இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துக்கொண்டிருக்கும் 5 மாணவர்களுடன் பேசும் சூழல் அமைந்தது. வேலை பார்த்துக்கொண்டே "117 இல் பாதி என்னடா" என்று சாதாரணமாக கேட்டேன். ஒரு நிமிடம் ஆகியும் பதில் வரவில்லை "திடீரென்று கேட்டதால் சொல்ல முடியவில்லை" என்று சொன்னான் அதன் பிறகு "80 + 12" எவ்வளவு என கேட்டபோது" 94 " என்றான்
நண்பர் எழுதி அனுப்பிய பதிவு இது...
இன்று பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ படித்துக்கொண்டிருக்கும் 5 மாணவர்களுடன் பேசும் சூழல் அமைந்தது. வேலை பார்த்துக்கொண்டே "117 இல் பாதி என்னடா" என்று சாதாரணமாக கேட்டேன். ஒரு நிமிடம் ஆகியும் பதில் வரவில்லை "திடீரென்று கேட்டதால் சொல்ல முடியவில்லை" என்று சொன்னான் அதன் பிறகு "80 + 12" எவ்வளவு என கேட்டபோது" 94 " என்றான். ஐந்தாம் வாய்ப்பாடு சொல்லச் சொன்னால் மறந்துவிட்டது என்றான். உயிரெழுத்துக்கள் சொல்லச் சொன்னபோதுஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ க்கு பிறகு கொ ஒள என்று சொல்லி முடித்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த போது அந்த வழியே கடந்துபோன அவனது நண்பர்களையும் அழைத்து (அவர்களை அழைக்கும்போதே என்னை கேலி செய்யும் தொணியில் மிகவும் நக்கலாக) அவர்களிடமும் கேள்விகள் கேட்கச் சொன்னான். அவர்களின் நிலைமையும் கிட்டத்தட்ட இப்படியாகத் தான் இருந்தது. ITI THEORY பாடப்புத்தகத்தில் முதல் பாடம் என்னவென்று கேட்டேன். நால்வருக்கும் தெரியவில்லை. ஒரு தம்பி மட்டும் "திருகு அளவி" என்று சொன்னான். "அப்படி என்றால் என்ன? நம் துறையில் எங்கு, எதற்கு பயன்படுத்துவோம்" என்று கேட்டபோது பதில் சொல்லத் தெரியவில்லை...
யாரை நொந்து கொள்வது என்றே தெரியவில்லை. பெற்றோர்கள் பாவம். பிள்ளைகளை நம்பித்தான் எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இது இன்று சந்தித்த ஐந்து நபர்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்ட பதிவு அல்ல. இதே மாதிரியாக பத்தாம் வகுப்பு முடித்த, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த, ஐடிஐ முடித்த, நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடைய உரையாடிவிட்டு தான் எழுதி இருக்கிறேன்....
பதிவின் நோக்கம்:
1. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் உறவுக்கார மாணவர்களிடம், அக்கம்பக்கத்து மாணவர்களிடம் பேச்சுக் கொடுங்கள்...
2. கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்களிடம் உரையாடுங்கள்
3. நமக்கு தெரிந்தவற்றை கற்றுக் கொடுங்கள்
4. அறியாமை என்பது 'கெத்து' அல்ல, நகைச்சுவையாக சிரித்துவிட்டு கடந்து போகக் கூடாது என்று உணர வையுங்கள்
Comments
Post a Comment