நான் ஒரு புரட்சிகரமான இளைஞரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் மீது அளவுகடந்த மரியாதையை நான் வைத்திருக்கிறேன். காரணம் இந்தியாவில் காந்தியை எதிர்த்த ஒரே மனிதன் அவர் தான். அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
#OSHO_ON_NETHAJI
நான் ஒரு புரட்சிகரமான இளைஞரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் மீது அளவுகடந்த மரியாதையை நான் வைத்திருக்கிறேன். காரணம் இந்தியாவில் காந்தியை எதிர்த்த ஒரே மனிதன் அவர் தான். அவர் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
காந்தியிசம் என்பது அரசியல் மட்டுமே வேரொன்றும் இல்லை என அவர் உணர்ந்திருந்தார். காந்தியும் நேதாஜியும் ஒரே கட்சியில் இருந்தாலும் காந்தியோடு எந்த ஒட்டுதலும் இல்லாமல் தான் நேதாஜி இருந்தார். இந்தியாவில் சுதந்திரத்திற்கு போராடிய ஒரே கட்சியாக அது இருந்ததால் எல்லா சுதந்திர போராட்ட வீரர்களும் அந்த கட்சியில் இருக்க வேண்டியதாயிற்று. காங்கிரசின் தலைவராக பணியாற்ற நேதாஜிக்கு எல்லா தகுதியும் இருந்தது. அப்போது தான் காந்தியின் போலி முகம் வெளித் தெரிந்தது. நேதாஜி எந்த பாசாங்கும் இல்லாதவராக இருந்ததால் அவர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற எல்லா வாய்ப்பும் இருந்தது. அவரை வீழ்த்த காந்தி செய்த செயல்கள் அவரை தரம் தாழ்த்திவிட்டது. மிகப்பெரிய சந்நியாச நிலையிலிருந்து அவரை கீழ்நிலை மனிதனாக்கிவிட்டது.
காந்தி என்ன செய்தாரென்றால் வேரொறு போட்டியாளரான டாக்டர் பட்டாபி சீதாராமையாவை ஆதரித்தார். அவர் என்ன நினைத்தாரென்றால் தான் ஆதரிக்கும் மனிதன் தான் வெற்றி பெருவார் என. நேதாஜி இளம் இரத்தங்களைக் கொண்ட இளைஞர்களின் நாயகனாக இருந்தார். டாக்டர் பட்டாபி யாரும் அறியாத மனிதராக இருந்தார். காந்தியை பின்தொடர்பவராகவும் சேவை செய்பவராகவும் இருந்தாரே ஒழிய நாடறிந்தவராக அவர் இல்லை.
நேதாஜி எனும் சிங்கம் போட்டியிட்டு யாரும் எதிர்பாரா வண்ணம் வெற்றிபெற்றுவிட்டார். நேதாஜி பதவியேற்பு விழாவிற்கு காந்தி செல்லவில்லை. தன்னுடைய தத்துவத்தையே காந்தி தவறவிட்டுவிட்டார். நேதாஜி தான் ஒரு பெரிய மனிதன் என்பதை அப்போது நிரூபித்தார். காந்தி காங்கிரசை பிளவு படுத்த முற்படுவதால் அது சுதந்திர போராட்ட இயக்கத்தையே பிளவுபடுத்திவிடும் என நேதாஜி நினைத்தார். உடனடியாக தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காந்தியோடு சண்டையிட விரும்பாமல் தன்னுடைய நிலையில் திருப்தி அடைந்தவராக நாட்டை விட்டே வெளியேறினார்.
நேதாஜி ஆரம்பம் முதலே தன் நேர்மையை நிரூபித்து வந்தார். அவர் இங்கிலாந்தில் பயின்று அதிகாரம் மிக்கவராக இருந்தார். மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் வங்காளத்தில் பிறந்தவர் அவர். இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் அவரோடு பட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே. 1% க்கு மட்டுமே இந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மற்றவர்களை சிறுசிறு காரணங்களைச் சொல்லி ஆங்கிலேயர் விலக்கிவிடுவார்கள்.
சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அறிவாளியான ஷ்ரி அரபிந்தோ ஒரு சிறு காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார். குதிரையேற்றத்தில் அவர் தோற்றுவிட்டார். ஒரு அதிகாரியாவதற்கும் குதிரையேற்றத்திற்கும் என்ன சம்பந்தம். ஞானியாகவும் உலகப்புகழ் பெற்றவராகவும் அவர் இருந்ததால் அவர் நிராகரிக்கப்பட்டார். நேதாஜியிடம் அவர்கள் யுக்தி பலிக்கவில்லை. அவர் எல்லாவற்றில் வெற்றி பெற்றார். வெள்ளைக்காரர்கள் வேறு வழியின்றி நேதாஜியை ஐசிஎஸ் ஆக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதற்கு முன்பு அவர் கவர்னர் ஜெனரலை சந்திக்க வேண்டியிருந்தது.
வங்காளிகளுக்கு ஒரு வழக்கமிருந்தது. அவர்கள் எங்கே சென்றாலும் தன்னுடன் குடையை கொண்டு செல்வார்கள். மழை இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடை அவர்கள் கையிலிருக்கும். எப்போதும் கையில் குடையை வைத்திருப்பர்களைப் பார்த்தால் அவர்கள் வங்காளிகள் என நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நேதாஜி தலையில் தொப்பியுடன் கையில் குடையை எடுத்துக் கொண்டு கவர்னர் ஜெனரல் அரைக்குள் நுழைந்து எதிரே அமர்ந்தார்.
கவர்னருக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. ''உனக்கு மரியாதை தெரியாதா?'' எனக் கோபப்பட்டார். ''தொப்பியை கழற்றாமல் என்னுடைய உத்தரவில்லாமல் என் முன்னால் எப்படி அமரலாம்?'' என சத்தம் போட்டார். நேதாஜி தன் கையில் வைத்திருந்த குடையினை எடுத்து அதன் வளைவினைக் கொண்டு கவர்னரின் கழுத்தினை இறுக்கிப்பிடித்தார். நேதாஜி ''உனக்கு மரியாதை வேண்டுமானால் மரியாதையை மற்றவர்களுக்கு தர பழகிக்கொள். நான் ஒரு விருந்தாளி வருகிறேன். நீ எழுந்து என்னை வரவேற்றாயா?.. உன் தொப்பியை கழற்றினாயா?.. எனக்கு உத்திரவிட நீ யார்?.. அதிகம் உன்னால் என்ன செய்துவிட முடியும். என்னை ஐசிஎஸ் பதவிக்கு வரவிடாமல் தடுக்க முடியும். அவ்வளவு தானே.. நானே என் பதவியை நிராகரிக்கிறேன்''.. எனக் கோபமாக சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு நேதாஜி வெளியேறினார்.
நீ சுயமரியாதைக்காரனாக இருந்தால் இந்த சமுதாயம் உன்னைக் கண்டு பயப்படும். சமுதாயம் உன்னை கீழ்படிந்தவனாக காண விரும்புகிறது. சூழ்நிலைக்கைதியாக சமாதானம் நிறைந்தவனாக உன்னை காண சமுதாயம் விரும்புகிறது. இப்படி இருந்தால் உன்னால் புரட்சியாளனாக கிளர்ச்சியாளனாக மாறமுடியாது. நீ தனித்தன்மையானவனாக வாழ்வது தான் புரட்சி. உன்னுடைய தனித்தன்மையை எல்லா இடங்களிலும் பரவவிடு. உன்னுடைய ஜன்னல்கள்கூட அதற்கு தடையாக இருத்தல் கூடாது.
Comments
Post a Comment