கிருஷ்ணன் பிறந்தபோதே அவனுக்கு எதிராக - அவனுடைய தொப்புள்கொடியை அறுக்கு முன்பே - உயிர்க் கொடியை அறுக்கத் திட்டங்கள் தீட்டிய கம்சனை எதிர்கொண்ட கிருஷ்ண பரமாத்வைப் போல்... தனிமனித வெறுப்புப் பிரசாரத்துக்கும், துவேஷப் பிரசாரத்துக்கும் ஆளான "சித்தாந்தக் கருத்தியல் கம்சர்களால்" சூழப்பட்ட தலைவன்... அர்பன் நக்சல்கள், பிரிவினை வாதிகள், பிரதேச வெறியர்கள்.... எவர் எதிர்த்தாலும் என் மக்களைக் காத்தே தீருவேன் என்ற கற்பாறை போன்ற மன உறுதியுடன் 100 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுக் காத்து சாதனை படைத்த தலைவன்...

 


ஒரு பிரதமர், ஒரு முன்னாள் பிரதமர் ஆகிய இருவரைத் தீவிரவாதத்துக்கு பலி கொடுத்த பாரத நாட்டில்... 


கண்மூடித்தனமான ஊடகப் பிரசாரத்தாலும், வெறித்தனமான எதிர்க்கட்சிகளின் துவேஷப் பிரசாரத்தாலும் வெறியூட்டப்பட்ட சமூகத்தின் சில பகுதிகளில்... 


சகஜமாக வளையவரும் பாரதத்தின் பிரதமருக்கு இத்தகைய வலுவான பாதுகாப்பு தேவைதான்! 


இந்த பாரத நாட்டில் வேறு எந்தப் பிரதமருக்கு எதிராகவும் சில பகுதிகளில் - சில சமூகத்தினர் மத்தியில் - இவ்வளவு வன்மமும், துவேஷமும் கொண்ட வெறிப் பிரசாரம் செய்யப்பட்டதில்லை! 


அந்த வெறிப் பிரசாரம் பலவும் வெறுப்பையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டவை! 


50 வருடங்களுக்கும் மேலான - அதற்கும் முந்தைய காலப் பகுதி! தமிழகத்திலேயே 16 வயதானால் - SSLC முடித்தால் - பெண்களுக்கு 'வரன்' தேட ஆரம்பித்துவிடுவார்கள்! இந்த சமூகம் என்றில்லை பல சாதிகளிலும் கல்லூரிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு - "நல்ல மாப்பிள்ளை" அமைந்தால் பெண்களை மணமுடித்துக் கொடுத்துவிடுவார்கள்! 


வட இந்தியாவில் 50 - 60 வருடங்கள் முன்பு சகஜமாகவும் -ஏன் இன்றும் சில பகுதிகளில் "பால்ய விவாஹம்" ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாகவும் நடக்கத்தான் செய்தது/ செய்கிறது. 


அப்படி உடலும் மனமும் முதிரா இளைஞனாக - ஏன் சிறுவனாக - ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்நாளைய அப்பிரதேசத்தின் சமூக வழக்கப்படி ஏதோ ஒரு "சிறார் திருமணத்துக்கு" ஆட்பட்டவர் மோடி! 


பிறகு அந்த பந்தத்தில் ஈடுபடாமல் - தம்மை RSS இயக்கத்துக்கு ஒப்புக் கொடுத்து - அர்ப்பணிப்பு மிக்க சேவையால் உயர்ந்து - பிறகு பாரதீய ஜனதா என்ற அரசியல் களத்துக்கு வந்து... 


தனது ஜீவனைப் பொது வாழ்க்கைக்கு என்றே அர்ப்பணித்தவர் மோடி! 


ஆனால் அவரை - ஒரு பெண்ணை மனைவியாக்கி - ஏதோ தாம்பத்ய வாழ்க்கையில் ஊறித் திளைத்து - பிறகு அப்பெண்ணை நிர்க்கதியாக விட்டு வந்தவரைப் போல என்ன ஒரு அநாகரிகமாக வசை பாடினார்கள்! 


"பொண்டாட்டியைக் காப்பாற்ற வக்கில்லாத மோடியா நாட்டைக் காப்பாற்றப் போகிறார்?" - என்று கேவலமாகப் பேசினார்களே! 


என்ன ஒரு கயமை கலந்த வெறித்தனம்! 


ஸ்விஸ் வங்கியில் குவித்து வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராத கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டால்.... 


"ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் கொடுக்கலாம்!"- என்று அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதற்காக மோடி அவர்கள் உருவகமாகக் குறிப்பிட்டதை... 


"எங்கே எனது கணக்கில் 15 லட்சம்? மோடி கொடுத்தாரா?"- என்று சீன் போடுகின்ற படித்த பட்டிமன்றப் பன்னாடைகளும், சிந்தனையாளர்களும், கல்லூரி பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 'புத்திசாலிகளும்' உள்ள தேசமாயிற்றே நமது தேசம்? குறிப்பாக நமது மாநிலம்! குறிப்பாக நமது பல ஊடக விவாதிகள்! குறிப்பாகப் பல ஊடக நெறியாளர்கள்! 


CAA என்ற சட்டமே.... 


வங்கதேசம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அங்கே சிறுபான்மையாக உள்ள - சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகியோர்... 


அந்த நாடுகளில் ஒடுக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தால் அவர்களுக்கு "இந்தியக் குடியுரிமை" வழங்கிடும் சட்டம்! 


அதை அப்படியே திருப்பி... 


"இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுவார்கள் - மோடி ஒழிக!"- என்று பொய்பிரசாரத்தைக் கிளப்பிவிட்ட ஊடகங்களும், கட்சிகளும் இங்குதானே உள்ளன??!! 


மருத்துவமோ ஏதோ படிக்கும் ஒரு முட்டாள் பேதைப் பெண் - "எனக்கு நிறைய முஸ்லீம் காலேஜ்மேட்ஸ் இருக்காங்க! அவங்களை எல்லாம் பாகிஸ்தானுக்கு துரத்திடுவாங்க! அதுதான் நாங்க வீதிக்கு வந்து போராடறோம்!"- என்று பேட்டி கொடுத்த வீடியோவையும் பார்த்தோமே! 


அந்த அளவுக்குப் படித்தவர்களையும் அறிவு மழுங்க வைக்கும் ஊடகங்கள் உள்ள நாடாயிற்றே! 


அந்த அளவு திட்டமிட்ட மோடி எதிர்ப்பு வெறிப் பிரசாரம்! 


அவர் எது செய்தாலும் எதிர்க்க வேண்டும் - எது கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும்! 


தடுப்பூசி...! உலகமே பெருந் தொற்றால் விழுங்கப்பட்ட போது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இலவசமாக... ஆம்! இலவசமாக தடுப்பூசி கிடைக்க வகை செய்தது மோடி தலைமையிலான பாரத அரசு! 


அந்தத் தடுப்பூசிக்கு எதிராக எத்தனை பீதிகளை, ஊகங்களை விவாதங்கள் என்ற பெயரில், பேட்டிகள் என்ற பெயரில் கிளப்பிவிட்டன ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும்! 


"தமிழன் என்ன சோதனை எலியா?" - என்று ஆவேசப்பட்ட தலைவர்கள் உண்டு! 


ஒரு  நடிகர் - அவருக்கு இருந்த சில ஏதோ சில முன் உபாதைகளாலோ, புகை மது போன்ற பழக்கங்களாலோ - தடுப்பூசி போட்ட மறுதினம் மாரடைப்பால் இறந்துவிட... 


உடனே இந்த ஊடகங்கள் என்ன ஒரு அயோக்கியத்தனமான ஒப்பாரி! வேறு ஒரு முட்டாள் நடிகன் தடுப்பூசிக்கு எதிராக உளறிய பேட்டியை எத்தனை முறை காட்டிக் காட்டி பீதியைக் கிளப்பின! 


இந்த மண்ணின் எந்தப் பிரதமரும் எதிர்கொள்ளாத அளவு... 


தறுதலை ஊடகங்களின் விஷ(ம)ப் பிரசாரத்தை சந்தித்த தலைவன்... 


சில்லறைப் பயல்களால் அளவு மீறிய துவேஷத்துடன் வசைபாடப்பட்ட தலைவன்... 


"இன்னும் ஏன் மோடி - அமீத்ஷா சோலியை முடிக்காம இருக்கீங்க?" என்று இஸ்லாமியர்கள் அடங்கிய கூட்டத்தில் ஒரு தறுதலைப் பேச்சாளன் பேச - அதற்கு மேடையிலும் சபையிலும் இருந்தவர்கள் கை தட்டி மகிழ... 


அந்த அளவு வெறுப்புப் பிரசாரம் விதை ஊன்றப்பட்ட மண்ணில் உலா வரும் வீர மைந்தன்... 


கிருஷ்ணன் பிறந்தபோதே அவனுக்கு எதிராக - அவனுடைய தொப்புள்கொடியை அறுக்கு முன்பே - உயிர்க் கொடியை அறுக்கத் திட்டங்கள் தீட்டிய கம்சனை எதிர்கொண்ட கிருஷ்ண பரமாத்வைப் போல்... 


தனிமனித வெறுப்புப் பிரசாரத்துக்கும், துவேஷப் பிரசாரத்துக்கும் ஆளான "சித்தாந்தக் கருத்தியல் கம்சர்களால்" சூழப்பட்ட தலைவன்...  


அர்பன் நக்சல்கள், பிரிவினை வாதிகள்,  பிரதேச வெறியர்கள்....


எவர் எதிர்த்தாலும் என் மக்களைக் காத்தே தீருவேன் என்ற கற்பாறை போன்ற மன உறுதியுடன் 100 கோடி மக்களுக்கு மேல் தடுப்பூசி போட்டுக் காத்து சாதனை படைத்த தலைவன்... 


அந்த மாமனிதனைப் பாதுகாக்க... 


துவேஷிகளும் - துரோகிகளும் நிறைந்த மண்ணில்... 


இந்தப் பாதூகாப்பு போதாது - இன்னமும் வேண்டும்! 


தறுதலை ஊடகங்களுக்கு ஒரே ஒரு தகவல்! அது பாரதப் பிரதமரின் பாதுகாப்பு வாகனம்! மோடி ஏதோ அதை சொந்த உபயோகத்துக்கு அவர் வீட்டு ஷெட்டில் கொண்டு போய் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை! 


ஊசிக் காதுக்குள் ஒட்டகம் நுழைவது போல், அத்தைக்கு மீசை முளைப்பது போல், காளைமாடு கறவையாக மாறுவது போல்... 


தப்பித் தவறி பாஜக அல்லாத ஒரு அரசு மத்தியில் ஆட்சி அமைத்தால் - அந்த அரசின் பிரதமருக்கும் இதே வாகனம் பயன்படும்! 


மோடிக்காக வாங்கிய காராம்! முட்டாள் ஊடகங்கள்!


- Murali Seetharaman 🔥🧡

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.