இப்ப இந்த ஆளு (மோடி), இந்து , முஸ்லிம், கிறிஸ்டியன்னு பார்க்காம அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அரேபியானு வித்தியாசம் இல்லாம உலகம் முழுக்க இருக்கிற ஆண்கள், பெண்கள் , குழந்தைங்க, பெரியவங்களுக்கு இலவசமா கொரோனா தடுப்பு மருந்து தராரு

 





பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.


பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.


அவரைக் கோபமாக பார்த்தேன். 


சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.


நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து  பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா. 


எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க. 


இப்ப  இந்த ஆளு (மோடி), இந்து , முஸ்லிம்,  கிறிஸ்டியன்னு பார்க்காம அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அரேபியானு வித்தியாசம் இல்லாம உலகம் முழுக்க இருக்கிற  ஆண்கள், பெண்கள் , குழந்தைங்க, பெரியவங்களுக்கு இலவசமா கொரோனா தடுப்பு மருந்து தராரு.


பல பெரிய மருந்து கம்பெனிங்க இவர் மேல கோபத்துல இருக்காங்க. இவரு இப்படி இலவசமா தர்ரதால அவங்களுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம். 


இவர் மேல வெறுப்பு காட்ட, செலவு பண்ணி மக்களோடு கலந்து விஷப் பிரச்சாரம் பண்றாங்க. 


நான் கட்சிக் காரனெல்லாம் இல்ல. ரிடயர்டு ஹெட்மாஸ்டர். என் பேரு சாமுவேல். உங்க ஆசிரியர் சொன்னதா நினைச்சுக்குங்க. நல்லதுக்கு சப்போட் பண்ணனும் சார். உலக மக்களுக்காக சந்தோஷமா குடுங்க  னு முடிச்சார்.


இந்த வயதிலும் எவ்வளவு பாஸிடிவான, நேர்மையான, எண்ணம், பேச்சு.


கண்டிப்பா சார். சந்தோஷமா குடுப்பேன். இனி புலம்ப மாட்டேன். னு விடை பெற்றேன்.


 முகநூல் பதிவு


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது