சிவநெறியை அண்டநாயகன்,பழமைக்கும் பழமையானவன, புதுமைக்கும் புதுமையானவன, சர்வவிஞ்ஞானி,சர்வவியாபி, சர்வசித்தன், சர்வஞ்ஞன, சர்வசாட்சி, மூலஓளி ஆகிய சிவபரம்பொருளால் ஸ்தாபிக்கப்பட்டது. சிவ பரம்பொருள் என்றும் நிலைத்தவன், உருவமாே, வடிவமாே, ஆண், பெண், அலி என்றாே, வேண்டுதல் வேண்டாமென்றோ, இல்லாதவன். உருவமோ, வடிவமோ இல்லாத உண்மை பரம்பொருள்

 








சிவநெறியை அண்டநாயகன்,பழமைக்கும் பழமையானவன, புதுமைக்கும் புதுமையானவன, சர்வவிஞ்ஞானி,சர்வவியாபி, சர்வசித்தன், சர்வஞ்ஞன, சர்வசாட்சி, மூலஓளி ஆகிய சிவபரம்பொருளால் ஸ்தாபிக்கப்பட்டது. சிவ பரம்பொருள் என்றும் நிலைத்தவன், உருவமாே, வடிவமாே, ஆண், பெண், அலி என்றாே, வேண்டுதல் வேண்டாமென்றோ, இல்லாதவன். உருவமோ, வடிவமோ இல்லாத உண்மை பரம்பொருள். அவரை முழுமுதற்கடவுளாக கொண்டு போற்றி நிற்கும் சிவனடியார்கள் வேறு சிறு தெய்வங்களை நடிச் செல்லக்கூடாது.  இறைவன்  தொண்டர்களின் வினைகளை கழிக்க வினைகளுக்கு ஏற்ற சோதனை வந்து பின் சரியாகிவிடும்.  ஒரு பதிவிரதை தன் பதியை அன்புகொள்வதுபோல் சிவனிடம் உண்மையாக அன்பு வைய்யுங்கள்.

1-சைவமே உலகின் தலையாயநெறி.....மெய்கண்டார்

2-குறியொன்றும் இல்லா நெறி..மாணிக்கவாசகர்

3- முத்திநெறி சிவ நெறி..மாணிக்கவாசகர்

 4-பன்முத்திரை சமயம் பாழ் 

சின்முத்திரை அரசு சிவம்..பாம்பாட்டிசித்தர்

5-மெய்குரு சிவம்...பாம்பாட்டிசித்தர்

6-பலமதம் பொய் சிவமதம் மெய் இடைக்காட்டுசித்தர்

7- தத்துவதெய்வம் சிவம் ...இடைக்காட்டுசித்தர்

8- தத்துவ தெய்வம் சிவம்

மற்றவைமாயை .. அகப்பேய்சித்தர

9- சிவனன்றி வேறேவேண்டாதே ..கடுவளிசித்தர

10- சீரார் சீரகொழுந்து சிவம்..இடைக்காட்டுசித்தர்

11-மெய்குரு சிவம் பற்றி ஆடுபாம்பே..பாம்பாட்டி சித்தர்

12-உய்யவல்லார்க்கு உயிர்..சிவம். பாம்பாட்டி.சித்தர்

13- சிவனைபேணின் தவத்திற்கு அழகு ..ஔவையார்

14-சிம்புகளாய் பரந்து நின்றது சிவம் ..சிவவாக்கியர

15-கற்புள்ள மாதர் குலம் வாழ நின்ற 

கற்புநெறியையளித்தவரே வாழ்க..கொங்கணர்

17- சிவமே பொருள் ..வள்ளலார்

18-கூறுமின் நீர் சிவம் பிறந்திங்கு இறந்தமை

வேறொரு தெய்வத்தின்மெயப்்பொருள் நீக்கிட

பாறணியும உடல் வீழ விட்டாருயிர்

தேறணிவோம் இது செப்பவல்லீரே .திருமூலர்

19-யாதொரு தெய்வம்  கண்டீர் அத்தெய்வமாகி அங்கே

மாதொருபாகனார் தாம்வருவார்..மற்றதெய்வங்கள்

வேதனைப்படும் இறக்கும் பிறர்க்குமேல் வினையும் செய்யும்

ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வான் அன்றே..மெய்கண்டார்.

ஆகையால் சிவமே உண்மை பரம்பொருள்.உலகிலேயே முதன் முதலில் விவசாயம செய்து வாழ்க்கை நடத்திய மக்கள்  இந்தியா மக்கள். தஞ்சை நாட்டியத்தான்குடி கோயில் ஸ்தலபுராணத்தில் இறைவனும் இறவியும் வந்து நிலத்தை உழுது சீர்செய்யவும் விதைவிதைக்கவும் பரமேஸ்வரி நாற்று நடவு செய்யும் முறையையும் விவசாயிகட்கு கற்று கொடுத்தார்களாம். காஞ்சிபுர உழவர்கட்கு பரத்திலிருந்து தானிய விதைகளை எடுத்து வந்து இறைவனும் இறவியும் கொடுத்து விவசாயம் செய்து மக்களை வாழ செய்தார்களாம். ஆகையால் உண்மை இறைவன் சிவமை போற்றுவோம். அதி சக்தி வாய்ந்த மந்திரம்  நமசிவாய, சிவாயநம, சிவயநம,  சிவசிவ  ஆகும். நாம் சிவனின் பிள்ளைகள் என்பதில் பெருமைக் கொள்வோம். இது நம் பாவங்களை நீக்கி பரகதியைஅருளும்.

செல்வசிவம் சிவமுக்திநெறி.


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai