அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாது என என் தாய் சொன்னார்.. பழைய நினைவுகளைப் பகிரும் பிரதமர் மோடி... நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது. அனைத்து இடங்களிலும் என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாது என என் தாய் சொன்னார்..
பழைய நினைவுகளைப் பகிரும் பிரதமர் மோடி...
நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது. அனைத்து இடங்களிலும் என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால்,
என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நான் குஜராத் முதல்வராகத் தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்... ஆனால் என் தாய், என்னைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு கட்டியணைத்துக்கொண்டார்.
நான் இப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையேதான் செய்வார். அதுதான் அவரின் குணம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது.
நான் முதல்வரான பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னைக் கூறச் சொன்னார். அவர் என்னிடம், ‘ நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்துகொடு... அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது... அதற்கான காரணத்தையும் கூறுகிறேன்.
தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு..., உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தைப் பெற்றுக்கொண்டார்...
நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார்.... அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது...
தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்” எனக் குறிப்பிட்டுள்ளார்..
அப்பனின் தயவாலும் தாத்தனின் தயவால் மற்றும் இந்த ஒட்டு மொத்த குடும்பமும் கொள்ளை அடித்து கொண்டே வீட்டைக் கூட காலி செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அற்பபதர்கள் வாழும் நாட்டில்.
என்னை இன்றளவும் யோசிக்க வைப்பது ஒரே ஒரு நாள் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பங்ளாவிற்கு மோடிஜி யின் பதினைந்து வருடங்களில் முதலமைச்சராக இருந்த போது அவர் தாயார் எட்டிக்கூட பார்க்கவில்லை. அவரும் அதை யோசிக்கக் கூட இல்லை.
வாழும் ஒரு யோகி இன்று நாடாளும் ஒரு சக்கரவர்த்தி இன்றும் அவரின் தாயார் டில்லியின் மாளிகையை தொடக்கூட இல்லை என்ன ஒரு வாழ்க்கை இறைவா,
இந்த மனிதருக்கு நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும் சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என மனமுருகி வேண்டிக்கொள்கிறேன்.
Comments
Post a Comment