நரேந்திர மோதி தற்போது உலகத்திலேயே தன்னை ஒரு மிகச் சிறந்த தலைவராக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்
ஜோஸஃப் ஹோப், நியூயார்க் டைம்ஸின் எடிட்டர்-இன்-சீஃப் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது.
நரேந்திர மோதியின் ஒரே குறிக்கோள் இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவது மட்டும்தான். இவரைத் தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் உலகத்திலேயே இந்தியா ஒரு சக்திவாய்ந்த தேசமாகிவிடும். ஒருவேளை அமெரிக்கா, யுனைடட் கிங்டம், ரஷ்யா, ஜப்பான் என அனைத்தையும் விட இந்தியா பிரமாதமாக வளர்ந்து அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடும்.
நரேந்திரமோதி ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். யாருக்கும் அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியாது.. அவர் ஆழ் மனதில் என்ன இருக்கிறது என்பதை ஒருவராலும் கணிக்கமுடியாது.
அவருடைய சிரித்த முகத்தின் மறுபக்கத்தில் அவரது பயங்கரமான தேசபக்தி நிறைந்த முகம் உள்ளது. உலகத்திலுள்ள எல்லா நாடுகளையும் தன் தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் அவர்.
முதலில் அமெரிக்காவிற்கும், பாக்கிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிற்குமான உறவை நாசம் செய்தார்.
அடுத்ததாக, நரேந்திரமோதி வியட்நாமுடன் கூடிக் குலாவி.. சைனாவின் சூப்பர் பவர் கனவைத் தகர்த்தார். பிறகு அந்த நாடுகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
வெகு நாட்களாக வியட்நாமிற்கும் சைனாவிற்குமிடையே ஏற்பட்ட எண்ணை எடுப்பது தொடர்பான தகராறில் பலனடைந்தது இந்தியா மட்டுமே. இந்தியாவின் ஆதரவோடு வியட்நாம் சைனாவின் தெற்கு கடலிலிருந்து எண்ணை தயாரிப்பில் ஈடுபட்டது.
தற்போது தாங்கள் பிரித்தெடுத்த எண்ணையை முழுவதுமாக இந்தியாவிற்கே வியட்நாம் சப்ளை செய்கிறது. இதில் கொடுமை, வேறு காரணங்களுக்காக அமெரிக்காவும் வியட்நாமை ஆதரிக்கிறது. மோதியால் மட்டும்தான் எந்த போரிலும் ஈடுபடாமலேயே பாக்கிஸ்தான் பரம ஏழை நாடாக மாற்ற முடிந்தது.
ஈரானின் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார் மோதி.
அவர், ஒரு இந்திய மிலிடரி பேஸை ஆஃப்கானிஸ்தான் எல்லையில் அமைத்துள்ளார். அது பாக்கிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்தியாவின் வியாபாரத்தை பெருக்குவதற்காக ஈரானின் வழியாக ஆஃப்கானிஸ்தானுக்கு ஒரு பாதையையே ஏற்படுத்தியுள்ளார்.
நரேந்திர மோதியின் ஆசைகள் ஒவ்வொன்றாக கூடிக் கொண்டே போகிறது. செக்ஷன் 370 மற்றும் 35A போன்றவைகளை காஷ்மீரில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.
ஒருநாள் இப்போது பாக்கிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் காஷ்மீரையும் (PoK) கைப்பற்றிவிடுவார். அதன் பிறகு பாக்கிஸ்தான் நான்காக உடைந்துவிடும். இது நடக்க இன்னும் சிறிது காலமே உள்ளது. அதுவும் நரேந்திர மோதியின் எச்சரிக்கையோடு நடந்தேறும்.
பாக்கிஸ்தானின் பாரம்பரிய நட்பு நாடான சௌதி அரேபியாவும் தற்போது பாக்கிஸ்தானில் நடக்கப் போகும் பிரிவினையில் முக்கிய பங்கு ஆற்றப் போகிறது.
ஆசியாவில் இந்த ஒற்றை மனிதன் சைனாவை ஒழித்துக்கட்டி, SAARC சம்மிட்டில் தன்னுடைய பவரை உலகத்திற்கு பறைசாற்றி.. இப்போது ஆசிய கண்டத்திலேயே இந்தியாவின் மேன்மையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதே நரேந்திர மோதி தன் ஆளுமையால், பாக்கிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அபராதம் போடும்படி UAE ஐத் தூண்டிவிட்டு அந்த அமைச்சரை UAE யிலிருந்து திருப்பி அனுப்பும்படி செய்திருக்கிறார். மலேஷியாவும் பாக்கிஸ்தானின் ஒரு ப்ளேனை அது கொடுக்க வேண்டிய கடன் பாக்கிக்காக தான் எடுத்துக் கொண்டுவிட்டது. இதற்கும் மோதியே மறைமுக காரணம்.
ஆசியாவின் அதிகாரம் மிக்க ரஷ்யாவும் சரி, ஜப்பானும் சரி இது விஷயமாக எதுவுமே பேசவில்லை. அவர்களால் பேசவும் முடியவில்லை.
காரணம் மோதி அந்த இரண்டு நாடுகளையும் துல்லியமாக தன் கைக்குள் போட்டுக் கொண்டுவிட்டார். சைனாவிற்கும், வியட்நாமிற்கும் இடையே நடக்கும் எண்ணைப் பிரச்ணையில் சைனா எண்ணை வேண்டும் என்று கேட்டால் அவர் பாக்கிஸ்தான் ஆக்ரமித்துக் கொண்ட காஷ்மீர் தனக்குத் தரும்படி கேட்பார். கேட்பார் என்ன சைனாவிற்கும் வியட்நாமிற்கும் உள்ள பிரச்னையை தனக்குச் சாதகமாக்கி அந்த நிலப்பரப்பை தான் எடுத்துக் கொண்டு சைனாவை முட்டாளாக்கப் போகிறார்.
இதில் சைனாவால் ஒன்றுமே செய்ய முடியாது. இந்த மனிதர் இந்திய அரசியலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறார்.
பல நாடுகளும் தங்களுக்கு பல்வேறு எதிரிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவிற்கு பாக்கிஸ்தானைத் தவிர வேறு எந்த நாட்டுடனும் விரோதம் கிடையாது. அதோடு நரேந்திர மோதி தற்போது உலகத்திலேயே தன்னை ஒரு மிகச் சிறந்த தலைவராக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை பாக்கிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்திருந்தால் கூட இப்போது அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களைப் போல் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்காது. எந்த போரும் நடக்காமலே எல்லாவித நஷ்டங்களையும் பாக்கிஸ்தான் சந்தித்துவிட்டது.
எல்லா நாடுகளுடனும் எல்லாவித பேச்சு வார்த்தைகளையும் நடத்தும் இந்த மனிதரின் நேர்மையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சி என்பது மற்ற அனைத்து நாடுகளுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது. தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் வளர்ச்சியின் பின் விளைவுகளை ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள மற்ற நாடுகள் கட்டாயம் எதிர் கொண்டாக வேண்டும்.
🔺🔺🔺🔺🔺🔺🔺🔺
இந்த அற்புதமான கட்டுரையானது இந்திய மீடியாக்கள் சொல்லாத மோதிஜி வெளியுறவு பாலிஸி தொடர்பான சாதனைகளை நமக்குத் தெளிவாக விவரிக்கிறது. ♥️♥️
Telegram இல் Pradhan Gaurav Ji ஷேர் செய்திருந்த பதிவினை தமிழாக்கம் செய்துள்ளேன்.
Comments
Post a Comment