மனம் லேசாக உள்ளது ஸ்ரீரங்கநாதா. காரணம் தெரியவில்லை. பிறருக்காக நான் உன்னிடம் கையேந்தி இருக்கிறேன். அவர்களை பிறர் என்று நான் எண்ணவில்லை.. உலகத்தின் உயிர்கள் அனைத்தும் உன் படைப்பு எனில்.. நான் எப்படி அவர்களை வேறு மனிதர்கள் என்று எண்ணுவது..

 










மனம் லேசாக உள்ளது ஸ்ரீரங்கநாதா.

காரணம் தெரியவில்லை.

பிறருக்காக நான் உன்னிடம் கையேந்தி இருக்கிறேன்.

அவர்களை பிறர் என்று நான் எண்ணவில்லை..

உலகத்தின் உயிர்கள் அனைத்தும் உன்  படைப்பு எனில்..

நான் எப்படி அவர்களை வேறு மனிதர்கள் என்று எண்ணுவது..


என் ரங்கனின் சொந்தம் என் சொந்தம் அல்லவா..


பிறர் படும் துயரம் தாள வில்லை என்னால்..

யார் எப்படி போனால் எனக்கென்ன என்று என்னால் இருக்க முடியவில்லை கண்ணா..


இதேபோல் உன்னால் இருக்க முடியுமா?

யாரோ ஒரு மனிதன் தானே இவன் எப்படி போனால் என்ன என்று உன்னால் இருக்க முடியுமா..

முடியாதல்லவா.


ஏன் கண்ணா..

உலகத்தின் உயிர்கள் அனைத்தும் உன் சொந்தமாக நீ எண்ணுவதால்..


நான் உன் சொந்தம்..

நீ என் சொந்தம்.

அப்படியாயின் ஒவ்வொரு மனிதனும் நான் மதிக்கப்பட வேண்டியவன் அல்லவா..


அவர்களை நான் இகழ்ந்தால்..

உன்னைஇகழ்வதற்கு சமம் அல்லவா..


வேற்று மனிதன் என்று எண்ணம் வரவில்லை கண்ணா..

உன் பிள்ளை என்றே எண்ணத் தோன்றுகிறது.


நான் உன்னுடைய முதல் பிள்ளை.

மற்றவர்கள் உன்னுடைய குட்டி பிள்ளை.


எப்படி அவர்களை வேற்றுமனிதனாக எண்ண முடியும்..


உன்னிடம் நான் எதையும் கேட்டதில்லை கண்ணா..

நானே வந்து கேட்கிறேன் என்றால்.

தயங்காமல் நீ தருவாய் தானே..


இதுவரை அப்படித் தானே தந்திருக்கிறாய்.

இப்போதும் அப்படியே தந்துவிடு கண்ணா..


எனக்கென்று வேறு ஒன்றும் வேண்டாம்.

உன் மக்கள் துயரப் படுவது ஒருவேளை நீ அறியாது இருக்கலாம் அல்லவா.


அதை நினைவூட்ட தான் நான் வந்தேன்.

நினைவூட்டி விட்டேன்.

நல்லது செய் கண்ணா.

வேறொன்றும் வேண்டாம்.


எனக்கென்று ஏதாவது கேட்டே ஆக வேண்டுமா..

நான் உன்னில் இணைந்து வருடங்கள் ஆகிறது கண்ணா..


எனக்கென்று தனி எண்ணம் இல்லை.

எனக்கென்று தனி சிந்தனை இல்லை.


என் வழி வேறு உன் வழி  வேறு அல்ல கண்ணா.


நீயும் நானும் இணைந்து நடப்பது நமது அன்றி வேறு யாரும் அறிந்திலர்..


நீ வந்து என்னில் இணைந்ததால் அல்லவோ

என் இதயமும் இதழ்களும் புன்னகையில் மிளிர்கிறது..


நான் சொல்லி நீ தட்டுவது என்பது இனி கிடையாது கண்ணா.

நானே நீ என்றான பின்.

நீயே நான் என்றான பின்.

பிரிவு என்று ஒன்று இல்லை.


நான் கேட்டதை நீ தந்துவிடு.

மக்கள் நலம் வாழ செய்துவிடு.


வழக்கம் போல் நீயும் நானும் சந்தோஷமாக இணை பிரியாது இருப்போம்

சரிதானா..

ஸ்ரீரங்கநாதா நீயே கதி ஐயா 🙏🙏🙏


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai