பசுமைதேசம் சி. சதீஷ்குமார் வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் புதுக்கோட்டை ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டம் 622203 9786564275 அய்யா வணக்கம் எங்கள் வாராப்பூர் ஊராட்சி மிகவும் ஏழை எளிய பொதுமக்களை கொண்ட ஒரு ஊராட்சி, ஊராட்சி முழுமைக்கும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தைல மரங்களின் பாதிப்பினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருங்கால சந்ததியினருக்கு குடிக்க தூய்மையான குடிநீர் கிடைப்பதில் கூட சிக்கல் வரக்கூடிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்
அனுப்புதல்
பசுமைதேசம் சி. சதீஷ்குமார்
வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்
புதுக்கோட்டை ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம் 622203
9786564275
For further details contact:
Sugavanam sir 9176244989
sugavanam.mobile@gmail.com
அய்யா வணக்கம்
எங்கள் வாராப்பூர் ஊராட்சி மிகவும் ஏழை எளிய பொதுமக்களை கொண்ட ஒரு ஊராட்சி, ஊராட்சி முழுமைக்கும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தைல மரங்களின் பாதிப்பினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருங்கால சந்ததியினருக்கு குடிக்க தூய்மையான குடிநீர் கிடைப்பதில் கூட சிக்கல் வரக்கூடிய நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்
அதனை மாற்றும் விதமாக விவசாயத்தை மீட்கும் விதமாக எங்களால் முடிந்த அளவிற்கு சீமைக்கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களிலும் மற்றும் தரிசு நிலங்களிலும் பொது இடங்களிலும் தேவையான மரக்கன்றுகளை நடும் பணி களை கடந்த ஓராண்டாக செய்து வருகிறோம்,இதுவரையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டுள்ளோம், மரக்கன்றுகளை நடுவதற்கு எங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்பு பணி பணிபுரியக்கூடிய பணியாளர்களை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம் இருப்பினும் 16 கிராமங்களைக் கொண்ட ஊராட்சி என்பதாலும் வறட்சியான பகுதி என்பதாலும் இதுவரையிலும் நட்ட மரக் கன்றுகளுக்கு இன்னும் நட உள்ள மரக்கன்றுகளுக்கு முறையாக தண்ணீர் வழங்குவதற்கு மிகவும் கஷ்டமான சூழ்நிலையாக உள்ளது,
இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்திட கீழ்கண்ட உதவிகள் எங்களுக்கு தேவைப்படுகிறது...
1. சீமை கருவேலம் மரம் மற்றும் தைல மரங்களை அகற்ற தேவையான இயந்திர வசதி (வாடகை)
2.மரக்கன்று நாற்றங்கால் (வாராப்பூர் ஊராட்சி)
3.டிராக்டர் மற்றும் டேங்கர் வசதி அல்லது டாட்டா ஏஸ்+டேங்கர் வசதி
4. உயரமான மரக்கன்றுகள்
5. பாதுகாப்பு கூண்டு வேலி வசதிகள்
6. மனித சக்தி(மரக்கன்று உற்பத்தி குழி எடுத்தல் பராமரித்தல், நீரூற்றுதல் என எங்கள் ஊராட்சி பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்கள் பெருமளவில் இத்திட்டத்தில் பங்கு கொண்டு சிறப்பித்து வருகிறார்கள் இன்னும் தன்னுடைய உழைப்பை தர தயாராக உள்ளார்கள்)
எங்கள் ஊர் ஆட்சிக்காக ஊராட்சிமன்றத் தலைவர் ஆகிய நானும் என்னால் முடிந்தளவு செய்து கொண்டு இருக்கிறேன், செய்ய தயாராக உள்ளேன், இன்னும் எனது நண்பர்கள் செய்வதாக உதவிட உறுதி அளித்து உள்ளார்கள் அதேபோல
தங்கள் அமைப்பின் மூலமாகவும் தங்களின் பிற நட்பு அமைப்பின் மூலமாகவும் மேற்கண்ட 5 கோரிக்கைகளில் ஏதாவது ஒரு கோரிக்கையை
ஏற்பாடு செய்யும் பட்சத்தில் தமிழகத்திலேயே முன்மாதிரி ஊராட்சியாக லட்சக்கணக்கில் மரங்களை நட்டு இதன் மூலம் இந்த ஊர் ஆட்சி பசுமை ஊராட்சியாக மாறும் இந்த ஊர் ஆட்சியைப் பார்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி யும் பசுமை ஊராட்சியாக மாறுவதற்கு உத்வேகமாக இருக்கும் நானும் உங்களோடு இணைந்து தமிழகத்தில் எந்த ஊர் ஆட்சியாக இருந்தாலும் பசுமை பணியை செய்வதற்கு உதவியாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன் நன்றி வணக்கம்
இப்படிக்கு
பசுமைதேசம் சி. சதீஷ்குமார்
வாராப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்
9786564275
Comments
Post a Comment