கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பியாந்த் சிங் கிற்கு ஆதரவாக வழக்காட அப்போதைய பாரதீய ஜனதா கட்சி யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த.... மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அவர்கள் தயாரான போது வாஜ்பாய் அவர்கள் நம் தேசத்தின் பிரதமரை கொலை செய்த ஒரு குற்றவாளி நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை சிதறடிக்க செய்யும் ஒரு சர்வதேச சதியின் கருவி அவனுக்கு ஆதரவாக நீங்கள் வழக்காடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்
ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் வலுவான எதிரணியாக... ஆளுமையாக இருந்தபோதிலும் ....
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட பியாந்த் சிங் கிற்கு ஆதரவாக வழக்காட
அப்போதைய பாரதீய ஜனதா கட்சி யின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த....
மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அவர்கள் தயாரான போது
வாஜ்பாய் அவர்கள் நம் தேசத்தின் பிரதமரை கொலை செய்த ஒரு குற்றவாளி
நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை சிதறடிக்க செய்யும் ஒரு சர்வதேச சதியின் கருவி
அவனுக்கு ஆதரவாக நீங்கள் வழக்காடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்
அதையும் மீறி அவர் ஆஜரான போது அவரை கட்சியில் இருந்து வெளியேற்றினார்
அன்று முதல் இன்று வரை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அதன் பரிவாரங்கள் எதுவுமே .....
இந்திரா காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியது கிடையாது
அதே நேரத்தில் இந்திராவின் கொலையில் முன்னிறுத்தி சீக்கிய மக்களுக்கு எதிராக.....
நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையும் நியாயப்படுத்திப் பேசியது கிடையாது
இரண்டு விஷயங்களுக்கும் இடையில் தராசு போல இருந்து உண்மையான நடுநிலையை காத்துவரும் தேசப்பற்றாளர்கள் அவர்கள்
அதே வாஜ்பாய் அவர்கள் தான் தனது ஆட்சிக்காலத்தில் ராஜீவ் கொலை குற்றத்தின் பின்னணியை முழுமையாக ஆராய்ந்து
அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜெயின் கமிஷன் என்று ஒரு கமிஷனை அமைத்தார்
அடுத்து வந்த பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி அதை குப்பையில் போட்டது
இன்று வரை ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும்
அவர்களுக்கு விடுதலை வழங்கவும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சி பாஜக கட்சி மட்டுமே
காங்கிரஸ் கட்சியே ஓட்டுவங்கி அரசியலுக்காக ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை வைத்து
அரசியல் செய்யும் போது கூட பாஜக தன் நிலைப்பாட்டிலிருந்து இம்மியளவும் மாறாது இன்றுவரை எதிர்க்கட்சி அரசியல் என்பது வேறு
நம் தேசம் தேசத்தின் இறையாண்மை என்பது வேறு என்ற நிலைப்பாட்டில் தனித்துவம் மாறாமல் நிற்கிறது
லால்பகதூர் சாஸ்திரியின் மரணம் ஆகட்டும் ராபர்ட் ராஜசேகர் ரெட்டியின் மரணம் ஆகட்டும்
இரண்டுமே பாஜகவிற்கு அரசியல் சித்தாந்தம் கடந்த மன வருத்தம் தான் இன்று வரை
பாஸ்டன் விமான நிலையத்தில் போதைப் பொருளுடன் பிடிபட்டு...
பாஸ்போர்ட் முடக்கப்பட்டு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு
சிறை செல்ல வேண்டிய நிலையில் இருந்த காங்கிரஸின் இளவரசனை ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடந்தால் காற்றில் பறக்க போவது
பாரதத்தின் மானமும் தான் என்று சுப்ரமணியன் சுவாமியின் மூலமாக உடனடியாக களமிறங்கி இரண்டு மணி நேரத்தில் அவருக்கு தேவையான....
புதிய இந்திய பாஸ்போர்ட்டை வழங்கி பத்திரமாக பாரதம் அழைத்து வந்த ஆர்எஸ்எஸ் வளர்த்த மகான் தான் திரு வாஜ்பாய் அவர்கள்
அவரின் வழிவந்த அவரின் சிஷ்யர் இன்று உங்கள் (சோனியா காங்கிரஸ்)ஆட்சி நடக்கும்....
ஒரு மாநிலத்தில் பயணிக்கும்போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருக்கிறது
அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும்படியான நிகழ்வு நடந்திருக்கிறது
ஆனால் அது அத்தனையும் அவர் பொறுமையாக கடந்து வந்திருக்கிறார்
நம்மை விட நம் தேசம் பெரிது மக்கள் பெரிது என்று தன் உயிரை துச்சமென நினைத்து இருக்கிறார்
இன்றுவரை அவர் வாய் திறந்து சோனியா காங்கிரஸ் கட்சியையும்... பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் தலைமையையும் ஒரு வார்த்தை கூட குற்றமாக பேசவில்லை
ஆனால் அவரை வழிமறித்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் படியான நிகழ்வை செய்ததற்கு தார்மீக பொறுப்பேற்று
அதற்காக அவரிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய நீங்கள் (சோனியா காங்கிரஸ்) இப்படிப்பட்ட ஒரு தீராத அவமானத்தை நம் கட்சியும் நம் அரசும்
இந்த நாட்டிற்கு தேடித் தந்திருக்கிறது என்ற கூனி குறுக வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்கள் (சோனியா காங்கிரஸ்? இன்று அந்த நிகழ்வை ஏதோ ஒரு ....
பெரிய வெற்றி சரித்திரம் போல கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்படிப்பட்ட பிறவிகளாக இருக்க முடியும்?
நீங்கள் சொல்வது போல் காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரம் பெற்றுத் தந்த இயக்கம் ....
தேசபக்தர்கள் கூடாரம் என்றால்...
இன்று எங்கே போனது உங்களின் தேசபக்தி?
நீங்கள் சொல்வது போல் நீங்கள் எல்லாம் உங்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு.....
விசுவாசமாக இருக்கும் தொண்டர்கள்
என்றால் எங்கே போனது ....
இன்று உங்களது கட்சி கொள்கை தலைமை மீதான உங்களின் விசுவாசம்?
அப்படியானால் ஒன்று உங்களின் கட்சியும் தலைமையும் இந்த தேசத்திற்கும் ....
இங்குள்ள மக்களுக்கும் எதிரான நிலைப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும்?
இல்லையேல் நீங்கள் யாவரும் உங்கள் கட்சிக்கும் தலைமைக்கும் துளியும் விசுவாசமில்லாத கட்சி துரோகிகளாக இருக்கவேண்டும் ?
இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்....
எது உண்மை என்பதை விளக்குவீர்களா?
Comments
Post a Comment