மகத்துவம் நிறைந்த பிரம்ம முகூர்த்தம் ! லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!

 




மகத்துவம் நிறைந்த பிரம்ம முகூர்த்தம் !


லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!


பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.


மனதின் பிரச்னைகளை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.


படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கி விட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மா வின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்க வேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்த வேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ.. சிவபெருமா னும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..

                                              

பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.


இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ.. முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.


பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைப்பவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.


சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள்  வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.


 சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.


பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.


 சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.


 பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். 


காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!


எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.


எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.


இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.


நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத் தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.


உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.


மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பி ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.


அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.


இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.


அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின் றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.


எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு. இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.


தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். 


பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது.

                           

அதிகாலையில் சூரிய  வெப்பம் கிடையாது. சந்திரனு டைய வெப்பதட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது. பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.


இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.


உபாசனைக்கு காலையில் பிரம்ம மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத் தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

                                              

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக,கரணம் தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். நாமும் நாளும் நல்லதே செய்து நன்மை பெறுவோம்!


லோகாஸ் சமஸ்தான் சுகினோ பவந்து!

--------------------------------------------------------------


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்