கிள்ளிப் பார்க்காதீர்.. கிழங்கை என்றாள்..! அப்படியொன்றும் வயதாகி விடவில்லை.. என் கை இளங்கைதான் என்றேன்..!
தமிழில் அமுது இதோ :-
காய்கறிக் கடை...
கிள்ளிப் பார்க்காதீர்..
கிழங்கை என்றாள்..!
அப்படியொன்றும்
வயதாகி விடவில்லை..
என் கை இளங்கைதான் என்றேன்..!
அவள் முறைப்புக்கு இடையே..!
என்ன இது
கொத்து மல்லி வாசமே
இல்லை என்றேன்...
ம்...!
இது காலை நேரம்
அதனால் பூக்க வில்லை
எனச் சிரித்தாள்..!
ஆனால் அந்தச் சிரிப்பில்
அதிகாலையிலே அழகாய்
மல்லி பூத்திருந்தது
சித்தம் சூடேற்றும் அவள்
கண்களைப் பார்த்துக் கொண்டே..
முத்தம் தரும் காய் உண்டோ...
என்றேன்...
என்ன என்ன என்றதட்டினாள்..
முத்துக்கள் ஒளிந்திருக்கும்
வெண்டைக் காயைச் சொன்னேன்
என்றேன்...
வெண்டையில்லை
வெட்டும் காயிருக்கிறது
வேண்டுமா என்றாள்..!
ஐயயோ அப்படியென்ன காயென்றேன்
கத்தரிக்காய் என்றாள்...!
இப்படித்தான் போனவாரம்..!
தித்திக்கப் பேசித்
தேன்காய் என்று தேங்காய் விற்றாய்..
வீட்டில் சென்று உடைத்துப்
பார்த்தேன்..
ஒரே "வழுக்கை" என்றேன்..
இல்லை இல்லை
குடுமியோடுதான்
குடுமியோடுதான் தந்தேன்
பொய்சொல்லாதீர் என்றாள்...
Comments
Post a Comment