*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..* *ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..* *அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*
*பள்ளியில் படிக்கும்போது பழகிய நெருங்கிய நண்பர்கள் நால்வரின் கதை இது..*
*ஒரே பள்ளியில் SSLC வரை படித்தவர்கள்..*
*அப்போது அந்த ஊரில் இருந்த ஒரே ஒரு சொகுசு ஹோட்டல்..அது.*
*SSLC தேர்வு முடிந்ததும் அந்த ஹோட்டலுக்குப் போய் டீயும் காலையுணவும் சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள்..*
நால்வரும் ஆளுக்கு இருபது ரூபாய் என மொத்தம் 80 ரூபாயை டெபாசிட் செய்து கொண்டனர், அன்று ஞாயிற்றுக்கிழமை, பத்து முப்பது மணிக்கு சைக்கிளில் ஹோட்டலை அடைந்தனர்.
*தினேஷ், சந்தோஷ், மகேஷ் மற்றும் பிரவீண் ஆகியோர் தேநீர் மற்றும் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டே பேச ஆரம்பித்தனர்..*
35 வருடங்களுக்குப் பிறகு நாம் ஐம்பது வயதை தொட்டிருப்போம். அப்போது உன் மீசை எப்படியிருக்கும், உன் முடி எப்படியிருக்கும், உன் நடை எப்படியிருக்கும், என்றெல்லாம் பேசி சத்தமாக சிரித்துக் கொண்டனர். வார்த்தைக்கு வார்த்தை சில்லறை சிதறுவது போன்று சிரிப்பொலி அவ்விடத்தையே ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. அன்றைய நாள் ஒரு April 01.
*நாம் மீண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதி 35 வருடங்களுக்குப் பிறகு இதே ஹோட்டலில் சந்திப்போம் என்று நால்வரும் ஒருமனதாக முடிவு செய்தனர்..*
அதுவரை நாம் அனைவரும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும், இதில் எந்த அளவு முன்னேற்றம் நமக்குள்ளே ஏற்படுகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்..
*அன்றைய தினம் கடைசியாக ஹோட்டலுக்கு வரும் நண்பன் தான் ஹோட்டல் பில் கட்ட வேண்டும்..* என முடிவெடுத்துக் கொண்டனர்.
*இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவருக்கு டீ, ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்த வெயிட்டர் முரளி, நான் 35 வருடம் இதே ஹோட்டலில் இருந்தால் நிச்சயமாக உங்களுக்காக இந்த ஹோட்டலில் காத்திருப்பேன்..* என்று சொல்லி 72 ரூபாய் பில்லை கொடுத்தான். மீதம் 8 ரூபாய் டிப்ஸாக வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு சிட்டாக சைக்கிளில் பறந்த காட்சி வெயிட்டர் முரளியின் கண்களில் ஸ்டில் போட்டோவாக பதிந்து இருந்தது.
*மேல் படிப்புக்காக நால்வரும் பிரிந்தனர்..*
*தினேஷின் அப்பா இடம்மாற்றத்தினால் அவன் ஊரை விட்டிருந்தான், சந்தோஷ் மேல்படிப்புக்காக அவன் மாமாவிடம் போனான், மகேஷும் பிரவீணும் நகரின் வெவ்வேறு கல்லூரிகளில் அட்மிஷன் பெற்றனர்..*
*கடைசியில் மகேஷும் ஊரை விட்டு வெளியேறினான்..*
*நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் உருண்டன. ஆண்டுகள் பல கடந்தன..*
முப்பத்து ஐந்து ஆண்டுகளில் அந்த நகரத்தில் மாற்றங்களின் தேரோட்டமே ஏற்பட்டது எனலாம். நகரத்தின் மக்கள் தொகை பெருகியது, சாலைகள் விரிந்தன. மேம்பாலங்கள் பெருகின. பெரிய கட்டடங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றின..
இப்போது அந்த ஹோட்டல் வெறும் ஒரு ஹோட்டல் அல்ல. ஐந்து நட்சத்திர ஹோட்டலாக உருமாறியிருந்த நிலையில், வெயிட்டர் முரளி இப்போது முதலாளி முரளி ஆகி இந்த ஹோட்டலின் உரிமையாளரானார்..
*35 ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்ட தேதி, ஏப்ரல் 01, மதியம், ஹோட்டல் வாசலில் ஒரு சொகுசு கார் வந்தது..*
*தினேஷ் காரில் இருந்து இறங்கி வராந்தாவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், தினேஷிடம் இப்போது பத்து நகைக்கடைகள் உள்ளன..*
*ஹோட்டல் உரிமையாளர் முரளியை அடைந்த தினேஷ், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்..*
*பிரவீன் சார் உங்களுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே டேபிள் புக் பண்ணியிருக்கார் என்று முரளி சொன்னார்..*
*நால்வரில் முதல் ஆளானதால், இன்றைய பில் கட்ட வேண்டிய அவசியமில்லை என்று தினேஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், இதற்காக நண்பர்களை கேலி செய்வார்..*
*ஒரு மணி நேரத்தில் சந்தோஷ் வந்தான், சந்தோஷ் ஒரு பெரிய பில்டர் ஆனான்..*
*வயதிற்கேற்ப இப்போது வயதான மூத்த குடிமகன் போல் காட்சியளித்தார்..*
*இப்போது இருவரும் பேசிக்கொண்டு மற்ற நண்பர்களுக்காக காத்திருந்தனர், மூன்றாவது நண்பன் மணீஷ் அரைமணி நேரத்தில் வந்தான்..*
அவரிடம் பேசியதில் மகேஷ் மிகப் பெரிய தொழிலதிபராக மாறியிருப்பது இருவருக்கும் தெரியவந்தது.
மூன்று நண்பர்களின் கண்களும் திரும்பத் திரும்ப வாசலுக்குப் போய்க் கொண்டிருந்தன, பிரவீண் எப்போது வருவான்..?
* *இந்த நேரத்தில் பிரவீண் சாரிடமிருந்து மெசேஜ் வந்திருக்கு, அவர் வர கொஞ்சம் நேரமாகும். நீங்க டீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணுங்க, நான் வரேன்..* என்று சொல்லிச் சென்றார் ஹோட்டல் ஓனர் முரளி. *ரெஸ்டாரன்ட் ஈஸ் புக்க்ட்* என்று போர்ட் தொங்க விடப் பட்டது. ஹோட்டலின் அனைத்து சிப்பந்திகளும் இந்த நான்கு நண்பர்களுக்கு மட்டுவே சேவைகள் செய்ய வேண்டும் எனப் பணிக்கப் பட்டனர்.
35 வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்ததில் மூவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் இகழந்தும் பெருமையும் கேலியுமாக சில்லறை சிதறல்கள் மீண்டும் அந்த ரம்மியமான இடத்தை மேலும் ரம்மியமாக்கியது. இப்போது மூவருக்கும் பிரவீணின் மேல் கோபமும் வரத் துவங்கியது. மூவருக்கும் பிரவீணைப் பற்றியத் தகவல்கள் மட்டுமே இல்லாமல் இருந்தது. நால்வரில் பிரவீண் தான் நன்றாக படிப்பவனாக இருந்தான். சிறந்த அறிவாளியாக இருந்தான்.
பல மணிநேரம் சென்றாலும் பிரவீண் வரவில்லை.
மறுபடியும் பிரவீண் சாரின் மெசேஜ் வந்திருக்கிறது, நீங்கள் மூவரும் உங்களுக்குப் பிடித்த மெனுவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடத் தொடங்குங்கள் என்றார் முரளி.
சாப்பிட்ட பிறகு பில்லைக் கட்ட பிரவீண் வந்து விடுவார் என செய்தி வந்திருக்கிறது. வேலைப் பளுவின் காரணத்தால் தாமதமாகிறது. மன்னிக்கவும் என்ற செய்தி பகிரப்பட்டது. இரவு 8:00 மணிவரை காத்திருந்தாயிற்று.
அப்போது ஒரு அழகிய இளைஞன் காரில் இருந்து இறங்கி, கனத்த மனதுடன் புறப்படத் தயாரான மூன்று நண்பர்களிடம் சென்றபோது, மூவரும் அந்த மனிதனையே பார்த்துக் கொண்டிருந்தனர்...! அந்த இளைஞனின் புன்னகையும் பலவரிசையும் பழைய பிரவீணை அவர்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
*நான் உன் நண்பனின் மகன் ரவி, என் அப்பா பெயர் பிரவீண்..* என்று அந்த இளைஞன் சொல்ல ஆரம்பித்தான்.
*இன்று உங்கள் வருகையைப் பற்றி அப்பா சொல்லியிருந்தார், இந்த நாளுக்காக ஒவ்வொரு வருடத்தையும் எண்ணி காத்திருந்தார், ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனாவில் பாதிக்கப் பட்டு இறந்து போனார்..*
*என்னை அவர் தாமதமாக சந்திக்கச் சொன்னார், ஏனென்றால் நான் இந்த உலகில் இல்லை என்று தெரிந்ததும் என் நண்பர்கள் சிரிக்க மாட்டார்கள், ஒருவரையொருவர் சந்திக்கும் மகிழ்ச்சியை இழப்பார்கள்..*
*எனவே தாமதமாக வரும்படி சொல்லியிருந்தார்..*
அவர் சார்பாகவும் உங்களை கட்டித்தழுவச் சொன்னார், ரவி தன் இரு கைகளையும் விரித்தான். மூவரையும் கட்டித் தழுவினான்.
இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர், இந்த இளைஞனை எங்கோ பார்த்திருப்போம் என்று நினைத்தனர்..*
என் அப்பா ஆசிரியராக பணியாற்றினார், எனக்கும் கற்றுக்கொடுத்தார், இன்று நான் இந்த மாவட்டத்துக்கு கலெக்டர்..* என்றார் ரவி. இந்த செய்தி ஹோட்டல் உரிமையாளர் திரு முரளிக்கு தெரியும்.
முரளி முன்வந்து நண்பர்களுக்கு ஆறுதல் கூறி 35 வருடங்களுக்குப் பிறகு அல்ல, 35 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் எங்கள் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் சந்திக்க வாருங்கள், ஒவ்வொரு முறையும் என் பக்கத்திலிருந்து ஒரு பெரிய விருந்து நடக்கும்..* என்று கூறினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
*உறவுகளை சந்தித்துக்கொண்டே இருங்கள், நண்பர்களை சந்திக்க வருடக்கணக்கில் காத்திருக்காதீர்கள், யாருடைய முறை எப்போது வரும் என்று தெரியாது..*
*உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருங்கள், உயிருடன் இருப்பதன் முக்கியத்துவத்தை உணருங்கள்..*
Comments
Post a Comment