இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே ! எனவே, மனிதன் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, பொறுமையாக, பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவாான் எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.
சைவம்! அசைவம்!! என்ன வேறுபாடு?
🌳🦈🌳🐟🌳🐡🌳🐠🌳🐚🌳🐟🌳🐋🌳
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..
தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.
தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும்.
செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?
தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்..
நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.
ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!
எங்கே தவறு நடந்தது?
நாக்கு தான்.
வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!
மாமிசம் மனித உணவா?இனி ஆராய்ச்சி
செய்வோம்.
இரு ஜீவராசிகளுக்கும் பற்களின்
அமைப்பு
சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை
போல் தட்டையாக அமைந்துள்ளன.
அசைவ இனங்களுக்கு கூர்மையாக
பற்கள் உள்ளன.
எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன?
சைவ ஜீவராசிகள் அனைத்தும்
மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சி
தான் குடிக்கின்றன.
அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக்
குடிக்கின்றன.
கால் விரல்கள்?
சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்
மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம்
தட்டையாகவும் இருக்கும்.
அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்
நீளமாகவும், கூர்மையான
நகங்களுடனும் இருக்கும்.
குடல் அமைப்பு?
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்
போன்றே பதினைந்து அடி வரை
நீளமான குடலாக உள்ளது. காரணம்,
சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை
குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும்
இருப்பதால் உணவானது குடலில் சற்று
அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு.
அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ
உணவில் நச்சுதன்மை அதிகம்
உள்ளதால் மிக குறைவான நேரத்தில்
குடலை விட்டு வெளியேறு ஏற்றாற்போல்
ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம்
உள்ளது.
சமநிலையான உடல் உஷ்ணம்
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்
போன்றே உடலில் வெப்பம்
அதிகமானால் தாகத்தை உண்டாக்கி
அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை
என்ற செயலின் மூலமாக உடலை
குளிர்விக்கிறது.
அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு
இல்லை. ஆதலால் தனது நாக்கினை
தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை
குளிர்விக்கிறது.
மலத்தின் தன்மை.
சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்
(சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே
மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது. மலம்
துர்நாற்றம் வீசாது.
அசைவ ஜீவராசிகளுக்கு (அசைவம்
சாப்பிடும் மனிதன் உட்பட) மலம்
கழிப்பதில் சிரமமும், மலம் அதிக
துர்நாற்றத்துடனும் இருக்கும்.
"உடற்கூறு ஆராய்ந்தோம். இனி
மனநிலை ஆராயலாம்."
வாழும் முறை
சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக
அதாவது கூட்டம் கூட்டமாக வாழும்.
மனிதனும் அவ்வாறே வாழ
ஆசைப்படுகிறான்.
அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக
வாழும் இயல்புடையது. தன்
எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த
இன்னொரு விலங்கினை
அனுமதிக்காது.
(இன்றைய மனிதனின் நிலையும்
இதுதான்.)
இயல்பு
சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம்
சாந்தமாகவும், அமைதியாகவும்
இருக்கும்.
அசைவ ஜீவராசிகள் வேகமாகவும்,
ஆக்ரோசமாகவும் இருக்கும்.
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான
வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்)
ஈடுபடுத்த முடியும். அசைவ
ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள்
எதுவும் செய்ய இயலாது.
மன இறுக்கம்
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக
மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்?
ஒவ்வாருவரின் உடலிலும்
அபாயகரமான சமயங்களில் தப்பித்துக்
கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க
சக்தியை தர ) சக்தி வாய்ந்த
ஹார்மோன்கள் அட்ரீனல்
சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில்
கலக்கும்.
இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும்
வெட்டப்படும் போது அதிக அளவில்
சுரந்து அதன் இரத்தத்திலும்,
சதைகளிலும் கலந்து இருக்கும்.
இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன்
சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ
அபாயத்தில் உள்ளது போன்ற
உணர்வைப் பெறுகிறான்.
இதுவே மன இறுக்கமாக
உருவெடுக்கிறது.
மனிதன் ஆறாவது அறிவை சற்றும்
பயன்படுத்தாது அதிக சக்தியும், பலமும்
வேண்டியே தான் அசைவம்
சாப்பிடுவதாக எண்ணுகிறான்.
சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும்
உள்ளது.சைவம் சாப்பிடும் யானைக்கு
பலத்தில் என்ன குறை?
உதாரணமாக சோயா பீன்ஸில்
நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன்
உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட
இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட
நான்கு மடங்கும் அதிகமாகும்
மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் அறிய
வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி
மனிதன் உட்கொள்ள வேண்டியது
சைவமே ! எனவே, மனிதன்
ஆரோக்கியமாக, அமைதியாக,
நிம்மதியாக, பொறுமையாக,
பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம்
இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல்,
நோய் இல்லாமலும் வாழ
ஆசைப்படுவாான் எனில் சைவமே
உட்கொள்வது காலச் சிறந்தது.
Comments
Post a Comment