மதமாற்றம் குறித்த மற்றொரு அனுபவம் ! தென் தமிழகத்தில் உள்ள ஒரு பிரபலமான நகரில் ஒரு கல்லூரிக்கு எல்லா வருடமும் என்னை Guest lecture-க்கு அழைப்பது வழக்கம் ! அது ஒரு கிறிஸ்துவ கல்லூரி.
மதமாற்றம் குறித்த மற்றொரு
அனுபவம் ! தென் தமிழகத்தில் உள்ள ஒரு பிரபலமான நகரில் ஒரு கல்லூரிக்கு எல்லா வருடமும் என்னை Guest lecture-க்கு அழைப்பது வழக்கம் ! அது ஒரு கிறிஸ்துவ கல்லூரி.
இருந்தாலும் வருடா வருடம் தொடர்ந்து நம்மை நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுக்கு என்ற புரிதலுடன் என்னை அவர்கள் அழைப்பதுண்டு ! முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் நானும் அதை பற்றி மட்டுமே பேசுவது வழக்கம் ! அவர்களும் அதை பற்றியே நம்மிடம் எதிர்பார்த்து நடத்தவும் செய்தார்கள்.
அந்த ஒரு குறிப்பிட்ட வருடம் வழக்கமாக எங்களை ஹோஸ்ட் செய்யும் ஆசிரியருக்கு பதிலாக புதிய ஒரு ஆசிரியரை நியமித்து இருந்தார்கள். ஆசாமி விவகாரமான பாணி நபர். ஒரு கிருத்துவ கல்லூரிக்குள் நெற்றியில்
விபூதி பூசிக்கொண்டு நுழைந்த என்னை பார்த்ததும் முதல் அதிர்ச்சி !
பின்னர் வகுப்பு தொடங்கும்போது அவர்கள் ப்ரேயர் எழுதியிருக்கும் பாட்டை ப்ரிண்ட் எடுத்து கையில் கொடுத்து நீங்களும் பாடுங்கள் என்றார்.
உங்கள் கல்லூரி மரபுப்படி நீங்கள் உங்கள் பிரார்த்தனைகளை பாடுங்கள் ! நான் எப்போதும் போல மரியாதையுடன் எழுந்து நிற்கிறேன். இந்த பாட்டெல்லாம் அவசியமில்லை என்று பேப்பரை திருப்பிக் கொடுத்துவிட்டேன். ஆசாமி கடுப்பாகிவிட்டார்.
பின்னர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு என்னிடம் வந்து நீங்கள் பேயை வணங்குவதால் என்ன கண்டீர்கள்? பிசாசை வணங்குகிறீர்கள் என்று பினாத்திகொண்டே இருந்தார்.
நானும் பதிலேதும் பேசாமல் பொறுமையாகவே இருந்தேன்.
நமக்கு எல்லா மதத்திலும் நண்பர்கள் உண்டு. நான் பொதுவாக இது மாதிரியான கமெண்டுகளை அடிப்பதும் இல்லை. யாருடைய வம்புக்கும் போவதும் இல்லை. அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுக்கு என்பதில் நான் மிகுந்த
நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
இன்று பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு நான் ஆளானேன்
லஞ்ச் பிரேக்
விட்டார்கள். நான் மெதுவாக அவரிடம் பேச்சுக்கொடுத்தேன் !
"சார் வாங்க ! ஒரு சந்தேகம் கேட்கணும் உங்ககிட்ட"
என்றேன்.
இதற்குள் ஆசாமி காலையில் என்னிடம் அளித்த கமெண்டுகளை மறந்து போயிருந்தார்.
"சார் ! பேய் பிசாசுன்னா என்ன சார்?" என்றேன்.
அவருக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மேலும் கீழும் முழித்துக் கொண்டிருந்தார்.
நான் சொன்னேன்:
" மனிதனாக பிறந்து
செத்துப் போய் திரும்பி வந்தால் அதைத் தான் பேய் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். உங்க ஊர் பக்கமும் அப்படித்தான் சொல்வார்கள் என்று எண்ணுகிறேன்."
"ஆமாம்" என்று இழுத்தார்.
நான் தொடர்ந்தேன்,
"எங்கள் விநாயகரோ, சிவபெருமானோ, விஷ்ணுவோ எங்கும் இறந்து போனதாக இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை! எந்த புத்தகத்திலும், ஏன் மாற்றுமத புத்தகத்திலும் கூட படித்ததும் இல்லை.
ஆனால் நீங்கள் உங்கள் கடவுளாக சொல்லக்கூடியவர் தான் மனிதனாக பிறந்து இறந்து போய் திரும்பி வந்திருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. உங்கள் புத்தகம் தான் சொல்கிறது."
ஆசாமி எதுவும் பேசவில்லை.
"ஆக உங்கள் புனிதநூலே சொல்கிறது அவர் மனிதனாக பிறந்து இறந்து போயி மீண்டும் வந்திருக்கிறார் என்று! இப்போது யார் பேயை பிசாசை வணங்குகிறார்கள் ?" என்று கேட்டேன்.
மனிதர் முணுமுணுத்துக் கொண்டே கிளம்பி போய்விட்டார்.
உபரி பலன் : அடுத்த வருடத்தில் இருந்து என்னை அந்த கல்லூரிக்கு கூப்பிடுவது இல்லை!
-திரு. அரவிந்த் சுப்ரமணியம்
Comments
Post a Comment