திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து... பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார் என என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்கள் கட்டிக்காக்கும் தர்மபரிபாலனத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு தமிழக பார்ப்பனர்கள்...
திரு.கல்யாண் ராமன், வன்னியர் சமூகம், பாஜக பிரமுகர் அவர்களின் உரையிலிருந்து...
பிராமணன், அந்தணன், பார்ப்பனன், ஐயர், ஐயங்கார் என என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவர்களையும், அவர்கள் கட்டிக்காக்கும் தர்மபரிபாலனத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை புரிய வைக்கத்தான் இந்த பதிவு
தமிழக பார்ப்பனர்கள்...
==========================
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வலுபெற்ற பார்ப்பன எதிர்ப்பு மனோபாவம் நம்மிடையே இன்னும் கூட இருக்கிறது. வலுவான ஒரு கும்பல் பிராமண எதிர்ப்பை முன்னெடுத்தபோது பிராமண தரப்பு வாதங்களை யாரும் முன் வைக்காதது துரதிர்ஷடவசமானது. இந்த கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பின் விளைவாக கிட்டதட்ட பிராமணன் தமிழகத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான் என்றே சொல்லலாம். சுமார் 3% இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை தற்போது 1 1/2% அளவில் தான் இருக்கும் என நம்பப்படுகிறது.
பாம்பையும், பார்பானையும் கண்டா பாம்பை விட்டுடு பார்ப்பனனை அடின்னு கேணத்தனமா சொல்லிகுடுத்த ஈவெரா போன்ற மக்குகள் தமிழகம் எதை இழக்கப் போகிறது என உணர்ந்தவர்களாக இல்லை.
எழும்பூரில் நான் பிறந்து வளர்ந்த காலகட்டத்தில் என்னுடைய பால்ய சிநேகிதர்களில் பலர் பிராமணர்கள். ஸ்ரீகாந்த், நரசிம்மன், ராமானுஜம், ராஜா, சீனிவாசன், உமா(பிற்காலத்தில் சன் டிவி செய்தி வாசிப்பாளர்) என அனைவரும் பிராமணர்கள். இவர்களில் பாதி பேர் இன்று அமெரிக்காவில் இருக்கிறார்கள். அன்று தமிழகத்தில் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை நானறிவேன். ஸ்ரீகாந்த் ராஜஸ்தான் பிட்ஸ் பிலானியில் படிக்கச் சென்றான். அவனை தொடர்ந்து அவனது சகோதரர்கள் இருவர். தமிழகத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்த சிறந்த சமூகம் பிராமணர்கள்.
தமிழக பிராமணர்கள் பலர் தமிழகத்தை விட்டு வெளியேறி மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என குடியேறினர். இன்றும் மும்பை-டெல்லியின், ஏன் அமெரிக்காவின் வலுவான பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் தமிழக பிராமணர்கள். போடப்பட்ட தடைகளை, வாய்ப்பு மறுப்புகளை எதிர்த்து அவர்கள் குரல் கொடுக்கவில்லை, மாறாக ஊதாசீனப்படுத்தி தமிழக் திராவிடங்களை அவமானப்படுத்தினர். ஆனாலும் பாருங்க இந்து தர்மத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் நடு மையமான கோவில்களை அவர்கள் விடவில்லை. பல பிராமணர்கள் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள்,
ஆனால் உலகின் பல்வேறு மூலைகளில் இங்கிருந்து விரட்டப்பட்ட பிராமணன் கோலோச்சுகிறான். சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, செஸ் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியொர் நம் கண்முன்னே நடமாடும் உதாரணங்கள்
.
உவேசா இல்லை என்றால் தமிழும், தமிழின் பெருமையும் இல்லை. வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் அவர் சுற்றி, சுற்றி தேடி பெற்றுத்தந்த பொக்கஷங்களை தான் நாமின்று தமிழின் பெருமையாகவும், சிறப்பாகவும் கண்டு வருகிறோம்.
ராமானுஜர் இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மீக தேடை இல்லை. கணிதெமேதை ராமானுஜர் தனியா... சர். சி.வி. ராமன் பெற்ற நோபல் பரிசும், அவர் வழிவந்த சந்திரசேகரும் கூட நமது பெருமைக்ள் தான்.
தேசபக்தியின் பல்வேறு பரிணாமங்களை நமக்கு புகட்டிய எனது ஆசான், ஞானகுரு பாரதி ஒரு பார்ப்பனன். வா.வே.சு ஐயர், வாஞ்சிநாதன், நீலகண்டபிரம்மச்சாரி எனசுதந்திர போராட்டத்தில் பார்ப்பனனின் பங்கு மதிப்பிட முடியாதது.
தன்னை ஒரு சமூகம் எவ்ளோ அவமானப்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காம கடவுள் மீது பாரத்தை போட்டுட்டு தங்களோட வேலையை பார்க்கும் ஒரே சமூகம் எனக்குத் தெரிந்து பார்ப்பனன் தான்.
அங்கே திருடன் இல்லை, கொள்ளைக்காரன் இல்லை, கஞ்சா வியாபாரி இல்லை, திருட்டு விசிடி இல்லை, தங்கம்-போதைமருந்து கடத்தல் இல்லை... படிப்பு, உழைப்பு, புத்திசாலித்தனம், நேர்மை இவையே பார்ப்பனர்களின் மூலதனமாக உள்ளவை.
சாஃப்ட்வேர் என்ஜினியர், பெரும் நிறுவனங்களின் தலைமை பதவிகள், வங்கி ஊழியர், அக்கவுண்டட், கிளர்க், கோவில் பூஜாரி, வைதீக காரியங்கள், சமையல்காரன், வெளிநாட்டில் வேலை என பாசிடிவான வேலைகளை மட்டுமே செய்யும் சமூகமும் பார்ப்பனன் தான்.
மொத்தத்துல பார்ப்பனன் தர்ம்த்தை தூக்கிப் பிடிக்கறான். அவனால் வாளெடுத்து போரிட முடியாது.
அந்த தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்கும் பிராமணனை காக்க வேண்டியது ஷத்திரியர்களின் கடமை.
பிராமணனும் ஷத்திரியனும்...
==================================
அறவாழி அந்தணன் என்றான் உலக பொதுமறை தந்த வள்ளுவ பறையன்.
திருக்குறளுக்கு இணையான நீதிநூல், வாழ்க்கை வழிகாட்டி உலகில் இல்லை என தைரியமா சொல்லிடலாம். அதை எழுதிய வள்ளுவன் பறையர் சமூகம்னு சொல்லுறாங்க... பறையர் சமூகத்தில் எவனாவது எங்களின் பெருமை வள்ளுவன்னுபேசுறதை பார்த்து இருக்கீங்களா?! வேதங்களை தொகுத்தளித்த வியாசன் பார்ப்பனன் இல்லை. அவன் ஒரு மீனவ பெண்ணின் மகன். கீதையை அருளிய கிருஷ்ண பரமாத்மா ஒரு யாதவன், ஈசன் ஒரு வெட்டியான் என்ற எஸ்.சி, ராமன் ஷத்திரியன்
ஆக ஒரு மீனவன் கொடுத்த நூல்களில் உள்ள பெருமைகளை வைத்துக் கொண்டு, யாதவன் கொடுத்த கீதையை ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக கொண்டு, ஒரு ஷத்திரியன் காட்டிய கற்பு நெறியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ஒரு எஸ்.சியை கடவுளாக ஏற்றுக்கொண்ட சமூகம் தான் பிராமணர்க்ள்.
வர்ணபகுப்பில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் பிராம்ணனும்-ஷத்திர்யனும் சேர்ந்து வேலை செய்வார்கள், வைஷியனும்-சூத்திரனும் சேர்ந்து வேலை செய்வார்கள் என்பதே... சூத்திரன் என்றால் சூத்திரங்களை அறிந்தவன் என்பதற்கு மேல் வேறு பொருள் இல்லை. தமிழ்ல சொல்லுறதுன்னா டெக்னீசியன்.
ஏர் தொழிலும் - போர் தொழிலுமாக ஷத்திரியன் விளங்கினான். பிராமணன் வழிகாட்டினான். சூத்திரன் பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தான், வைஷியன் அதை விற்பனை செய்யும் தொழிலை பார்த்தான். ஆக வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வேலை பார்த்தன.
ஷத்திரியனின் கடைமைகளாக அறியப்பட்டவை நாட்டை காப்பதை தவிர்த்து பார்த்தால் பசு, பிராமணன், குழந்தைகள், பெண்களை காப்பது...
பிராமணன் கல்வி-ஆன்மீக தொண்டிலும், ஆட்சி-நிவாகத்திலும் ஷத்திரியனுடன் இணைந்து செயல்பட்டான். வைசியன் அனைவரின் வயிற்றுத் தேவையை பார்த்துக் கொண்டான். சூத்திரன்பொருட்க்ளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளனாக இருந்தான்.
தமிழ் மண்ணில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்க்கான ஆதாரங்கள் இல்லை.
63 நாயன்மார்களிலும், 12 ஆழ்வார்களிலும் அனைத்து ஜாதிகளைசேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் தான் இன்றும் மயிலை 63வர் விழாவின் நாயகர்கள். அதில் கண்ணப்ப நாயனார் வேடன், பரஞ்ஜோதி உட்பட11 பேர் வன்னிய சமூகம் என்பதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தேன். குயவர், செட்டியார், பிராமணர்கள், முதலியார்க்ள் என அனைத்து சமூகங்களில் இருந்தும் நாயன்மார்கள் உள்ளனர். அவர்கள் தமிழக பக்தி இயக்கத்தை வழிநடத்தியவர்கள். பெரிய புராணம் அவர்களின் பெருமையைத்தான் பாடுகிறது. ஆக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை இல்லாத ஏற்றத்தாழ்வுக்ள் இங்கே விதைக்கப்பட்டன என்பது தெளிவு.
இந்த மண்ணில் பிராமணன் இருந்தால் தான் கலாச்சாரமும்-பண்பாடும், பக்தியும்-ஆன்மீகமும் காப்பாற்றப்படும். இந்து தர்மத்தின் தனித்துவம் காக்கப்பட வேண்டும் என்றால் பார்ப்பனன் காக்கப்பட வேண்டும். இது தன்னை ஷத்திர்யன் என கூறுக்கொள்ளும் ஒவ்வொருவரின் கடமை என்பது எனது தாழ்மையான கருத்து
நான்கு அடிப்படைகள் இங்கே முக்கியமானவை...(ஏனது எழுத்துக்களில் பின்புலத்தை புரிந்துகொள்ள...)
1. பிராமணன் என்ற தன்மை பாரதத்தின் பொக்கிஷங்களில் ஒன்று.
2. பிறப்பால் யாரும் பிராமணனாக இருக்க முடியாது
3. பாரதியை விட சிறந்த பிராமணனை நான் எனது வாழ்க்கை காலத்தில் படிக்கவில்லை
4. எனது மனைவி ஒரு பிராமணப்பெண்...
ஏன் பிராமணன் தேவை...
==============================
உஞ்ச விருத்தி பிராமணன் என்பார்கள். பாரதியை பாருங்கள்... அவன் அதிகார பிச்சையில் வாழ்ந்தவன்... கொடுக்க முடியாத வீட்டு வாடகையை கூட பிறகு தருகிறேன் ஓய் என அவனால் தான் மிடுக்குடன் கூற முடியும்... மிகச்சிறந்த பிராமணனாக எனது புரிதலுக்கு உட்பட்ட சாணக்யன் மாபெரும் மகதப் பேரரசை உருவாக்கியவனாக இருந்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி நொடி வரை குடிசையில் வாழ்ந்தான்...பிச்சை எடுத்துதான் தின்றான் என்கிறது அவனது வரலாறு... பிராமணன் அறிவின் அடையாளம், வாழ்க்கையின் வழிகாட்டி... உவேசா என்ற பிராமணன் ஊர் ஊராக மாட்டு வண்டியில் சென்று கண்டெடுத்த பொக்கிஷங்கள் தான் இன்று நாம் படிக்கும் சுமார் 60 தமிழ் காப்பியங்கள். தமிழ் தாத்தாவின் அந்த தமிழ்பற்றும், தமிழுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்ற தவமும், ஆதங்கமும் தான் பிராமணனின் தன்மை... நல்ல பிராமணனால் தான் தண்டச்சோறுன்னும் பார்ப்புக்கு வேறொரு நீதி என பாட முடியும்(ஏனது ஆசான் பாரதியை சொல்லுகிறேன்) அவனால் தான் பார்ப்பனனை சாமி என்ற காலமும் போச்சே என திமிர்த்தனமாக எழுத முடியும்... நல்ல பிராமணனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்க முடியாது. அதனால் தான் சமூகசீர்த்திருத்தவாதியான ராமானுஜர் தன் மனைவியையே பிரிந்து வாழ்ந்தார்...அது குரு பக்தியின் உச்சம்... மீனவப்பெண்ணின் மகனான வியாசனும், வழிப்பறி கொள்ளையானான வால்மீகியும் எங்களுக்கு பிராமணர்கள் தான். மீனவப்பெண்ணாக வாழ்க்கையை துவங்கினாலும் இன்று உலகம் முழுக்க அம்மா என அனைவராலும் அழைக்கப்படும் மாதா அம்ருதானந்தமயி எங்கள் பார்வையில் பிராமணர்... ஆக பிராமணன் போற்றப்படுபவன், மதிக்கப்படுபவன், பண்பாட்டின், கலாச்சாரத்தின் காவலன்...அவனை போற்றி மதிப்பது தமிழனின் பண்பாடே... அவனை காப்பது என் போன்ற ஷத்திரியர்களின் கடமை...
மாறாக தமிழுக்காக தன்னை அர்ப்பணம் செய்வதாக, செய்ததாக கூறும் எவனும் இவர்களின் பாணியில் எதுவும் செய்ததாக தெரியவில்லை. பிராமணனை தூவேஷம் செய்து அதில் லாபம் அடைந்தவர்கள் மட்டுமே இன்று அரசியல் தலைவர்களாக உள்ளனர். சமுதாயத்தின் அறிவுக்கண்ணை திறப்பவன் அனைவரும் பிராமணனே... அதனால் நான் கூட ஒரு விதத்தில் பிராமணன் தான் என செருக்குடன் கூற முடியும். ஆனால் எனது கவனம், பார்வை, தன்மை எல்லாம் ஷத்திரியனாக இருப்பதிலேயே உள்ளன... தேச துரோக சக்திகளை போட்டு தள்ளதான் மனது விழைகிறது.
ஏன் பிராமணன் தாக்கப்படுகிறான்...
=========================================
தமிழகத்தின் அரசு வேலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 3% இருப்பதாக நம்பப்படும் பிராமணன் 3% வேலைகளில் இருக்கிறானா என பாருங்கள்?! சத்தியமாக இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக பிராமணன் தமிழகத்தில் ஒரு தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டு வருகிறான். அவனுக்கு படிப்பும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டுதான் வருகிறது. இதை செய்பவர்கள் பெரும்பாலும் பிராமண தூவேஷத்தில் ஆட்சி-அதிகாரத்தை பிடித்தவர்கள். பிராமண எதிர்ப்பால் மட்டுமே தான் பதவியில் இருக்க முடியும் என நம்புகிறான். தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு ஒரு மனோவியாதியாகவே பரவியுள்ளது.
மாற்று மத அயோக்கியர்களுக்கும் பிராமணன் தான் இந்து சமுதாயத்தின் ஆணிவேராக செயல்படுகிறான் என தெளிவாக தெரியும். பிறப்பால் பிராமணன் என்ற வாதத்தை நான் ஏற்காவிட்டாலும் இன்றைய சமூக புரிதலுக்கு அது தேவைப்படுகிறது. இந்தியாவை அசைக்க வேண்டுமென்றால் பிராமணன் என்ற ஆணிவேர் பிடுங்கப்பட வேண்டும் என்ற வேகம் எதிரி மதங்களிடம் இருப்பது தெளிவு. இது போன்ற சிந்தனைகளின் வெளிப்பாடுதான் பிராமணப் பெண்களை குறிவைக்கும் லவ்ஜிகாத் போன்றவை. இன்று பிராமணன் ஒரு ஜாதியாக பார்க்கப்பட்டு அவன் அழிக்கப்பட்டால் இந்து சமுதாயத்தை அழித்து விட முடியும் என்ற பத்தாம்பசலி கற்பனை மாற்று மத மங்குனிகளுக்கு இருக்கிறது. உண்மை என்னவென்றால் பிராமணனின் தன்மை கொண்ட ஆயிரம் புதியவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது... பிராமணன் சத்தியமாக அழியப்போவதில்லை. தேவைப்பட்டால் ஷத்திரியதன்மை உள்ள கல்யாணராமன் பிராமணத்தன்மையுடன் மாற முடியும் என்பதே இந்து சமுதாயத்தின் அடிப்படை வர்ணாசிரமம்... உலகின் தலைசிறந்த தேசமாக நாம் இருப்பதற்கு நமது பாரத கலாச்சாரம், பண்பாடு காரணமென்றால், அதை கட்டிக்காக்கும் அவற்றை கட்டிக் காப்பது பிராமண, ஷத்திரிய, வைஷிய, சூத்திர பகுப்புக்களே... ஏதோ காரணங்களால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என கூறப்பட்டாலும் அது தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகிய ஒரு விவாதப் பொருளாகவே இருந்திருக்கிறது. முகமது நபியின் உருவம் இப்படி என எவனாவது ஒரு கார்ட்டூன் போட்டால் கொல்லும் காட்டுமிராண்டித்தனம் இங்கு என்றும் இருந்ததாக தெரியவில்லை. ஆக பாரதம் உலகின் குருவாக மாறக்கூடாது என்றால் பிராமணனின் தன்மை இங்கே இருக்கக்கூடாது. இதைத்தான் வெளிநாட்டு சக்திகளும் விரும்புகின்றன..அவைதான் இந்து சமுதாயத்தின் வேற்றுமைகள் நிலைக்க வேண்டும், பிரச்சனைகள் தொடர வேண்டும் என விரும்புகின்றன. பெரும்பாலான கிறிஸ்தவ சர்ச் சார்ந்த அமைப்புகள் இதுபோன்ற சமூகநீதி என்ற பெயரிலான வாதங்களுக்கு தூபம் போட்டு, சாத்தியமான சமூக ஒற்றுமையை குலைக்கின்றன. இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றே... பிராமணனை இல்லாமல் செய்வதன் மூலம் இந்தியாவின் பெருமைமிகு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் குலைக்க வேண்டும் என்பதே...
தமிழக பிராமணனின் இன்றைய நிலை...
============================================
எந்த ஒரு பிராமண குடும்பத்தில் பார்த்தாலும் யாரோ ஒருவர் வெளிநாட்டில், குறிப்பாக புத்திசாலித்தனத்திற்கு மரியாதை கிடைக்கும் நாட்டில் இருக்கிறார்கள். உங்கள் புரிதலுக்காக சொல்லுகிரேன், சுமார் 30 லட்சம் பேரை கொண்ட அமெரிக்க இந்தியர்களில் 2 லட்சம் பேர் தமிழக பார்ப்பனர்கள்.அதாவது சுமார் 7%. சத்தியமாக அரேபிய நாட்டில் அவர்கள் இல்லை. அமெரிக்கா,கண்டா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நல்ல பெயர், மரியாதை அங்கிகாரத்துடன் இருக்கிறார்கள். ஒரு சாதாரண அமெரிக்கரின் சம்பளம் 2700 டாலர், ஆனால் ஒரு சாராசரி இந்தியரின் சம்பளம் 4 மடங்கு அதிகம். அதில் பெரும்பான்மை தமிழக பிராமணர்கள். அவர்களை தான் அமெரிக்க அரசு கூட பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்கிற்து
திராவிட திருடர்களால் மறுக்கப்பட்ட உரிமைகள் அவர்களுக்கு சென்ற இடமெல்லாம் கிடைக்கிறது. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என சும்மாவா சொன்னார்கள். நாட்டுக்கும் வீட்டுக்கும் பணம் அனுப்புகிறார்கள். சத்தியமாக ஹவாலா, காட்டமைன், தங்கம் கடத்தல், திருட்டி விசிடி மூலமாக பணம் சம்பாதிக்கத சமுதாயமாக இருக்கிறார்கள். தமிழக தவிர மும்பை, டெல்லி, பெங்களூர் என நான் செல்லும் இடத்தில் எல்லாம் அவர்கள் மரியாதைக்குறிய சமூகமாக இருப்பதை பார்க்கிறேன். தேச பக்தர்களாக இருக்கிறார்கள். தேசபக்தர்களுக்கு பின்புலமாக செயல்படுகிறார்கள். அருமையான ஆலோசனைகளை என் போன்ற ஷத்திரியர்களுக்கு தரும் பெரும்பாலானோர் பிராமணர்களே...
எனது திருமணம்
=====================
எனது திருமணத்தை நான் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். எனது மனைவியை எனக்கு பிடித்து இருக்கிறது என நான் எண்ணிய போது அவளிடம் கூறி, உடனடியாக அவளது பெற்றோர்களுடன் பேசி, 5 மாதங்களில் எனது திருமணம் நடந்தது. ஒரு வன்னியனுக்கு பெண்ணை தருவதா என அவர்கள் யோசிக்கவில்லை. நல்லவனா, பொறுப்பானவனா என மட்டுமே பார்த்ததை நான் கவனித்தேன். இதில் ஜாதி பாகுபாடுகள் பெரிதாக இல்லை. ஒருவேளை இருந்து அது வெளிப்பட்டு இருந்தால் இதை சரியாக புரிய வைக்கும் பக்குவம் எனக்கிருந்தது. அவர்கள் அந்த பக்குவத்தை மதித்தார்கள்... இந்து சமுதாயத்திற்கு தெரியும் எதை, எங்கே, எப்போது, எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. ஆக பிராமணன் என தன்னை ஜாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தங்களின் பாதை மற்றும் பயணத்தில் சிறந்துதான் விளங்குகின்றனர்
நான் செய்ய வேண்டியது...
================================
இந்தியாவின் பிராமணத்தன்மை நமது பொக்கிஷங்களில் ஒன்று. அது காப்பாற்றப்பட வேண்டும். பிராமணப் பெண்களை குறிவைக்கும் காலிகளை கருவறுக்க வேண்டும்...இதற்க்கென தனியாக ஒரு அமைப்பை உருவாக்கினால் கூட தவறில்லை. எனது குழந்தைகளில் ஒன்று பிராமணத்தனமையுடனும், மற்றொன்று ஷத்திரியத்தனமையுடனும் தான் வளர்க்கப்படுகிறது. இன்று ஜாதி வெறி பிடித்து அலைவது அனைத்தும் இடைஜாதிகளே... இவர்களை எவனும் குற்றம் சொல்ல மாட்டானாம்..அந்த ஜாதிகளின் ஓட்டு போய்விடுமாம்... ஆக ஜாதிய புரிதல் இவ்வாறு இருப்பது சமூகத்திற்கு நல்லது...
1. ஜாதி என்பது இந்து சமுதாயத்தின் ஆணிவேர். அது அவசியம்
2. ஜாதி இந்து சமுதாயத்தில் பிளவுகளை உருவாக்க கூடாது
3. ஜாதியும், மதமும் அது சார் நம்பிக்கைகளும் சமரசத்திற்கு அப்பாற்பட்டவை
4. ஜாதி பற்று வெறியாக இல்லாமல் இருப்பது இந்த தேசத்திற்கு நல்லது
5. ஜாதிய கட்டமைப்பை குறைகூற மாற்றுமத மங்குனிகளுக்கு தகுதியில்லை.
6. நமது சடங்கு, சம்பிரதாயம், குலம், பாரம்பர்யம் இவை அனைத்துமே நமது பெருமைகள்
இவற்றை எல்லாம் கட்டிக்காக்கும் பொறுப்பு அனைத்து இந்துக்களுக்கும் குறிப்பாக ஷத்திரியர்களுக்கு உண்டு.
ஒரு குவளை கண்ணீரை இந்த அற்புதமான வரைவுக்கு காணிக்கையாக அர்ப்பணிப்பதன்றி வேறோர் காணிக்கை அறிகிலேன். அடியேன் ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் உபந்யாஸக் கருத்துக்களைக் கடைப்பிடித்து வாழ்பவன்.
ReplyDeleteஸ்ரீ கல்யாணராமன் கருத்துக்கள் ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவின் கருத்துக்களுடன் ஒன்றிப்போவது நாம் செய்த பாக்யமே. தமிழகம் சிறக்க மேன்மேலும் இது போன்ற குரல்கள் எழுந்து அவை தமிழக/பாரதீய மக்களை செம்மைப்படுத்தி ஒருங்கிணைக்க எம்பெருமான் ஆசார்யன் திருவடிகளில் மீளாது வீழ்ந்து கிடக்கும் ஒரு அந்தண வைணவன்.
அடியேன் பிராமணன் என்பதால் கட்டுரை அருமை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. மற்றவர்கள் சொல்லவேண்டும். சொல்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்பதே நாம் காணும் தமிழகம். இங்கு நீங்கள் எழுதியவை பலரால் பல சமயங்களில் வேறு வார்த்தைகளில் எழுத்தப்பட்டும், மற்றவர்கள் மாறவில்லை, மாறமாட்டார்கள் என்பதே உண்மை. உங்களைப்போன்றோர் விதிவிலக்கு. இயற்கையிலேயே புரிந்து கொண்டவர்கள் நீங்கள். நன்றி.
ReplyDelete