சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்
சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்
அந்த மூதாட்டியின் பெயர் பாப்பாம்மாள், மேட்டுபாளையத்தை சேரந்தவர், வாழ்வில் அவர் அளவு வறுமையினை கண்டவர் யாருமில்லை
கூலி வேலை செய்து மளிகைகடை நடத்தி அதில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்து சகோதரிகளை வளர்த்து கரையேற்றி அவர்களின் பிள்ளைகளையும் வளர்த்து கரையேற்றி இன்று நிலம் ஒன்றே தன் வாழ்வு என விவசாயம் செய்துவரும் பாப்பாம்மாளுக்கு வயது 103
ஆம் கிட்டதட்ட 75 வருடமாக விவசாயம் செய்யும் அந்த மகராசிக்கு மோடி அரசு மிகபெரிய கவுவரத்தை அளித்திருக்கின்றது
பத்ம விருதுகள் என்றால் என்ன? யார் இந்நாட்டுக்கு தன் துறையில் மிகசிறந்த சேவையினை செய்கின்றார்களோ அவர்களை கவுரவிப்பது
இதுகாலமும் மக்கள் முகம்படும் நடிகர், நடிகையர் என அதன் தன்மையே வேறாய் இருந்தது
இப்பொழுதுதான் 70 வருடமாக இந்நாட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு நெல்லும், வாழையும், காய்கறியும், பயிரும் கொடுத்து சேவை செய்த விவசாய பென்ணுக்கு மிகபெரிய கவுரவம் வழங்கபட்டிருக்கின்றது
மோடி அரசின் மிக சிறந்த மக்கள் அவதானிப்புக்கும் கவனிப்புக்குமான சான்று இது
இவ்வளவுக்கும் பாப்பாம்மாள் பாஜக அல்ல, அவர் திமுகவின் மேல் பற்று கொண்டவர், கருணாநிதியினை சந்திக்க துடியாய் துடித்தவர்
அவருக்கு கட்சி பேதமற்று நாட்டின் நீண்டகால விவசாயி எனும் வகையில் பத்மஸ்ரீ கொடுத்த மோடி அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
முன்பெல்லாம் பத்மவிருதுகளில் திமுக, அதிமுக அரசியலும் இன்னும் பலவும் இருந்தது அதையெல்லாம் உடைத்து எளிய மக்களுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதை கொடுத்து கவுரவிகின்றது மோடி அரசு
அப்படித்தான் 11 தமிழர்களுக்கு பத்மவிருது கிடைத்திருகின்றது, அதில் பாப்பாம்மாள் மகா முக்கியமானவர் முழு தகுதியுமானவர்
Comments
Post a Comment