"தாத்தா எங்க டீச்சர் இன்னிக்கு உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"...என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்.அடே பயலே., எனக்கு தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார்.அது என்ன தாத்தா

 









மிகவும்_அற்புதமான_பதிவு 

"தாத்தா எங்க டீச்சர்  இன்னிக்கு உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"...என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன்.அடே பயலே., எனக்கு  தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார்.அது என்ன தாத்தா அப்படிப்பட்டஏழுஅதிசயங்கள்....உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்."..

1.  உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில்.....அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்.

"என்ன தாத்தா சொல்றீங்க  நீங்க..??"

"ஆமாண்டா., அவள் தாண்டா  உன்னை இந்த  உலகத்திலேயே வரவேற்ற  முதல் மனுஷி."..

2.  உங்க அப்பா  இருக்கிறாரே அவர்தான் இரண்டாவது அதிசயம்....நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா..??''

3. "எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த., பாசம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள உதவிய ஜீவனாக உதித்தவர்கள். எனவேதான் உன்னுடன் கூடப் பிறந்தவனோ., பிறந்தவளோ தான் மூன்றாவது அதிசயம்....

''போதும் போதும்''   என்று நான் ஓடி விட்டாலும் அருகில் இருந்த கமலா டீச்சர்... "தாத்தா சார்  மேலே சொல்லுங்க., குழந்தைக்கு என்ன புரியும். எனக்கு சொல்லுங்க"_ என்றாள்....அடுத்தவீட்டுக்காரி....பேசாமல் இதுவரை முதலிருந்து தாத்தா பேசியதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தவள்.

4. "நண்பனோ., நண்பியோதான் வாழ்வில்  நான்காவது அதிசயம்.... விசால புத்தி., மனோபாவம்., மற்றவரை புரிந்து கொள்ளும் தாராள மனம்., நட்பு என்று ஒருவரை ஒருவர் நேசிக்கும் சுபாவம் வர காரணமானவர்கள்.

5. அடுத்தது குறைகளை நோக்காமல்., நிறைகளை மட்டுமே பார்க்கும் தன்மை. யாரால் முதலில் வந்தது என்றால்  உன் மனதை முதலில் கொள்ளை கொண்ட  பெண்ணோ / ஆணோதான். உலகையே., பெற்றோரையோ., மற்றோரையோ.,  அவனுக்காகவோ / அவளுக்காகவோ எதிர்க்கும் தைரியம் வந்தது அந்த அதிசயப் பிறவியால்தான்.  எனவே அந்த ஜீவனே வாழ்வில் கண்ட  *ஐந்தாவது அதிசயம்., அதாவது மனதுக்கு பிடித்த இறுதி வரை நீடிக்கும் வாழ்க்கை துணை......

6. ஆறாவது அதிசயம் என்ன தெரியுமா..உன் பிள்ளையோ., பெண்ணோதான் .உன்னை சுயநலமற்றவனாக மாற்றிய முதல் ஜீவன். உன்னை விட மற்றவர் நலம் பற்றி நீ அறிய., எண்ணங்கள் உன் மனதில் உதிக்க., வைத்த  அபூர்வ பிறவி. பிள்ளைக்கோ பெண்ணுக்கோ விட்டுக் கொடுக்காத., தியாகம் செய்யாத அப்பனோ., அம்மாவோ உலகிலேயே இல்லையே.அசாத்தியமாக இருக்கிறது சார்; கடைசி ஏழாவது அதிசயம் என்று எதை சொல்ல்லப் போறீங்க.."....கமலா.


7.வாழ்க்கையிலே இன்னும் என்னம்மா பாக்கி இருக்கு.   கடைசியாக இதுதான்  ஏழாவது அதிசயம் என்று கொள்வது ஒருவனது பேரன்., பேத்தி தான்....

"உங்களுக்கு மீண்டும் உலகில் வாழ வேண்டும் என்ற ஆசையை., எண்ணத்தை முதலில் வளர்த்த அதிசயங்கள். திரும்பவும் உங்கள் வாழ்க்கை சக்கரம் உருண்டோட காரணமானவர்கள் இந்த அற்புதம் பேரன்., பேத்திகள் தானே. அவர்களுக்காக நீங்கள் டான்ஸ் ஆடலையா., பாடலையா.,  குதித்து தூக்கிக் கொண்டு ஓடி விளையாடவில்லையா......

ஏன்., நம் குடும்பமே ஒரு அதிசயம்தான். நாம் எப்படி அதிசயத்தை வெளியில் தேடுகிறேமோ., அது போல் மகிழ்ச்சியையும் நம் உள்ளே வைத்துக் கொண்டு., வெளியில் தேடுகிறோம்.

வாழ்ந்து வரும் வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கே;...அது முழுமை பெறுவதே அதிசயத்துக்கு எல்லாம் அதிசயம்...

அன்பை வெளிக் காட்டுங்கள்...வாழ்வுக்கு பின் பிறகு என்னதான் கொண்டு செல்லப் போகிறீர்கள்....உலகின் ஏழு அதிசயங்கள் வேறெங்கும் இல்லை.நம்முடன்...  நம்முடனேயே...

படித்ததில் பிடித்தது.



Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...