வரலாற்றை தவறாக சித்தரிக்கும் இயக்குனர்கள் , ஜாதியை தூக்கிப்பிடிக்கும் இயக்குனர்கள் , தேசத்தை அவமதிக்கும் இயக்குனர்கள் , குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தி குறீயிடாக வைக்கும் இயக்குனர்கள் இருக்கும்வரை........ #தமிழ்_சினிமா_உருப்படாது
எங்கே போகிறது
எங்கள் தமிழ் சினிமா ???
இது நாள் வரை கன்னட சினிமாவை கண்டதில்லை ! உலகத்தரத்தோடு KGF பார்க்கவைத்தது !!
கலர்க்கலராய் ஆடை உடுத்தி , குத்தாட்டம் போட்டுவந்த தெலுங்கு சினிமாவை நக்கலடித்தோம் . உலகத்தை ராஜமெளலி தெலுங்கு சினிமா பார்க்க வைத்துவிட்டார் .
ஷகிலாவின் சதையை காட்டிவந்த மலையாள சினிமா இன்று கதையை நம்பி களத்தில் ஜெயிக்கிறது .
ஆனால் , தமிழ் சினிமாவோ ! சாதியையும் , மதத்தையும் குறியீடாக வைத்து மக்களின் உணர்ச்சியோடு விளையாடி காசு பார்க்கிறது .
இது வெட்கக்கேடு மட்டுமல்ல ! விஷமத்தனமானதும் கூட . கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமா நம்மில் விஷத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது . நம்மை அறியாமல் நாம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் .
சினிமா என்பது 2.30 மணிநேர பொழுதுப்போக்கு சாதனம் அவ்வளவே ! அப்படி தான் இருக்க வேண்டும் என்று மக்களும் விரும்புகிறார்கள் . இங்கே அறிவுரை சொல்லவோ ! சமூக அவலங்களை சொல்லி திருத்தவோ யாராலும் முடியாது . அப்படியென்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா போன்றோர் சொல்லியே திருந்தாதவர்கள் இன்றைக்கு இவர்கள் சொல்லியா திருந்தப்போகிறார்கள் .
ஒருபக்கம் நடிகர்களுக்குள் ஒற்றுமையின்றி ரசிகர்களை உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதன்மூலம் பற்றி எரியும் நெருப்பில் குளர்காயும் நடிகர்கள் இங்கு ஏராளம்...
இங்கு யாரையும் நம்பமுடியவில்லை ஆஸ்கார் நாயகன் என்று பெருமைபட்டால் அவரும் அரசியல் சாக்கடையில் புரண்டு , புரட்டுகள் பல செய்கிறார் ...
சம்மந்தமில்லாமல் ஒரு பரபரப்பு தொற்றவேண்டும் என்பதற்காக காவியை கிழிக்கிறேன் பேர்வழியென்று கிளம்பியவர்களின் படம் இங்கு நார் நாராக கிழிந்து போனது தான் மிச்சம் ...
இன்னொரு பக்கம் .....
வரலாற்றை தவறாக சித்தரிக்கும் இயக்குனர்கள் , ஜாதியை தூக்கிப்பிடிக்கும் இயக்குனர்கள் , தேசத்தை அவமதிக்கும் இயக்குனர்கள் , குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்தி குறீயிடாக வைக்கும் இயக்குனர்கள் இருக்கும்வரை........
#தமிழ்_சினிமா_உருப்படாது Dot
Comments
Post a Comment