*மனித உரிமைகளின் வகைகள்*

 



*மனித உரிமைகளின் வகைகள்*


*எஸ்,முருகேசன்*



*மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.*


சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது "எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் "மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.


மனித உரிமைகளின் வகைகள்


மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.


குடிமையியல் உரிமைகள்அரசியல் உரிமைகள்பொருளாதார உரிமைகள்சமூக உரிமைகள்கலாச்சார உரிமைகள்


மனித உரிமைக் கல்வி - தனி மனிதருக்கு உரிய உரிமைகள்


குடிமை உரிமைகள் (Civil Rights)உயிர் வாழ்வதற்கான உரிமைசட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமைதேசிய இனத்திற்கான உரிமைநீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமைவெளிப்படையான விசாரணைக்கான உரிமைகுற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை


(இலவச) சட்ட உதவிக்கான உரிமை


குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமைஉறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை


மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை


மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமைதனது வீட்டில் தனியாக இருக்க உரிமைதன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை


நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை


நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமைதன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமைஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமைஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான உரிமை


அரசியல் உரிமைகள்


கருத்துகளை வெளியிட உரிமைகூட்டம் கூடுவதற்கான உரிமைசங்கமாகச் சேருவதற்கான உரிமைவாக்களிப்பதற்கான உரிமைஅரசியல் பங்கேற்புகான உரிமைபொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை


பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்


வேலைக்கான உரிமைவேலையைத் தெரிவு செய்யும் உரிமைசொத்து வைத்திருப்பதற்கான உரிமைபோதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமைகல்வி பெறுவதற்கான உரிமைசமூகப் பாதுகாப்புக்கான உரிமைஆயுள் காப்பீட்டுக்கான உரிமைசமூக, மருத்துவ உதவி பெறும் உரிமைஅறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமைசுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை


குழுக்களின் உரிமைகள்


சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமைதொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை


போராட்ட உரிமை


பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமைபதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமைவேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமைசம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமைநியாயமான ஊதியத்திற்கான உரிமைவரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)


பெண்களுக்கான உரிமைகள்


சம ஊதியம் பெறுவதற்கான உரிமைபாலியல் சமத்துவத்திற்கான உரிமைதம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமைசுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமைகர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமைகுழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்


கல்விப் பெறுவதற்கான உரிமை


தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமைகைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமைமரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமைசித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமைவேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமைவிளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமைசமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை


சிறைக்கைதிகளின் உரிமைகள்


சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமைசிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமைசிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமைபோதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத் தேவையான வசதிகளுக்கான உரிமைதுணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை


பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை


கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமைஅதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமைகுடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத் தொடர்பு, நேர்காணல் மூலம்)வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமைசிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை


மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை


சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமைபெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை


*FORWARD MESSAGE*

*என்றும் அன்புடன்,*


*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*

*மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்*

*அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து-(ABGP)*

*(ALL INDIA CONSUMER PROTECTION MOVEMENT)*

*REGD NO.S-9194/1974 DELHI*

*மதுரை*👈🇮🇳🚀🌍

*வாட்ஸ் ஆப் எண்கள்*

*9842171532*

*9444771532*🌺🌻🌹

*முகநூல்: SMS KING SK*


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்