ஆதிகாலம் தொட்டே ஸ்ரீரங்கம் பில்லி சூனியங்களுக்கு பேர் போனது. ஆசார்யர்கள் க்ரந்தத்திலே கேரளத்திலிருந்து ஒருவன் கோவிலுக்கு செய்வினை வைக்க வந்ததாக ஒரு சரித்திரம் உண்டு.

 








ஆதிகாலம் தொட்டே ஸ்ரீரங்கம் பில்லி சூனியங்களுக்கு பேர் போனது. ஆசார்யர்கள் க்ரந்தத்திலே கேரளத்திலிருந்து ஒருவன் கோவிலுக்கு செய்வினை வைக்க வந்ததாக ஒரு சரித்திரம் உண்டு. 


அப்படி "முக்கியமானவர்கள்" வரும் பொழுது அவர்களை ஒரு வழியாக ஆக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சில "மரியாதைகளை" செய்வார்கள்.


பெருமாளின் தங்க குடம்தானே, பூர்ண கும்ப மரியாதைதானே என்று அதை தொட்டு வாங்கினால், அப்படி வாங்கியவர்களின் கதி என்ன ஆயிற்று என்று நமக்கு தெரியும்.


பெருமானின் பொருட்கள் அவருக்கு மட்டுமே உரியதானது. அதை எந்த மனிதருக்காகவும் எடுப்பது கூடாது. அப்படி எடுத்து கொடுத்தால் அதை கொடுத்தவர்க்கு மட்டுமல்ல அதை வாங்கியவர்களுக்கும் ஆபத்துதான்.


தமிழக முதல்வர் நாளை ஸ்ரீரங்கம் வருகிறாராம். ஏற்கனவே இந்த ஆட்சியை கவிழ்க்க கோவிலில் ஆகம் விரோத செயல்கள் கோடிக்கணக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாட்டின் முக்கியஸ்தரான முதல்வர் வரும் பொழுது அவருக்கு பெருமாளின் தங்க குடத்தை எடுத்து கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக கேள்விப்பட்டேன்!! 


ஆகமங்களில் அதில் சொல்லப்பட்டதற்கு மாறாக நிகழ்வுகள் நடக்குமானால், ராஜ ராஷ்ட்ர விநஷ்யதி என்று ராஜாவும், ராஜ்யத்திலிருக்கும் மக்களும் துன்பத்துக்குள்ளாவார்கள் என்று சொல்கின்றன.  


வீரசோழபுரத்தில் சிவன் சொத்தை அபகரிக்க தவறான வழிகாட்டுதலால், சிவன் சொத்து குல நாசம் என்கிறபடி ஆயிற்று. இப்பொழுது அரங்கன் சொத்து. இதை தொட்டாலும் கூட நாசமே!


என்ன செய்வது. அவரவர் விதிவழி அடைய நின்றனரே!


ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

@@@@@

பெருமாளின் தங்க குடத்தை தொட்டால் மோக்ஷம் கிட்டும் என்று சொன்னால் ஒரு பய தொடுவான் என்று நினைக்கிறீர்களா என்ன? 


இன்னும் 1000 ஆண்டுகள் வாழப்போவதாக நினைத்துக் கொண்டு தன்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று மமதையில் வாழ்ந்த ஹிரண்யகசிபுக்களுக்கு எத்தனை முறை பாடம் சொன்னாலும் புரியவா போகின்றது?


அவரவர் விதிவழி அடைய நின்றனரே! நம்மால் எச்சரிக்க மட்டுமே முடியும்! கேட்பதும் கேட்காததும் அவரவர் தலையெழுத்து


ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

@@@@@@

தங்கக்குடம் எடுக்கப்படவில்லை. ஆனால் ஊராருக்கு தீர்த்தம் சடாரி இல்லாத போது தனக்கு மட்டு ம் தீர்த்தம் சடாரி வாங்கிக் கொள்வதனால், ஏதோ பகவான் தனக்கு விசேஷ கடாக்ஷம் செய்துவிடுவானா என்ன? 


யாருக்கும் தெரியாமல் செய்யப்படும் திருட்டு பாவம் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயே தண்டனைக்குறிய குற்றம்.


ஏராளமான தாய்மார்களின் சாபத்தை பெற்றுக் கொள்ளும் செயல். 


தமிழ்நாட்டில்தான் எல்லோருக்கும் ஒரே நீதி என்ற மனுநீதி சோழன் பிறந்தான். ஊருக்கு தடை விதித்து தான் மட்டும் அதை பெற்றுக் கொள்ளும் இவர்களும் இங்கேதான் பிறந்துள்ளார்கள்.


நல்லவர்களுக்கு நன்மையும் தீயவர்களுக்கு தீமையும் கிடைக்குமாறு செய்வது எம்பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று.


மனுநீதிசோழன் என்கிற பெயரை சொல்ல கூட பயந்து சமநீதி சோழன் என்று மாற்றிவைத்த தைரியசாலிகளின் கோழை செயல் அப்படித்தானே இருக்கும். 


இப்படிப்பட்ட சுயநலவாதி தலைவனிடம் போய் முறையிடுவதும் பாவமே! அப்படிப்பட்டவர்கள் இருக்க வேண்டிய இடத்தை இன்னும் சில நாட்களில் தேர்தலின் போது காட்டவேண்டும்.


எந்தவித அறிவியல் அடிப்படையில்லாமல் கோவிலில் வழிபாட்டு விஷயங்களை தடை செய்து கொண்டிருக்கும் அரசின் போக்கை இவ்வுலகம் ஏற்றாலும் பெருமான் என்றுமே ஏற்கமாட்டான்.


தினமும் கோவிலுக்கு சென்று தீர்த்த பிரசாதங்கள் கிடைக்காமல் திரும்பும் ஒவ்வொரு பக்தரும் கொடுக்கும் சாபத்தினை சம்பாதித்துக் கொண்டு வாழ்வதும் ஒரு வாழ்வா!! இதன் முடிவு எப்படி இருக்குமோ!!


அவரவர் விதிவழி அடைய நின்றனரே!


ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

@@@@@@@@@@@

அரைகிறுக்கனை நிர்வாகம் செய்ய வைத்தால் முழு கிறுக்குத்தனம் தானே செய்வான்!!! 


ஸ்ரீரங்க கோவில் நிர்வாகம் இன்று பெருமாள் கர்பக்ருஹதின் முன்பு இருக்கும் "அமுது பாரை" என்று சொல்லப்படும் பாரைக்கு செப்பு கவசம் போட்டுள்ளது.


எதை எங்கு எப்படி எதற்கு என்ற எண்ணம் கிறுக்கர்களுக்கு வராது. தன் இஷ்டத்திற்கு இடம் பொருள் ஏவல் தெரியாமல் செய்யும் சுபாவம் கிறுக்கர்களுக்கு உண்டு.


அமுது பாரை என்பது, பெருமாளுக்கு வரும் அமுதை அங்கே இறக்கிவைத்து அங்கிருந்து பெருமானுக்கு அதை அளிக்கும் பொருட்டு இருக்கும் இடம். பெருமானுக்கு வரும் அமுது நெய், எண்ணை என்று பல வழுக்கும் பதார்த்தங்களால் தயாராக்கப்படுபவை.


அப்படிப்பட்ட நெய் வெண்ணை முதலியவற்றை கொண்ட பிரசாதங்கள் எளிதில் சுத்தம் செய்யவும், ஆசாரத்தின் அடிப்படையிலும் அது "பாரை"யாக அன்று அமைத்தனர்.


பெருமானின் விமானத்திற்கு தங்கம் வேய்ந்தவர்களுக்கு தெரியாதா அவர் சன்னதி முன்பிருக்கும் அமுது பாரைக்கு தங்கத்தால் பூண்போட!! ஆனால் அவர்கள் கிறுக்கர்கள் இல்லை அல்லவா? 


அங்கே பெருமானை புறப்பாடு செய்யும் சமயத்தில் பெருமானை தாங்கும் ஸ்ரீபாதம்தாங்கிகள் கால்கள் வழுக்காமல் இருக்கவும், அங்கே ஏராளமான ஜனங்கள் பெருமானை சேவிக்க வரும் பொழுது அவர்கள் உடல்களிலிருந்து விழும் கேசம், வியர்வை முதலிய அழுக்குகள் தங்காமல் இருக்கவும் பாரையை அன்று அமைத்தனர்.


ஆசாரத்திற்கு குறைவில்லாமலும் பாரை உள்ளது.


ஆனால் இந்த படத்தில் இருப்பது போலே ஏதோ ஒரு அதி மேதாவி தன் "கலை" திறத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று பள்ளம் மேடு உள்ள ஒரு பித்தளை தகடை கொண்டு பூண் செய்து போட்டுள்ளது.


இத மேல் பலர் நின்று கொண்டிருப்பர். அவர்கள் கால்களிலிருக்கும் அழுக்கும் அந்த சந்திலே பூந்து கொள்ளும். அதை துடைப்பது எளிதல்ல. நித்யபடி 6 கால பூஜையின் முன் ஒவ்வொரு இடுக்கையும் தண்ணீரை கொட்டி கழுவி விடுவது என்பது இயலாத காரியம் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஏதோ ஒரு கிறுக்கன் உபயமளிக்கிறேன் என்று சொன்னதால் இதை இங்கே போட்டுள்ளனர் இந்த கோவில் நிர்வாக கிறுக்கர்கள்.


ஆனால் ஒன்று பெருமாளுக்கு அமுது செய்தால்தானே நெய் வெண்ணெய் எல்லாம் வரப்போகிறது. அதைத்தான் இங்கே நிருத்தி பல வருடங்கள் ஆகிவிட்டனவே. அதனால் இங்கே ஆசாரமிருந்தால் என்ன, சுத்தம் இருந்தால் என்ன, என்ன இருந்தால் என்ன?


இன்று பித்தளையில் போட்டால்தானே நாளை அதை எடுத்துவிட்டு மற்றொரு கிறுக்கன் வெள்ளியிலே போடுவான். அடுத்த நாள் மற்றொரு கிறுக்கு பணக்காரன் அதை பிய்த்து எறிந்துவிட்டு தங்கத்திலே போடுவான். யார் வீட்டு பணம். போட்டு தள்ளு என்ற கணக்கில் கோவிலை குப்பையாக ஆக்கும் பணியை வெகு சிறப்பாக இந்த கோவில் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது.


கேட்பாரில்லை என்றால் இப்படித்தானே பிசாசுகள் தலைவிரித்து ஆடும். நாம் கேட்காமல் இருப்பதன் ஆபத்தை விரைவில் நாம் அனுபவித்தே தீருவோம்.


இப்படி வழுக்கும் தன்மையுடைய ஒரு உலோகத்தை அங்கே போட்டு அதிலே பெருமாளை புறப்பாடு செய்யும் காலத்தில் என்று இவர்கள் பெருமாளை கீழே போடப்போகிறார்களோ என்ற அச்சமே நமக்கு மிஞ்சுகிறது.


தன்மானமில்லாத அர்ச்சகர்களும், ஸ்ரீபாதம் தாங்கிகளும் மற்றுமுள்ள கைங்கர்யபரர்களும் இதை எதிர்க்கப் போவதில்லை.  


விதியை யாரால் மாற்ற முடியும். நம்மை அழிக்க முடிவாகிவிட்டது. நாம் மட்டும் அந்த இடத்தில் அழியமாட்டோம். அப்படி செய்பவர்களும் சேர்ந்தே அல்லவா அழிவார்கள் என்ற புத்தி கூட இல்லாதவர்களை என்னவென்று சொல்வது.


அவரவர் விதிவழி அடைய நின்றனரே!!


ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!

ஜெய் ஸ்ரீ ராம்!

ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!

ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!

@@@@@@#@

https://youtu.be/iOlrWHiyIbU


Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*