பெண்ணின்_அருமை:- *மனைவியே தெய்வம் ...* கணவனை இழந்த மனைவியை விடவும் .. மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.

 





பெண்ணின்_அருமை:-

*மனைவியே தெய்வம் ...*

கணவனை இழந்த மனைவியை விடவும் .. 

மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான்.

காரணம் கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள்.

ஆனால்.....

மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை தோளுக்குத் தோளாய் இருந்த தோழியை நோய்படும் போது தானும் நோகும் தாயை என பலரை

இழக்கிறான்.

ஒரு மனைவி எத்தனை உருவம் எடுக்கிறாள்?

கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.

அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள்

ஊர் , பெயர் , முகவரி , வீடு முதற்கொண்டு தன் தாயிடம் குடித்த பால் தந்தை தந்த கல்வி தவிர அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள்.

தான் கண்ட கனவுகள் அனைத்தையும்

கொண்டவனுக்காக மறைக்கிறாள். மறக்கிறாள். மறுக்கிறாள்

வீட்டின் வேலைக்காரியாக,

சலவைக்காரியாக,

சமையல் செய்பவளாக,

கணக்குப்பிள்ளையாக,

பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள்.

அவள் இருக்கும் வரை

இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.

பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும்.

பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும் .

கவிப்பேரரசு அருமையாக எழுதியிருப்பார்

” காதலி அருமை பிரிவில்

மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை கோடையிலே”

ஆம்.. 

மனைவியின் அருமையை அவளது மறைவில் தான் ஆடவன் உணர்கிறான்.

கணவனை இழந்த மனைவியர் நினைவுகளை அசை போடுவார்கள். நல்ல நினைவுகளை கூறுவார்கள்.

மனைவியை இழந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் தியாகங்களை எடுத்துக்கூறி புலம்புவார்கள். 

இன்னும் நல்லா கவனிச்சுருக்கலாம் சார் அவள.. 

இப்டி சரியா பாக்காம விட்டுட்டேனே சார். என்று அழுது புலம்புவார்கள்.

கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணத்தையும் மனவலிமையும் கிடைத்து விடுகிறது

ஆனால்......

மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதைப்போன்று தான் இருக்கிறார்கள்.

தனது சுக துக்கம் இன்ப துன்பம்

தோல்வி வெற்றி அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும் போது ஒவ்வொரு ஆடவனும் இறந்தே தான் விடுகிறான்.

அதற்குப்பிறகு அவனுக்கென்று எதையும் பெரிதாய் அவன் யோசிப்பதில்லை.

மனைவியை அவள் உயிரோடு இருக்கும் போதே முடிந்தவரை நேசிப்போம்.

அவள் இல்லாத போது அசை போடவும் புசித்து வாழவும் நினைவுகள் தேவையன்றோ …

இருக்கும் வரை மதியுங்கள்.

போன பின்பு புலம்பிப் பயனில்லை.


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது