மோரேவின் தமிழர்கள் சேர்ந்து அங்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். மிகவும் அழகான மற்றும் பெரிய கோவில். மணிப்பூர் மாநில சுற்றுலாத்துறை இந்தக் கோவிலையும் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது. அந்தளவுக்குச் சிறப்பானக் கோவில். கோவிலை மிகவும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். தமிழ் மக்களின் நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கோவில்கள் எல்லாம் நன்றாகத்தான் பாதுகாக்கப்படுகின்றன
மனிப்பூரின் தலைநகரமான இம்பாலிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் இருக்கிறது மோரே (Moreh) எனும் ஊர்.
3 மணி நேர பயணம். நாங்கள் காரில் சென்றோம். பொதுவாக மக்கள் ஆம்னி போன்ற வேனில் செல்கிறார்கள். ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணமாம் ஆம்னி வேனில் செல்ல.
இம்பாலிலிருந்து சுமார் 45 கி.மீ. வரை சமவெளி பகுதி. அதற்குப் பிறகு ஆரம்பிக்கிறது மலைவழி பயணம். அட, அட! சாலையின் இருபுறமும் மலையின் அழகை ரசித்துக்கொண்டு செல்ல கண்கள் இரண்டு பத்தாது!
பயண வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி இறங்கினோம். பகல் ஒரு மணி இருக்கும். ஒரே பணிப் பொலிவு! ஜில்லென குளிர்ந்தது மேனி. சொர்க்கமே தான்!
போகப் போக climateல் மாற்றம். ஆனாலும் மலைப் பகுதி தான். அடர் மரங்கள். செடிகொடிகள். பயணம் முழுவதும் ரசிப்பதற்குள் தலை கிறுகிறுக்க ஆரம்பித்துவிட்டது :)
என் மனைவிக்கோ வாந்தியே வந்துவிட்டது. சிம்லா, மனாலியில் கூட எனக்கு இவ்வளவு தலை சுற்றவில்லை.
ஆமாம், அங்கெல்லாம் போயிருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை சொல்கிறேன்.
எங்களை காரில் அழைத்துச்சென்ற நண்பரின் பெயர் ரவி. அவரது தோற்றத்திற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. மிகவும் இளமையாக இருக்கிறார். நல்ல காய்கறிகளை உண்பதால் இங்கே பெரும்பாலும் எல்லோரும் இளமையாகவே காட்சியளிப்பார்கள் என்றார். உண்மை தான்.
அவர் தமிழர்! "என்னாது மணிப்பூரில் தமிழரா?" என்று கேட்கிறீர்களா?ஆமாம், மணிப்பூரின் மோரேவில் தமிழர்களின் ராஜ்யம் நடக்கிறது!
இந்தியா - மியான்மர் (பர்மா) எல்லையில் இருக்கிறது மோரே. இந்தப் பகுதியின் வழியாகத் தான் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்ததாம். INAவில் நிறைய பேர் தமிழர்கள் என்பதை நினைவில் கொள்க.
பர்மாவில் ஏற்பட்ட விரும்பத்தகாத சூழ்நிலையின் காரணமாக அங்கிருந்தத் தமிழர்கள் இந்தியாவுக்குள் வந்திருக்கிறார்கள். அதாவது பார்டரைத் தாண்டி இந்தியாவின், மணிப்பூரின் பகுதியான மோரேவுக்குள் வந்திருக்கிறார்கள். அப்போது மோரே ஒன்றுமில்லாதவொரு நிலப்பகுதி. அதனை சரிபடுத்தி தங்கியிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு கஷ்டங்களைச் சந்தித்தும் தங்களது அயராத உழைப்பால் அங்கே தவிர்க்க முடியாத சக்தியாகியிருக்கிறார்கள்.
வணிகம் தான் வருமானத்திற்கான வழி. பர்மாவிலிருந்து மணிப்பூருக்கும், மணிப்பூரிலிருந்து பர்மாவுக்கும் வணிகம் நடக்கிறது.
மோரேவில் முன்பிருந்ததைவிட தமிழர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி, நல்ல வேலைவாய்ப்புப் போன்ற காரணங்களுக்காக பலர் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். அப்படி தமிழகத்தில் வீடு கட்டி வாழ்பவர்களுள் சிலர், தொழில் நிமித்தம் அடிக்கடி மோரேவுக்குச் சென்று வருகிறார்கள்.
இன்னும் சிலருக்கோ தமிழகத்திலும் வீடு உண்டு, மோரேவிலும் வீடு உண்டு. மோரே மற்றும் இம்பாலில் தமிழர்களுக்கு பிஸினஸ் உண்டு.
மோரேவில் தமிழ்ச் சங்கம் நிறுவியிருக்கிறார்கள். மணிப்பூரின் கவர்னர் La Ganesan ஐயா அவர்களுக்கு குஷி தான்.
பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதம் நடக்குமாம்!
தமிழ்ச் சங்க தலைவராக இருப்பவர் திரு.சேகர் அவர்கள். அவர் ஒரு ஆகச்சிறந்த ஆளுமை. மிகவும் ஏழ்மை நிலையில் தொடங்கி, இன்று எல்லா வகைகளிலும் மாபெரும் மனிதராக விளங்குகிறார். இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பது அரிது. அடக்கத்தின் உருவமாகவும், பண்பின் சிகரமாகவும் இருக்கிறார்!
இங்கிருக்கக்கூடிய தமிழர்களின் இதயங்களில் நிறைந்திருக்கிறார். மேலும், மோரேவின் இன்னபிற மக்களாலும் மதிக்கப்படக்கூடியவராக இருக்கிறார். மணிப்பூர் மாநில முதலமைச்சர் முதற்கொண்டு, அனைத்து அரசியல் தலைவர்களோடும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்!
அவ்வளவு அனுபங்கள் கொண்டவராக இருக்கிறார் அவர். அவரது வாழ்வை மையப்படுத்தி, அதோடு மோரேவின் வரலாற்றையும் சேர்த்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்.
அவர் ஆர்.எஸ்.எஸ்ஸோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
மோரேவின் தமிழர்கள் சேர்ந்து அங்கு ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். மிகவும் அழகான மற்றும் பெரிய கோவில். மணிப்பூர் மாநில சுற்றுலாத்துறை இந்தக் கோவிலையும் சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இணைத்திருக்கிறது. அந்தளவுக்குச் சிறப்பானக் கோவில். கோவிலை மிகவும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். தமிழ் மக்களின் நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கோவில்கள் எல்லாம் நன்றாகத்தான் பாதுகாக்கப்படுகின்றன. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் தான் பாழ்படுத்தப்படுகின்றன. அதனால் தான் பொங்கி எழுகிறார் தலைவர் H Raja .
உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய நம் தமிழர்கள், நம் இந்து மதத்தின் முக்கிய சின்னமான கோவிலை ஆங்காங்கே நிறுவி பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களாகிய நாம் தான், நம் கண் முன்னே நம் கோவில்களும் அவற்றின் பாரம்பரியமும் திட்டமிட்டே சிதைக்கப்படுவது கண்டும், கொஞ்சம் கூட உணர்வோ, அறிவோ இல்லாமல் சும்மாயிருக்கிறோம்!
நம் கோவில்கள் இல்லையெனில்
நம் தெய்வங்கள் இல்லை;
நம் ஆன்மிகம் இல்லை;
நம் மதம் இல்லை;
நம் பாரம்பரியம் இல்லை;
நம் பண்பாடு இல்லை;
நம் கலாசாரம் இல்லை;
நம் வரலாறு இல்லை;
நம் வாழ்க்கைமுறை இல்லை;
நம் பெருமைகள் இல்லை;
நம் அடையாளம் இல்லை.
மொத்தத்தில்,
கோவில்கள் இல்லாமல் தமிழ் இல்லை, தமிழன் இல்லை!
மோரே தமிழர்களின் செயல்களும்,
மோரேவிலிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மனும்
தமிழகத்திலிருக்கும் இந்து தமிழர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும் என்று நம்புவோம்...
Comments
Post a Comment