மறக்க முடியாத #மனிதர்கள் ... ஆட்டோ டிரைவர் #கிஷோர் ... வருடம் 1982. நான் அப்போது ஊட்டியில். எனக்கு ஒரு மெட்ராஸில் இருக்கும் பிரிட்டிஷ் கம்பெனியிலிருந்து இண்டர்வியூவிற்கு அழைப்பு கடிதம். கடிதம் லேட்டாக தான் கிடைத்தது. நாளைக்கு இண்டர்வியூ.

 


மறக்க முடியாத #மனிதர்கள் ... 


ஆட்டோ டிரைவர் #கிஷோர் ...


வருடம் 1982. நான் அப்போது ஊட்டியில். எனக்கு ஒரு மெட்ராஸில் இருக்கும் பிரிட்டிஷ் கம்பெனியிலிருந்து இண்டர்வியூவிற்கு அழைப்பு கடிதம்.   கடிதம் லேட்டாக தான் கிடைத்தது. நாளைக்கு இண்டர்வியூ. 


என் மாமாவிடம் சொல்லிவிட்டு அன்று மாலை திருவள்ளுவர் விரைவு பேருந்தில் மெட்ராஸ் கிளம்பினேன்.

மெட்ராஸ் வந்து பிராட்வேயில் இறங்கும்போது விடிகாலை 4 மணி.


எங்கே போவது? மயிலாப்பூர் சித்தப்பா வீட்டில் வெளியூர் சென்றிருக்கிறார்கள். 

இதுவரை மெட்ராசில் விடுதியில் தங்கியதில்லை. சரி. யோசனை செய்து கொண்டே வெளியே வந்தேன்.


அதோ. ஆட்டோ ஸ்டாண்ட். "எங்கே போகனும்" "தங்கறதுக்கு நல்ல லாட்ஜ் ஏதாவது பக்கத்தில?" "பங்காளி.. பார்ட்டி வந்திருக்கு" அவன் தோற்றமே சரியில்லை.பேச்சில் நம்பிக்கை இல்லை. 


வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன். கொஞ்ச தூரத்தில் புறநகர் பேருந்து நிலையம். தாண்டியவுடன் பூ மார்க்கட் பரபரப்பாக இருந்தது. இடதுபுறம் ஓரம் ஒரு ஆட்டோ.. "ஆட்டோ வருமா" உள்ளே பாதி தூக்கத்தில் இருந்த  இளைஞன் எழுந்தான். "அண்ணே ஆட்டோ வருமா" "எங்க போணும்" "ஏதாவது விடுதிக்கு போகவேண்டும்" "ஊருக்கு புதுசா" ஆமாம். "என்ன வேலயா வந்தீங்க" சொன்னேன்.  சில விவரங்கள் கேட்டான். சொன்னேன். சிறிதுநேரம் யோசித்தான்.


"சரி ஏறு. போலாம்" ரிப்பன் கட்டிடத்தின் அருகே புரசை போகும் ரோட்டில ஸ்ரீராம் லாட்ஜ் முன்பு வண்டி நின்றது. பெரிய லாட்ஜ்..வாடகை அதிகமாக இருக்குமோ?   "ஒரு நாள்தானே தங்க போறே"  ஆமாம்.

"பையன் நம்ம தம்பிதான். பாத்துக்க". 

அவனே உள்ளேவந்து ரூம் புக் செய்தான். எவ்வளவு? "அதெல்லாம் பிறகு பாக்கலாம். எத்தனை மணிக்கு இண்டர்வியூ? எங்கே?" 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில். "போயிடுவியா?"

"எத்தனாம் நம்பர் பஸ்ல போகனும்?"

சரி நானே வர்றேன். ஒன்பது மணிக்கு ரெடியா இரு."  போய்விட்டான். அட.  பணம் வாங்காமயே போயிட்டானே..

கவுண்டரில் வாடகையை பற்றி கேட்டேன். கிஷோர் வாங்ககூடாதுன்னு சொல்லிட்டு  போயிட்டாரு" குழப்பத்துடன் ரூமிற்கு வந்தேன்.  ஒன்பது மணி.


ரிசப்ஷனில் இருந்து கூப்பிட்டார்கள். கிஷோர் வந்து விட்டான். பைலோடு கீழே வந்தேன். "போலாமா" போலாம்.."சாப்பிட்டியா" இல்ல. பக்கத்தில் ஒரு மெஸ்ஸில் டிபன் சாப்பிட்டோம். என் குடும்பத்தை பத்தி விசாரித்தான். பில்லுக்கு அவனே பணம் கொடுத்தான். "கிஷோர் மொத்தம் எவ்வளவு கொடுக்கனும்?" "சொல்றேன் வா" கிளம்பினோம்.  சரியாக நுங்கம்பாக்கத்தில் கம்பெனி முன் நின்றது. எவ்வளவு கிஷோர்?  "எப்ப முடியும்?" தெரியல. மதியம் ஆயிடும். 

"சரி. முடிஞ்சதும் அதோ அந்த ஆட்டோ ஸ்டாண்டுல போய் கிஷோரோட தம்பின்னு சொல்லு.  ஸ்ரீ ராம் ஹோட்டல்ல  கொண்டுவந்து விட்டுடுவான். நா கெளம்பறேன்.. சாயங்காலம் ஸ்ரீ ராம்ல பாக்கலாம்".


நான் டிரஸ் சரி செய்து கொண்டு கம்பெனிக்குள் போனேன்.. ஒரு இருபது பேர் பக்கம் இருந்தார்கள்.  மூன்று சுற்று இண்டர்வியூ.  ரொம்ப டஃப். லஞ்ச் கம்பெனியில் கொடுத்து விட்டார்கள். நான் மூன்று சுற்றும் முடித்துவிட்டு வெயிட்டிங்கில் இருந்தேன்.  4 மணி. உள்ளே கூப்பிட்டார்கள்.  "Congratulations Mr. Kannan. You are selected. You will get the order within day or two" - GM.


அப்பாடா.  ஏதிர்பார்க்கவில்லை. British company. Interview முழுவதும் British  language. எப்படியோ ஜெயித்து விட்டேன். 


கிஷோர் சொன்ன ஆட்டோ ஸ்டாண்டில் சென்று "நான் கிஷோர் தம்பி. புரசவாக்கம் போகனும்."ஒரு ஆட்டோ கொண்டுவந்து விட்டது.  எவ்வளவு?  வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். மணி ஆறு.  கிஷோர் வந்தான்.  நேராக ரூமிற்கு.  "என்ன ஆச்சு" "நல்லா நடந்தது. செலக்ட் ஆயிட்டேன்" வாழ்த்துக்கள். முதுகில் தட்டி, வாஞ்சையோடு கை கொடுத்தான்.


"சரி.  எப்ப போகனும்?"  இப்போ கிளம்பனும். சேலம் போகணும்" "ஒன்பது மணிக்கு பல்லவன் இருக்கு. போலாம்."

"எவ்வளவு ஆச்சு கிஷோர்" "ஆயிரம் ரூபா ஆச்சு". சிரித்தான். "என்னிடம் மொத்தமே அவ்வளவு தான் இருக்கு. இந்தா". 


பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம்.  என் தம்பி ஒருத்தன் உன்னை மாதிரியே இருப்பான். பிரபுன்னு பேரு.  விவேகானந்தா கல்லூரில மூணாவது வருஷம்.  போனமாசம் பாண்டிச்சேரி டூர் போனவன் திரும்பி வரல. கடல்ல குளிக்க போயி, அலையோட போயிட்டான். தாங்க முடியல.  அவன் ஞாபகமாகவே இருந்தபோது தான் நீ வந்தே. நீ அண்ணைன்னு கூப்பிட்டதும் சட்டேன்று அவன் ஞாபகம் வந்து விட்டது.  நீயும் எனக்கு தம்பி மாதிரி தான். பணம் நீயே வச்சுக்க.  லாட்ஜ்ல வாடகை இல்ல.  என்னோட ஓனரோட லாட்ஜ் தான்.  இந்த ஆட்டோ வாடகையெல்லாம் நீ வேலைக்கு வந்த பிறகு வாங்கிக்கிறேன். போலாமா"


எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.  இப்படியும் ஒருத்தன் இருக்க முடியுமா?  தம்பி மேல் எவ்வளவு பாசம் இருந்தால் என்னை தம்பியாக பாவித்து இவ்வளவு உபசரிப்பு செய்வான்?  சொந்த அண்ணன் இருந்தால் கூட இப்படி கூடவே இருந்து பார்த்து கொண்டு இருப்பானா?  தெரியாது. எனக்கு அதற்குமேல் பேச்சு வரவில்லை.


கிஷோரிடம் பெயர் காரணம் கேட்டேன். "என் அப்பாவிற்கு ஹிந்தி பாடகர் கிஷோர் என்றால் உயிருப்பா.  அதனால் எனக்கு அந்த பேரு வச்சுட்டாங்க"


போகும்போது சென்ட்ரல் பக்கம் ஒரு ஹேட்டலில் நிறுத்தி டிபன் சாப்பிட்டோம். 

"கிஷோர் டிபனுக்கு நா தர்றேன்"  "பேசாம வாடா.  பஸ்ஸிற்கு டைமாச்சு".  சரி. வாடா போடா என்று தம்பியாகவே நினைத்து விட்டான் போலும். அட்ரஸ் கேட்டேன்.  சொன்னான். "நீ மெட்ராஸ் வந்து எந்த ஆட்டோ ஸ்டாண்டுல கேட்டாலும் சொல்லுவாங்க.  நான்தான் அண்ணா ஆட்டோ சங்கத்துக்கு தலைவரா இருக்கிறேன்." அடப்பாவி. தலைவரா? அதான் நுங்கம்பாக்கத்தில் அவ்வளவு மரியாதையா? நான் சேலம் அட்ரஸ் கொடுத்தேன். திருவள்ளுவர் பஸ்டாண்டு.  வண்டிய நிறுத்தி  விட்டு, விறுவிறுவென்று போய் சேலம் டிக்கட்டோடு வந்தான். "இந்தா. சீட் நம்பர் ஒன்னு.  மொதசீட்டு. ஜம்முனு இருக்கும்."

சீட் நம்பர் ஒன்னா?  விஐபி சீட் ஆச்சே!  எப்படி கிஷோர்"? அதெல்லாம் அப்படித்தான்.  "உடம்பை பாத்துக்க.  கடலாண்டையெல்லாம் போயிடாதெ. மெட்ராஸ்க்கு வேலக்கு வருவேல்ல. அப்ப பாக்கலாம். நான் பெகரினுக்கு (UAE)வேலைக்கு டிரை பண்ணிகிட்டடு இருக்கேன். அநேகமாக அடுத்த மாசம் போயிடுவேன். இருந்தால் பார்க்கலாம்."


சீட்டில் உட்கார்ந்தேன்.  நான் நானாக இல்லை.  நடந்ததெல்லாம் கனவா?  இல்லை.  உண்மை தான். இதோ.  திருவள்ளுவரில் நான் முதல்  சீட்டில் அமர்ந்து இருக்கிறேன். வண்டி புறப்பட போகிறது.  டிரைவர் ஏறி விட்டார்.  அப்போது ஒரு கை  ஐன்னல் வழியாக என்னைத்தோட்டு எதையோ நீட்டியது.  இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகள். யாரது? இந்த நேரத்தில் பிஸ்கட் விற்பது? பிஸ்கட் வேண்டாமென்று எட்டிப்பார்த்தேன். 

கிஷோர் சிரித்தபடி நின்றிருந்தான்.  "இந்தா. வச்சுக்கோ.  பசி எடுத்தா சாப்பிடு.  வழில ஹோட்டல்ல நிறுத்தினால் எதுவும் சாப்படாதே.  உடம்புக்கு ஆகாது. இத சாப்பிடுக்கோ"


வண்டி கிளம்பியது. வெளியில் வந்து திரும்பியது. அதோ. ஓரமாக கிஷோர் ஆட்டோவுடன். என்னை பாத்து கையசைக்கிறான்.  எட்டி எட்டி மறையும் வரை பார்த்து கொண்டிருந்தேன்.  ஓரு கணம் இறங்கி விடலாமா என்று தோன்றியது.  கிஷோரோடு  ஒருநாள் இருந்துவிட்டு நாளைக்கு போலாமா?

மனது அலை பாய்ந்தது.  அதற்குள் திருவள்ளுவர் வேகம் பிடித்து இரவை கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்தது.


நான் மனசு கேட்காமல் எட்டி வெளியே பார்த்தேன். கிஷோர் இல்லை. "எங்கிருந்தோ வந்தான்.  இடைச்சாதி நான் என்றான்".. பாடல் மனதிற்குள் சட்டென்று நினைவுக்கு வந்தது. அங்கு கண்ணன் வந்தான் . இங்கு கண்ணனை தேடி கிஷோர் வந்திருக்கிறான்.


அன்று முழுவதும் உறங்கவில்லை. கண்களில் கண்ணீர் நிற்கவில்லை.  மெட்ராஸ் வந்து ஒரு பைசா செலவில்லாமல் இண்டர்வியூ முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிகெண்டு இருக்கிறேன்.  இதோ.  கிஷோர் கொடுத்த பிஸ்கட்.  அதை நெஞ்சோடு அணைத்துக்கோண்டு கிஷோரையே நினைத்துக்கொண்டைன். சேலம் வந்தது கூட தெரியவில்லை.  சேலத்தில் இறங்கியதும் எதிரே ஆட்டோ ஸ்டேண்டு.  ஆனால் வாஞ்சையோடு கூட்டிச்செல்ல கிஷோர் அங்கு இல்லை. நான் ஆட்டோவில் ஏறவில்லை. ஏனோ தெரியவில்லை. கிஷோரின் #நினைவுகளோடு நடக்க ஆரம்பித்தேன்.


#பின்குறிப்பு: (என் சந்திப்புக்கு பின்  கிஷோர் Beharin Oil Companyக்கு வேலைக்கு போய்விட்டதாக ஸ்ரீராமிலிருந்து தகவல் வந்தது. அதனால் தான் என்னுடைய 1980 பழைய போட்டோ பதிவிட்டு இருக்கிறேன். இந்த பதிவு கிஷோர் கண்ணில் படாதா என்ற நப்பாசையில்🙏🙏🙏)


Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*