சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் ஜப்பானிய கப்பலின் நிலையால் மேற்குலக பொருளாதாரமும் இன்னும் பல விஷயங்களும் ஆடிபோய் இருக்கின்றன*
*சூயஸ் கால்வாயில் சிக்கியிருக்கும் ஜப்பானிய கப்பலின் நிலையால் மேற்குலக பொருளாதாரமும் இன்னும் பல விஷயங்களும் ஆடிபோய் இருக்கின்றன*
ஆம் விஷயம் வில்லங்கமானது, பல எச்சரிக்கைகளையும் சில நாடுகளின் பலவீனங்களையும் அசட்டுதனத்தையும் உலக அரசியலையும் அழகாக சொல்கின்றது.
*ஆண்டுக்கு சுமார் 1800 கப்பல்* *இவ்வழியாகத்தான் பயணிக்கின்றன*
செங்கடல் அல்லது மத்திய தரைகடலை அடையும் கப்பல்கள் இந்த கேட்வே மூலமாகவே மறுபகுதிக்கு செல்லமுடியும், இதற்கு காத்த்திருந்து அனுமதியெல்லாம் வாங்க வேண்டும்
அந்த கப்பல் கிழக்காசியாவில் இருந்து நெதர்லாந்துக்கு சென்ற ஜப்பானிய கப்பல் ஆனால் பதிவு செய்யபட்ட நாடு பனமா என்பதால் அந்நாட்டு கொடிதான் பறந்து கொண்டிருந்தது
*சூயஸ்கால்வாய் என்பது ஐரோப்பா ஆசியா கடல் வழிக்கு மகா மகா முக்கியமானது* , அது மட்டும் இல்லையென்றால் வாஸ்கோடமா காலத்தில் பிரிட்டிசார் வந்தது போல் ஆப்ரிக்கா முழுமையும் சுற்றிவர வேண்டும் கிட்டதட்ட 1 மாதகாலம் எடுக்கும் விஷயம் அது
நைல் நதியின் கால்வாய்களுடன் ஒரு மாதிரி எகிப்தியர்கள் மத்திய தரை கடலையும் செங்கடலையும் மெல்லிதாக இணைத்த காலத்திலே இந்த கால்வாய் திட்டம் இருந்தது, சிறிய படகுகளுக்கு அது சாத்தியமே தவிர கப்பல்களுக்கு சாத்தியமில்லை
*இதனால் மத்திய தரைகடல் வரை வரும் கப்பல்களின் சரக்குகள் பின் நிலம் வழியாக கொண்டுவரபட்டு செங்கடலில் இன்னொரு கப்பலில் ஏற்றபடும்*
*சோழ* , *பான்டியரின் கப்பல் முதல் ரோமரின் கப்பல் வரை இப்படித்தான் சரக்குகளை பரிமாறின*
சூயஸ் கால்வாயினை முதலில் தோண்ட எண்ணியவன் நெப்போலியன் ஆனால் பிரிட்டனின் கடல்வெற்றி அவனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, பின் அந்நாளைய தாதா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதை வெற்றிகரமாக தோண்டி கப்பல் போக்குவரத்து எளிதாக வழி செய்தன
*அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவி சிலை இதன் கரையில் நிறுவத்தான் செய்யபட்டது ஆனால் பின்னாளில் அமெரிக்காவுக்கு வழங்கபட்டது*
பிரான்ஸின் பெர்டினார்ட் என்பவர்தன் இதை தலமையேற்று தோண்டினார், பின் பனாமா கால்வாய் திட்டம் உருவானது
*சுமார் 15 ஆயிரம் பேர் 10 ஆண்டு காலம் உழைத்து 1859ல் இதை முடித்தனர்*
சூயஸ் கால்வாய் தோண்டபட்ட பின்பே கப்பல் போக்குவரத்து ஐரோப்பாவுக்கு எளிதானது, அதுவும் அரேபிய எண்ணை, சீன உற்பத்தி , ஆப்ரிக்க தாது என எல்லாமும் அதன் வழியாகத்தான் செல்லும்
*1960களில் எகிப்துநாட்டின் கால்வாய் எங்களுக்கே என சொல்லி டோல் கேட் போட்டு வசூலித்தார் எகிப்திய அதிபர் கர்ணல் நாசர்* , பிரிட்டனை அவர் விரட்டி அடித்தார், பின் வந்த அமெரிக்கா தன் இருப்பை பலபடுத்தி அவரை இஸ்ரேல் மூலம் வீழ்த்திய பின் எகிப்தின் பிடி தளர்ந்தது இப்போது ஒற்றை சதவீத கமிஷனுக்கும் குறைவாகவே அவர்களுக்கு கிடைக்கும்
*இஸ்ரேல் நிலைத்திருக்க இந்த சூயஸ் கால்வாயும் மகா முக்கிய காரணம்* , ஆம் அவர்களை வைத்து எகிப்தை மிரட்டும் ஒரு தந்திரம் இது
இப்படி மகா மகா முக்கியமான சூயஸ் கால்வாயில் கடந்தவாரம் ஒரு கப்பல் சிக்கி அது தமிழ்நாட்டு திமுக போல் திசை திரும்பி சகதியில் சிக்க இரு பக்கமும் நூற்றுகணக்கான கப்பல்கள் சிக்கி கொண்டுள்ளன
*கப்பல் என்பது ஓடினால்தான் பணம்* , *இல்லையேல் அது பெரும் செலவை கொடுக்கும்*
ஒரு காற்றடித்து அவ்வளவு பெரிய கப்பல் திசைமாறி இருபக்கமும் சேற்றில் சிக்கியது என்பதை நம்ப யாரும் தயாராக இல்லை என்றாலும் சொல்லபடும் காரணம் அதுதான்
*உண்மையில் என்ன நடந்ததென்றால் சில காலமாக சூயஸ்கால்வாய் தூர்வாரபடவே இல்லை* , *அமெரிக்காவும் உலகநாடுகளும் அதை கவனிக்கவில்லை அப்படியே டோல்கேட் எகிப்தும் கவனிக்கவில்லை*
*பாலைவனமான இருபக்கம் இருந்தும் கொட்டும் மணலும் இதர விஷயங்களும் சகதியினை அதிகமாக்கிவிட்டன*
*இரண்டாம் விஷயம் வில்லங்கமானது* , *ஆம் இது சாதாரண விஷயமாக தெரியவில்லை இதில் ரஷ்யா அல்லது சீனாவின் விளையாட்டு இருக்கலாம் என்கின்றார்கள்*
இந்த நீர்வழி வழியாக எண்ணெய் போக்குவரத்து நடைபெறாவிட்டால் ஐரோப்பாவுக்கு ஒரே வழி ரஷ்யாதான், ரஷ்ய எண்ணெய்தான் அங்கு சப்ளையாகும்
மற்றபடி அரேபிய எண்ணெய்க்கும் ஐரோப்பாவுக்கும் நிலவழி தொடர்பு இல்லை, குழாய் வழி இல்லை. அப்படி ஒன்று சிரியா ஊடாக நடந்துவிட கூடாது என்றுதான் சிரியாவில் காவல் இருக்கின்றது ரஷ்யா
மேற்கத்திய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்க சீனா செய்த காரியம் என்பதும் இன்னொரு தியரி
ஒரு யுத்தம் வந்தால் எதை முதலில் அடிப்போம் தெரியுமா என யாரோ யாருக்கே சவால் விட்டிருகின்றார்கள், உண்மையில் இரு கப்பல்கள் சூயஸ் கால்வாயில் ஒருசேர மூழ்கினால் போதும், ஆழம் குறைவான அக்கால்வாய் பயன்பாட்டுக்கு வராது
சரி, எந்த எச்சரிக்கையும் இருக்கட்டும், மிக பெரிய தொழில்நுட்பம் உள்ள உலகில் ஒரு கப்பலை மீட்க முடியாதா என்றால் அதுதான் விஷயம்
*கப்பலின் ஒரு முனை வடக்கு கரை சகதியிலும் இன்னொரு முனை தெற்குகரை சகதியிலும் வசமாக சிக்கியிருக்கின்றன*
*கப்பல் முழுக்க சரக்கு இருப்பதால் எடை மிகுந்த கப்பலை நகர்த்த முடியவில்லை*
எடையினை குறைத்துவிட்டு கப்பலை நகர்த்தலாம் என்றால் துறைமுகங்களில் இருக்கும் பாரம் தூக்கி அமைப்பு அந்த கால்வாயில் இல்லை
*இதனால் நிலமை மகா மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது*
இனி ஒரு பாரம் தூக்கியுடன் ஒரு கப்பல் வந்து சரக்குகளை கரையில் இறக்கிவிட்டு பின் சகதியிலிருந்து இரு முனைகளையும் மீட்டு கப்பலை நகர்ந்த்துவதெல்லாம் கொஞ்சம் நாள் எடுக்கும் விஷயங்கள்
*ஏற்கனவே 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் கப்பல்கள் தத்தளிக்க தொடங்கிவிட்டன*
மிகபெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது, நிச்சயம் இது இந்தியாவில் கிழக்காசியாவில் பெட்ரோல் உள்ளிட்ட தட்டுபாட்டை கொண்டுவராது என்றாலும் ஐரோப்பாவில் ஒரு முடக்கம் ஏற்பட போவதால் உலகளாவிய ஒரு மந்தம் ஏற்படலாம்
*இந்த கப்பலும் சர்ச்சகுரியதுதன் 2019ம் ஆண்டு ஜெர்மன் துறைமுகத்தில் இப்படி சிக்கி பின் மீண்டெழுந்தது* , இப்பொழுது சூயசில் சிக்கியிருக்கின்றது
எனினும் இது ஏதோ ஒரு நாட்டின் உளவுதுறையின் வேலை என்கின்றது சந்தேக பார்வைகள், இக்கப்பலில் பணியாற்றிய அனைவரும் இந்தியர்களே, ஆனால் அவர்களை வளைத்து சீனாவோ ரஷ்யாவோ இதை செய்துவிட்டது என்கின்றார்கள்
*பாம்பின் கால் பாம்பறியும் என்பது* *போல் ஏகபட்ட யூகங்கள் வருகின்றன*
இப்போதைய பெரும் சவால் அக்கப்பல் எப்படி மீட்கபட போகின்றது அல்லது மாற்றுவழியில் அகற்றபட போகின்றது என்பதுதான்
*உலகின் மிகபெரிய சிக்கலாக அது உருவெடுத்துவிட்டது*
Comments
Post a Comment