வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத் திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள் மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.

 





வெள்ளியங்கிரி மலை


கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத் திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள் மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார். 


இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பா தையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம் பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர் ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.


தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்ப வெட்ப நிலை இங்கு நிலவுவதாலும் இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.


இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தா ல் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள் ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலை யடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.


மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கி ரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவரு டன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.


கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலி ருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரி லிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.


இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.


மலைஉச்சியில் பாறைகள் சூழ சிவபெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். 


மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையா ன இடமாகும் சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திரகயிலாயம் சூட்சம நி்லை யி்ல் அமைந்துள்ளது. 


மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சி ண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப் படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். 


வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரு ம் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தல மாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.


சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென் றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும், சூட்சுமத்தில் இயங்கியும் வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கி றது. 


மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகி யார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார் காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டி கொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரி முத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.


முதல் மலை 

பிரணவ சொரூபம் வெள்ளி விநாயகர் உறைவிடம்


இரண்டாம் மலை 

சுவாதிஷ்டானம் பாம்பாட்டிச் சுனை


மூன்றாம் மலை 

மணிப்பூரகம் அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை


நான்காம் மலை 

அநாகதம் ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம்


ஐந்தாம் மலை 

விசுக்தி நிலை பீமன் களியுருண்டை மலை


ஆறாம் மலை 

ஆக்ஞை நிலை சேத்திழைக்குகை, ஆண்டி சுனை


ஏழாவது மலை 

சஹஸ்ரஹாரம் சுயம்புலிங்கம்,(வெள்ளியங் கிரி ஆண்டவர்)


பூண்டியை அடிவாரமாகக கொண்ட வெள்ளிய ங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங் கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.


ஓம் நமசிவாய... 

தென்னாடுடைய சிவனே போற்றி...

11.05.2021...


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷