நாமாவது பாராட்ட வேண்டாமா... மோதிஜிக்கு,மத்திய அரசுக்கு,மாநில அரசுகளுக்கு,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு,வெளிநாடுகளுக்கு,நேரடியாக உதவி செய்த தன்னார்வலர்களுக்கு,ஆக்ஸிஜன் தாயாரித்த தொழிலாளர்களுக்கு,டேங்கர் லாரி டிரைவர்,கிளீனர்,மற்றும் முதலாளிகளுக்கு...டாக்டர்கள்,நர்ஸ்கள், மருத்துவத்துறை ஊழியர்களுக்கு.. ராயல் சல்யூட்...

 



ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன் என்ற கதறலை கெஜ்ரி ஆரம்பித்தார்..மம்தாவிலிருந்து உத்தவ் தாக்கரே அம்ரிந்தர் சிங் அசோக் கெலாட்..புபேஷ் பாகல்..எல்லோரும் ஓப்பாரி..ஸ்டாலின் கூட தான் பதவியேற்றதும் சிணுங்கினார்..


சென்னை டெல்லி சதீஷ்கர் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்று அலப்பறை..

திருடியாவது ஆக்ஸிஜனை கொடுங்கள் என வீர வசனம்..

கெஜ்ரி கேட்ட டூப்ளிகட் கணக்கை வைத்து உச்ச நீதிமன்றம் கூட தன் பங்குக்கு உதார் விட்டது...


இப்ப ஒரு வாரமா ஒரு சத்தமில்லை..


உச்ச நீதிமன்ற நீதிபதி வரை எவரும் 1000 டன்னிலிருந்து 7000 டன்னுக்கு எப்படி ஒரு ராத்திரியில் உற்பத்தியை உயர்த்த முடியும் என சிந்திக்கவில்லை..


ஆனால் ,ஒரு வாரத்தில் மத்திய அரசு ONGC போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அம்பானி அதானி டாடா போன்ற பெரும் கார்ப்பரேட் உதவியுடன் medical Oxygen உற்பத்தியை 9000 டன்னுக்கு உயர்த்தியது..


அத்தனை கார்ப்பரேட்டுகளும் மொத்த ஆக்ஸிஜன் உற்பத்தியையும் இனாமாக சொந்த செலவில் தயாரித்து வழங்கியது..


அப்புறம் உலக நாடுகள் மற்றும் இந்திய நிறுவனங்கள் உதவியுடன் டோங்கர் டிரக் மற்றும் சிலிண்டர்களை பெற்று வெற்றிகரமாக ஆக்ஸிஜன் விநியோகம் நடந்தது..


ரயில்,விமானம,கப்பல் என அனைத்து வழிமுறைகளையும் பயன் படுத்தி ஆக்ஸிஜன் சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடைந்தது..


தற்சமயம் உபரி ஆக்ஸிஜன் என்ற நிலை..எங்கும் பற்றாக்குறை என்ற பேச்சே இல்லை தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் விநியோக குளறுபடியால் சில பிரச்னைகள் மட்டுமே உள்ளது..


ஆக இந்தளவுக்கு திறமையாக ஆக்ஸிஜன் பிரச்னையை சமாளித்த மத்திய அரசையோ மோதியையோ பாராட்ட எந்த எதிர்கட்சித் தலைவனுக்கோ உயர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கோ மனமில்லை..


நாமாவது பாராட்ட வேண்டாமா...


மோதிஜிக்கு,மத்திய அரசுக்கு,மாநில அரசுகளுக்கு,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு,வெளிநாடுகளுக்கு,நேரடியாக உதவி செய்த தன்னார்வலர்களுக்கு,ஆக்ஸிஜன் தாயாரித்த தொழிலாளர்களுக்கு,டேங்கர் லாரி டிரைவர்,கிளீனர்,மற்றும் முதலாளிகளுக்கு...டாக்டர்கள்,நர்ஸ்கள்,

மருத்துவத்துறை ஊழியர்களுக்கு..


ராயல் சல்யூட்...


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது