வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான அலசல் !

 

வடநாட்டு தொழிலாளர் தமிழ்நாட்டில் பெருக காரணம் என்ன? - நேர்மையான  அலசல் !

கொரனா வந்து 3 மாதங்களாகிவிட்டது......

அந்த நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும்....... பழைய செய்திகளாகிவிட்டது.. மக்களுக்கும் பழகிவிட்டது......இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள்......முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்... கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது... இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்.. இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்... எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்.. எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்... பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன... எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்... இதற்கு நடுவில் கொரனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு.....வேலையிழந்தோர் பல லட்சம் ......


இதற்கு பிண்ணனியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...


1. மது..

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது... தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்... உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து , உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது... குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரமோ செய்ய முடிவதில்லை.. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை... அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்... வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...

இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும், இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூக விரோதிகளாகவும் உருவாகும் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...


2. 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால் பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர். சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்.. சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்... மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.


3. நூறுநாள் வேலை..


இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை... ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை.. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்.. வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...


4. இலவசங்கள்...

அரசு தரும் இலவச பொருட்களும், ஊரக வேலைவாய்ப்பு திட்டமும் மக்களை உழைக்க விரும்பாத, சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..


5. நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்.. அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை... 


இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...  சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்.. 10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பள பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..


தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்... ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது... தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுனர்கள் ஒருநாளைக்கு பெறும் ₹850-1000 சம்பளத்திற்கு , (பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட வடநாட்டவர்கள் ...... 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்கள்.. தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது.. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்... 


இதுதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன்  வேலைகளுக்கும்... 


நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை... சொல்லப்போனால் இங்கு உள்ள 100% பானிபூரி வண்டிகளில்  30% கூட வட இந்தியர்களுடையதல்ல.. 70%க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்... 


கடைசியாக..


நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது... வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்... இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசுகளே சாராயத்தை விற்று லாபத்தை தேடுவதுதான் உச்சபச்ச கொடுமை...


கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள்  எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும்...


ஆம்..


#தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கோர் குணமுண்டு# என்னவாயிற்று தமிழர்களுக்கு?


 பணப்புழக்கம்.

ஏன் இங்கு இல்லை.


இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்கு காரணம் ஏன் எது?


தமிழர்கள்  உடல் உழைப்பை விரும்புவதில்லை.... அதோடு சாராயம் மது மற்றும் சோம்பேறித்தனம் லேசான வேலையை செய்ய, உழைக்காமல் தினமும் இரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் என்ற மன நிலை. அரசியல், கட்ட பஞ்சாயத்து அல்லது போராட்டத்தில் மூன்று மணி நேரத்தில் சம்பாத்தியம், அரசியல்வாதிகளைப் போல் கொள்ளையடித்து ஏமாற்றி பொய் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


ஒரு நண்பர் கீழ் கண்டவாறு கூறினார் .

நான் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல். கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் பேர்களுக்கு வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன், வண்டி வாகனங்கள் இதையெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள், இப்பொழுது வேலை செய்வது  இல்லை, முழுவதும் வட நாட்டு மக்களுக்கு தான் வேலை தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது இல்லை அதனால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே உடல் உழைப்பு தந்து தனது பொருளாதாரத்தை வலிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... விரைவில் தமிழனும் பிச்சை எடுப்பான் அன்று புரியும்.


ஹார்டுவேர்ஸ், பெயின்டர்கள் கார்பெண்டர்,பெரிய ஆள் ஹெல்பர்கள் ,பிட்டர்கள், டெய்லர்கள் , மேஸ்திரிகள். முக்கிய தொழிலாக ஹோட்டல்கள், ஹோட்டல்களில் வேலை செய்பவர் , மாஸ்டர்களே இப்பொழுது வட நாட்டவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா தரப்பட்ட உடல் உழைப்பு தரும் ஆட்கள்.


தாம்பரத்தில் முக்கிய ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட நாட்டவர் அவரிடம் பேசினோம் அவர் சொன்ன விவரங்களுக்கு தலை கிறுகிறுத்தது,


மாதம் மாதம் 10,000.(பத்தாயிரம்) அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்து தொழிலாளி சொன்னார் அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் .


வந்தப்பின்தான் யோசித்தேன் இந்த ஒருவர் மாதம் 10,000.அனுப்புகிறார் ,இப்படி 10.பேர் அனுப்பினால் #ஒருலட்சம் 


நூறுபேர் அனுப்பினால் # பத்து லட்சம்


ஆயிரம் பேர் அனுப்பினால் # ஒரு கோடி 


பத்து லட்சம் பேர் அனுப்பினால் #  ஆயிரம் கோடி 


மனம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது முதலில் இவரின் கூட்டம் தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது என குத்து மதிப்பாய் கணக்கு எடுப்போம் என பலரிடம் கேட்டேன். தொழில் நகரங்களான பெரும் நகரங்களில் மாவட்ட அளவில் உதாரணத்திற்கு

 #திருப்பூரில்  மூனு லட்சம் பேரும் #கோவையில்_ஏழுலட்சம் பேரும் 

#சென்னையில்_ இருபது லட்சம் பேரும் இருப்பார்கள் என சொன்னார்கள் அப்போ சேலம் ஈரோடு போன்ற இன்ன பிற மாவடங்களில் எவ்வளவோ தெரியாது என்றார்கள் அதிர்ச்சியில் உறைந்துபோன நான் , சென்னை ,கோவை, திருப்பூர் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுத்து , கணக்கு பார்த்தேன் மொத்தம் முப்பது லட்சம்பேர் ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம் என்றால் 30லட்சம் பேர்க்கு கணக்கு போட்டேன் #மூனாயிரம்கோடி எனக் காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது .


மாதம் மாதம் 3,000 கோடி என்றால் வருடத்திற்கு 36,000 கோடி இது அனைத்தும் #தமிழ்நாட்டில் #புழக்கத்தில் இருந்தால், அந்த சிறு பணம் புழக்கம் கொண்டு தமிழக மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப்பணம் #வடமாநிலங்களில் புளங்கிக் கொண்டிருக்கிறது .அங்கே இருக்கும் மக்களையும் சிறு குறு பெரும் வியாபாரிகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது .


இது வெறும் தமிழகத்தின் மூனு மாவட்டக் கணக்கு ,மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநில தொழிலாளிகளை குத்து மதிப்பாய் கணக்கெடுத்து  கூட்டிப் பார்த்தால் தலை சுத்தி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும்  இறந்துவிடுவோம். 


இது வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கு இன்னும் வடமாநில சுய தொழில் செய்யும் வியாபாரிகள், முதலாளிகள் போன்றோர்களை கணக்கெடுத்து அவர்கள் ஈட்டும் வருமானங்களை கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ நினைத்து பார்க்க முடியவில்லை.


இன்னொரு பிரச்சினை பணப்புழக்கம் இல்லாமல் இருக்கும் காரணம் கைத்தொழில், எல்லாவகையான சிறு பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது . அதனால் லட்சக்கணக்கான பொருட்கள் அதாவது, உளி , சுத்தியல் ஆரம்பித்து  மருத்துவர் போடும் ஊசி வரை. அப்போது ஏற்கெனவே இங்கு இருந்த இந்த தொழில் அது ஒரு தனி கதை.


சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும் இந்த மாபெரும் பொருளாதார போராட்டத்தில் தமிழன் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும் உணர முடிகிறது இதை தமிழன் எப்போது உணர்வது.?. 


மிகவும் கொடுமையானது ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம். பயிர் தொழில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர்கைகளில் சென்று கொண்டுள்ளது, களை எடுத்தல், அறப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் இனி என்னாகும் யோசியுங்கள்.


பட்டாலும் கெட்டாலும் வருந்தாத திருந்தாத தமிழன் இருக்கும்வரை தமிழனக்கு எதிரான இந்தப் பொருளாதாரப்போராட்டம் தொடர்ந்து நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும். இந்த பிச்சைக்கார நிலைமையில் அந்நிய சக்திகளின் தேசவிரோத நடவடிக்கைகளுக்கும் நம் தமிழர்கள் விலை போகிறார்கள். #தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும் போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும்.?.


வாழ்க தமிழ். தமிழ்நாடு. தமிழ் மக்கள்.

-------=====-------

 எனது நண்பரிடம் இருந்து எனக்கு வந்த பதிவு. மனம் சங்கடப்பட்டது. பகிரத் தோன்றியது பகிர்ந்தேன்.

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai