Happy Akshaya Tritiya a very auspicious day... Let's recollect the significant things which took place in this particular day......

 















Akshaya Tritiya a very auspicious day...

Let's recollect the significant things which took place in this particular day......


*1. Sudama visited Krishna at Dwaraka with humble offerings of chipped rice and got blessed by Krishna with unlimited prosperity and opulence.*

*2. Lord Parashurama appeared on this day.*

*3. This day marks the beginning of Treta-yuga.*

*4. The Sun God presented Akshaya Patra a bowl which would never go empty and produce an unlimited supply of food on demand, to the pandavas.*

*5. Vyasadeva started composing Mahabharata on this day.*

*6. Adi Sankaracharya composed Kanakadhara Stotram on this day.*

*7. Goddess Lakshmi blessed Kubera, he received his wealth and position as custodian of wealth.*

*8. It is said that Goddess Annapoorna Devi appeared on this day.*

*9. Ganga Devi descended to Earth as a river.*


May their lordships Sri Sri Radha Krishna Chandra bless you with  spiritual energy to be engaged in his devotional service which is the actual prosperity of every living entity.....


Let's all pray for peace and harmony in the world.

Let there be enough food and water for all living beings.

Let there be joy and smile in everybody's face and let the world be a happier place to live in ☺☺

Let this CV Pandemic get over soon and let things return back to normalcy.

🙏🙏🙏

🌻🌷🌸HAPPY AKSHAYA TRITIYA🌸🌷🌻

🌺🙏அட்சய திருதியை ,🙏🏵

            🔔🎺🎻📯🥁🙏🌼🌻🙏


(வைணவர்கள் எந்தப் பலனுக்காகவும், உபாயமாக எதையும் செய்வதில்லை.

தேவதாந்தரங்களை உபாசிப்பதில்லை.


அட்சய திருதியை பற்றி சாஸ்திரம் சொல்லும் உண்மைகளையும்/பாரத தேசத்தின் பல இடங்களிலும் நடைபெறும் வழிபாடுகளையும், அண்மைக் காலத்தில் பரப்பப்பட்ட இல்லாத செய்திகளையும் எடுத்துரைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்.)


சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் வரும் திதி அட்சய திருதிமை."அட்சய" என்றால் வளர்தல்:பெருகுதல் என்று பொருள்.இந்த ஆண்டு நாளை

(14/05/2021) அட்சய திருதியை.


அட்சய திருதியையின் சிறப்புக்கள்..!

      ☝️👌👏☝️👌👏☝️👌👏

1.பகவான் பலராமர் அவதரித்த நாள்..!

2.கங்கை நதி பூமியை தொட்ட நாள்..!

3.திரேதா யுகம் ஆரம்பமான நாள் ..!

4.குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்..!

5.வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்...!

6.பாண்டவர்கள் சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்..!

7.ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்..!

8.குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்..!

9.அன்னபூரணி தேவி அவதரித்த நாள்.

10.சிம்ஹாசலத்தில் இன்று வராஹ லக்ஷமீ நரசிம்மரை சந்தன காப்பின்றி சேவிக்கலாம். (ஆண்டுக்கு ஓரே முறை)

11.பத்ரிநாத் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாள் சந்நிதி குளிர்/பனிக்காலம் முடிந்து நடை திறக்கும் நாள்.

12.இந்நாளில் தான,தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும்.


அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டுமா??

    ⚡⭐🌟⚡⭐🌟⚡⭐🌟

தங்கமோ,நகையோ வாங்க சொல்லி இந்து தர்மம் கூறவில்லை.இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.கடந்த 15/20 வருடங்களாகத்தான்,இந்த நாளில் நகை வாங்கினால் நல்லது என்ற ஒரு இல்லாத நம்பிக்கை வளர்ந்து வருகிறது. நகைக் கடைக்காரர்களும்,தங்க வியாபாரிகளும் தங்கள் விற்பனையை அதிகரிக்கப் புனைந்த கட்டுக்கதை தான் இது!(அதுவும் இந்த ஆண்டு கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டதே ! ஆன் லைனில் வாங்குவதற்கு மக்கள் அக்கறை

 காட்டுவதில்லை என்று நகைக்கடைக் காரர்கள் கடந்த சில நாட்களாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்)


அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியவை, என்று சாஸ்திரங்கள்

சொல்வது/முன்னோர்கள் கடைப்பிடித்தது:

         📖📕📔📘📚📒📙

1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும். 


2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது. 


3. மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். 


4.அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


5.வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும். 


6.மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். 


7.ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும். 


8.அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும். 


9.அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது. 


10.அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், "கனகதாரை'' நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள். 


11.அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 


12.அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும். 


13.அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

 

14.அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். 


15.கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள். 


16.அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். 

கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. 


17.அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும். 


18.அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர். 


19.அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது. 


20.அட்சய திருதியை நாளில் பிவசந்த் மாதவாய நம' என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.


21.அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். 


22.அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும். 


23.புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும். 


24.ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது. 


25,ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம். 


26.மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.


  தானம் தர நல்ல வாய்ப்பு :

   🙏🔔👌👏👍🙏🔔👌👍🙏

கொரோனா தொற்று நோயால்/ஊரடங்காலும், எத்தனையோ மக்கள் பாதிக்கப்பட்டு துன்பத்தில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கர்த்தவ்யம்/கடமை. அனைவருமே  நேரில் சென்று பாதிக்கப்பட்டோரைப் பார்த்து உதவுதல்

என்பது இயலாது.ஆனால் எத்தனையோ தொண்டு நிறுவனங்கள், மிகச்சிறப்பான சேவை ஆற்றி வருகின்றன. அவர்களுக்கு நம்மால் முடிந்த தொகையை அளித்து நாமும் இந்தச் சேவையில் பங்கு கொள்ளலாமே !!!

அடியேன்

படங்கள்:

1,2 : ஸ்ரீபலராமர்,கிருஷ்ணன்

3,4: ஸ்ரீகிருஷ்ணர்,குசேலர்.

5.ஸ்ரீ பெரிய பிராட்டியார்-ஸ்ரீரங்கநாயகித் தாயார்.

6.ஸ்ரீ வேத வியாசர்

Today is the auspicious day of " *Akshay Tritiya* " (also known as ‘Akha Teej’)

Several important events had taken place today, as recorded in our ancient holy manuscripts & scriptures. 


*Jainism* :- It was on this day that Lord Rishabhdev broke his year long fast by drinking sugarcane juice.


*Sudama* visited Lord Krishna on this day with a handful of rice.


*MuniShresth Ved Vyas* along with *Lord Ganesh* started writing the ‘MahaBharat’ on this day.


*Lord Vishnu's 6th micro carnation,* "Bhagwan Parshuram", was born today.


*The holy river Ganga* descended on earth on this day.


*This day marks the end of Satyug* and the beginning of Tretayug period.                                


*From today commences the construction of the three huge wooden chariots for Lord Jagannath's Rath Yatra* at Puri.                                                       


*It was today in Mahabharata that Yudhishthira received the "Akshay Patra*" to serve food to the needy in his kingdom.         


Today marks the birth anniversary of *‘Devi Annapoorna’,* the Goddess of nourishment.                           


Charity done today blesses the donor.         


Akshay Tritiya is considered as a very auspicious day to start a new commercial / business venture, new activity or a construction of a house / office etc.                       


*Post the Winter season, the holy pilgrimage or the Choti Chardham Yatra* begins from today, with the re-opening of the gates (Kapaat) of the ancient Choti Chardham holy shrines of Gangotri, Yamunotri, Badrinath and Kedarnath in the Himalayan mountain range. 


May this auspicious day of *"Akshay Tritiya"* remove all your sorrows & fill your life with happiness, prosperity and good health. 🙏🥳☀️💎


Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai