்றுமைப் படுத்துங்கள். வெற்றி நமதே!


படித்ததை நாலு பேருக்கு தெரிந்தால் நல்லது என்று இங்கேயும் பகிர்ந்து இருக்கிறேன்..... 


இன்னும் நிறைய பேருக்கு தெரிய வேண்டும் என்றால் copy and paste செய்து பகிருங்கள்.....

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*