நான் ஏன் இந்துதர்மத்திற்குத் திரும்பினேன்? - கேஷவ் ஃபுல்ப்ரூக் (அமெரிக்கர்)
நான் ஏன் இந்துதர்மத்திற்குத் திரும்பினேன்?
- கேஷவ் ஃபுல்ப்ரூக் (அமெரிக்கர்)
வணக்கம். என் இயற்பெயர் ப்ரண்டன் ஃபுல்ப்ரூக் ஆகும். நான் ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வீகாஸில் பிறந்தேன். நான் ஒரு கிறித்துவராகப் பிறந்தேன். எனினும், கிறித்துவ மதநம்பிக்கை எனக்கு போதியதாக தோன்றவில்லை. எனவே, எனது 13-ஆம் வயதில் கிறித்துவத்தை விட்டு வெளியேறினேன்.
எனக்கு தெரியும் அது முழுமையற்ற ஒரு மதம் என்று.. கடவுள் ஒரு மனிதர், அவர் வானில் ஒரு நீதிபதி போல் இருந்து கொண்டு மனிதர்களை ஆட்சி செய்வது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த மனிதரை நம்பாவிட்டால் பெரும்பாவி ஆகி நரகத்திற்குச் செல்வார்கள் என்று கூறுவதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
எனக்கு கண்டிப்பாக புரிந்தது, இறைவன் இருக்கிறார்...ஆனால் அவரை அடையும் வழி கிறித்துவம் இல்லை என்று. எனவே, நான் இந்திய சமயங்களை நாட துவங்கினேன். முதலில் நான் பௌத்த சமயத்தை தான் நாடினேன். நெடு நாட்களாக பௌத்த சமயத்தை ஆராய்ந்தேன். எனினும், எனக்கு பௌத்த சமயத்திலும் குறைகள் தோன்றியது.. எனவே, மெய்யுணர்வாகிய இறைவனின் அருளை தேடி மேலும் என் பயணத்தை தொடர்ந்தேன்.
எனது 19-ஆம் வயதில் அனுபம் கோயல் (Anupham Ghoyal) எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் எனது விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டேன். அவர் தான் எனக்கு பகவத் கீதையை அறிமுகப்படுத்தினார். அவர் சில காலங்கள் தான் என்னோடு படித்தார். ஆனால், அவரைப் போன்ற ஓர் அமைதியான, பொறுமையான, நற்குணம் படைத்த மனிதர் கிடைப்பது அரிது. அவரின் நற்குணங்கள் என்னை உண்மையில் கவர்ந்தன. அவரின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தெய்வீகமான, சாந்தமான, ஓர் உன்னதமான வாழ்வு என்றே சொல்லலாம். தியானங்கள் செய்வதும் ஒழுக்கமாக வாழ்வதும், யாரிடமும் நான் காணாத அரிய பண்புகளை அவர் கொண்டிருந்தார்.
பௌத்த மதத்தில் தெய்வீகம் அரிதாக இருந்தது. ஆனால், இந்து சமயத்தில் கடல் போல எண்ணற்ற வழிகாட்டல்கள் இருக்கின்றன. எனக்கு தேவைபட்டதை விட மிகுதியாக இருந்தன. இறைவனை அடைய ஒரு முழுமையான பாதை என்றே சொல்வேன். இந்து சமயம் என்னை ஒரு படிநிலையில் இருந்து மற்றொரு படிநிலைக்கு அழகாக இட்டுச் சென்றது. ஒவ்வொரு படிநிலையிலும் என்னை பண்புள்ளவனாக, இறையருள் உள்ளவனாக, ஒழுக்கமான, தத்துவ ஞானியாக அமைத்தது.
இந்து சமயத்தில் எனக்கு மிகவும் பிடித்த பலவற்றில் முக்கியமானது ‘அன்பே சிவம்’ ஆகும்.. ஆம் நான் சிவபெருமானின் பக்தன். அன்பு தான் சிவம், சிவம் தான் அன்பு.. என்னவொரு அருமையான தத்துவம். அன்பே சிவம் என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் போதெல்லாம் என் உள்ளம் உருகும். ”அன்பே சிவமயம், சத்யமே பரமசிவம்”... அன்பை விட உலகில் உயர்ந்தது எது? அன்பு தான் இறைவன் என்று இந்து சமயம் தான் சொல்கிறது. எனவே, பரம்பொருளான சிவனைப் போல் இந்து சமயமும் என்னைக் கவர்கொண்டது. இதனால் தமிழ் மொழி மீதும் எனக்கு ஈடுபாடு உண்டானதுக்ஷ
உருவமற்ற பரம்பொருள்... அவரின் அம்சமே எல்லாம்..அவரே அன்பு.. அவரே எல்லாம். நான் தமிழனாக பிறக்கவிட்டாலும், இன்று நான் தமிழ்மொழி பேசுகிறேன். நான் தமிழனாக வாழ விரும்புகிறேன். எல்லோரிடமும் வணக்கம் நன்றி என்று தமிழில் உச்சரிக்கிறேன். அதற்கு காரணம் சிவனின் திருவருள் தான். இந்து சமயத்தின் மீது கொண்ட அதிக ஈடுபாட்டினால் நான் தமிழ்மொழி கற்றுக் கொண்டேன். என் ஆசையெல்லாம் இங்கு ஐக்கிய அமெரிக்காவில் எனக்கு ஒரு குரு கிடைக்க வேண்டும். அவரிடம் நான் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு என் மிக்க நன்றி. அன்பே சிவம்.
Thank you, Keshav Fullbrook🙏🙏
Comments
Post a Comment