தடுப்பூசி போட்டால் மரணம் நிகழ்கிறது என பல பொய் பரப்புரைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது எப்படி சொல்வாங்க என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரிந்த ஒருவருடைய நண்பருடைய உறவினருக்கு தெரிந்தவர் சொன்னார் என சொல்லுவார்கள். நேரிடையாக பார்த்தவர்கள் இருக்கமாட்டார்கள்.

 




தடுப்பூசி போட்டால் மரணம் எனும் பொய் பரப்புரையை எப்படி புரிந்துகொள்வது? அப்படி நடக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது? 


தடுப்பூசி போட்டால் மரணம் நிகழ்கிறது என பல பொய் பரப்புரைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது எப்படி சொல்வாங்க என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரிந்த ஒருவருடைய நண்பருடைய உறவினருக்கு தெரிந்தவர் சொன்னார் என சொல்லுவார்கள். நேரிடையாக பார்த்தவர்கள் இருக்கமாட்டார்கள். 


இது பொய்யா உண்மையா என்பதை கணிதம் மூலம் எளிமையாக கண்டுபிடிக்கலாம். 


நாட்டிலே இதுவரை 15 கோடிப்பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம்மோட கணக்குக்கு 15 கோடி என வைத்துக்கொள்வோம். 


இப்போ இந்த தடுப்பூசியிலே எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஒரு கணக்கு போடுவோம். 


தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிலே 

நூறிலே ஒருவருக்கு பாதிப்பு, அதாவது ஒரு சதவீதம் அப்படீன்னா 15 கோடியில் 15 லட்சம் பேர் இறந்திருக்கவேண்டும். 

ஆயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.1% அப்படீன்னா 15 கோடியிலே 1.5 லட்சம் பேர் இறந்திருக்கவேண்டும்.

பத்தாயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.01% அப்படீன்னா 15 கோடியிலே பதினந்து ஆயிரம் பேர் இறந்திருக்கவேண்டும். 

லட்சத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.001% அப்படீன்னா 15 கோடியிலே ஆயிரத்து ஐநூறு பேர் இறந்திருக்கவேண்டும். 


ஏப்ரல் வரை 180 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் சொல்லுகின்றன. இது கோவிட் ஊசி போட்டுகொண்ட பின்பு இறந்தவர்கள் அனைவருமே. அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன வியாதி இருந்தது என ஏதும் தகவல் இல்லை. அதை விசாரித்து வருகிறார்கள். வாகன விபத்திலே இறந்திருந்தாலும் இந்த கணக்கிலே எழுதிவிடுவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவும். 


இது இரண்டு மடங்கு என கொண்டாலும் 400 வரலாம். நான்கு மடங்கு என கொண்டாலும் 800 பேர் வரலாம். 


ஆனால் இங்கே பேசிக்கொள்வது போல ஊசி போட்டுக்கொள்ளும் நபர்களிலே ஆயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் கூட ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு வந்திருக்கவேண்டும் அல்லது இறந்திருக்கவேண்டும். 


அது எவ்வளவு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். ஏன் ஊசிபோட்டுக்கொண்ட பத்தாயிரம் பேரிலே ஒருவர் இறக்கின்றார் என வைத்துகொண்டால் கூட பதினைந்து ஆயிரம் பேர் இறந்திருக்கவேண்டும் அல்லவா? 


அப்படி ஏதும் நடந்திருக்கீறதா? கிடையாது. 


ஆனால் இந்த அரசாங்கம் சொல்லும் கணக்கு தப்பா இருந்தால், ஊசி போட்டுக்கொண்டவர்கள் இறந்ததை மூடி மறைத்தால் என்ன செய்வது? 


இதையும் கணக்குப்போட்டே கண்டுபிடித்துவிடலாம். 


கொரோனாவுக்கு முன்னால் சராசரியாக இறப்பு விகிதத்தை நகரம் வாரியாக, மாவட்டம் வாரியாக ஒரு குத்து மதிப்பாககூட எடுக்கமுடியும். 


அதையும் இப்போது கொரோனோ காலகட்டத்திலே நடக்கும் இறப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் தெரிந்துவிடபோகிறது? 

சுடுகாட்டிலேயும் இடுகாட்டிலேயும் என்ன நடக்கிறது என பார்த்தால் போதுமே? 


அரசின் கணக்கீட்டிலே கொஞ்சம் தவறலாம். நடப்பதை பாதியாக கூட குறைத்து சொல்லலாம். நூறு பேருக்கு பாதிப்பு என்றால் 50 பேருக்கு என கணக்கு காட்டலாம். 


ஆனால் ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்றால் 50 பேர் என கணக்கு காட்ட முடியுமா? முடியாதே? 


இந்த கணக்கிலே இருந்து நமக்கு தெரிவது என்ன? 


தடுப்பூசி போட்டுக்கொண்ட லட்சத்திலே ஒருவருக்கு கூட தடுப்பூசியால் மரணம் என்பது நிகழவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இறந்தவர்களின் மரணத்திற்கான காரணிகள் அலசி ஆராயப்பட்டு வருகிறது. எனவே முழு முடிவுகள் வந்தபின்பு என்ன காரணம் என தெரியவரும். பல காலம் நோய்வாய்ப்பட்டவர்கள், வாகன விபத்திலே இறந்தவர்கள் என்றெல்லாம் இருப்பதால் முழு ஆராய்ச்சிக்கு பின்பே தெரியவரும். 


எனவே தடுப்பூசி பாதுகாப்பானது. உங்கள் முறை வரும்போது போட்டுக்கொள்ளுங்கள். 


தடுப்பூசி கிடைப்பதில்லை என சொல்லவேண்டியதில்லை. மாதத்திற்கு 3 கோடி தடுப்பூசிகள் எனும் அளவிலே தயாரிப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 


பதிவர் - ராஜசங்கர் விஸ்வநாதன்


Comments

Popular posts from this blog

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...