மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே., உங்களைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்பு தெரியவில்லை.

 


 
ரிபப்லிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மோடிஜீக்கு எழுதிய கடிதம் கண்ணீரை வரவழைப்படுத்துகிறது.

மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே.,

உங்களைப் போன்ற ஒரு பிரதமரை பெறுவதற்கு நாங்கள் இன்னும் தகுதி பெறவில்லை.
 பெரும்பாலான மக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்பு தெரியவில்லை.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் நாட்டு மக்களுக்காக உழைக்கிறீர்கள் உங்களுடைய பெரும்பாலான ஓய்வு நேரத்தையும் தியாகம் செய்கிறீர்கள்.
 ஆனால்
 உங்களுடைய உழைப்பு காண அங்கீகாரத்தையும்., பாராட்டையும் ஒரு நாளும் நீங்கள் பெறவில்லை.

ஆனால் சின்னஞ்சிறு விஷயமானாலும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நாட்டு மக்கள் இந்த தேசத்தை 60 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்து இருந்தார்கள்.
 ஆனால் 
ஐந்து வருடம் உங்களிடம் இந்த நாட்டை ஒப்படைத்து பொறுமை காக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் போலி அரைவேக்காடு அறிவுஜீவிகளும்., சோம்பேறி மனிதர்களும்.

இந்த சோம்பேறி மனிதர்களால் நான்கு பேர் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தையே அமைதியாக நடத்த முடியவில்லை.
 ஆனால் 
அவர்கள் உங்களுக்கு இந்த நாட்டை வழிநடத்த அறிவுரை கூற ஒருநாளும் வந்ததில்லை.

இந்த நாட்டின் பிரதமரான ஒரே குற்றத்திற்காக இந்த மக்கள் உங்களை பழிவாங்கத் துடிக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுகளை சற்று எண்ணிப்பாருங்கள். அவர்கள் எட்டாவது பத்தாவது கூட படிக்காதவர்களை தேர்வு செய்துள்ளனர். 
ஆனால் 
அவர்கள் உங்கள் சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை தேர்வு செய்யவில்லை.

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் குரலாக இருப்பது என்னவென்றால் இன்று தேர்தல் வந்தால் மோடி தோல்வி அடைந்து விடுவார்.

இந்த நாட்டின் மேன்மைக்காக கடின உழைப்பை செலுத்திய பிறகும் இவ்வாறான விமர்சனங்களை என்னால் கேட்கமுடியவில்லை. 

இந்த நாடு வல்லரசு இலக்கை நோக்கி சொல்லும் உண்மையை இந்த மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாடு ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
 ஆனால்
 இந்த மக்களுக்கு இவை எல்லாம் வேண்டாம். அவர்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கிலோ துவரம்பருப்பு ஒரு ரூபாய்க்கும்., இலவச வெங்காயமும் கிடைத்தால் போதும்.
 இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி மிகப் பெரியதாக இருக்கும். இந்த நாட்டு மக்கள் ஊழலுக்கு பழக்கப்பட்டு விட்டார்கள். 
ஊழலை சகித்தும் கொள்கிறார்கள்.

நாட்டில் பொறுமையாக நடைபெறும் வளர்ச்சிப் பாதையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 2024 உங்களை பிரதமராக பார்க்க முடியாதோ என்று. 

இந்த நாட்டு மக்கள் யாரோ ஒரு பப்புவை யாராவது வழிநடத்த தேர்ந்தெடுப்பார்கள். இந்த நாட்டு மக்கள் உருளைக்கிழங்கும் துவரம்பருப்பும் இலவசமாக கொடுப்பவர்களுக்கு அடிமையாக இருக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த நாட்டின் வரலாற்றில் இருந்து இந்த மக்களைப் பற்றி புரிந்து கொள்வது என்னவென்றால்.
 யாரும் மாறுவதற்கு தயாராக இல்லை ஆனால் அனைவருக்கும் மாற்றம் வேண்டும்.

 எல்லா மக்களும் 4G பேக்கேஜில் ஸ்மார்ட்போன் வைத்துக்கோண்டு வாய்கிழிய பேசுகிறார்கள்.
 600 ரூபாய்க்கு 4ஜி பிளான் செலவு செய்கிறார்கள். 
ஆனால் துவரம்பருப்பு விலை ஏறிவிட்டதாக புலம்புகிறார்கள். 
இது நம்பும்படியாகவா இருக்கிறது.

பிரதமர் அவர்களே நீங்கள் உலகின் மிக சக்திவாய்ந்த முதல் 10 நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் இந்த நாட்டு மக்கள் கருதுவதில்லை. 

இது போன்ற செய்திகள் வரும்பொழுது இவர்கள் செவிடர்களாகவும் குருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இந்த வயதில் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டும் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பு கடமை உணர்ச்சி அற்பணிப்பு இவற்றின் மதிப்பு எல்லாம் இந்த நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. இது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

 ஜெய்ஹிந்த் 

#அர்னாப்_கோஸ்வாமி 
குடியரசு தொலைக்காட்சியிலிருந்து.

மீள் பதிவு


Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது