*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?* அரசும் மீடியாவும் பிரபலங்களும்... *'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!* ஆனா *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.* ஏன்? இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்.... அங்கு *கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.* ஏன்?

 










*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?*


அரசும்  

மீடியாவும்

பிரபலங்களும்...


*'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!*


ஆனா


 *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.*


ஏன்?


இப்ப 


சாலையோரம் வைத்திருக்கும்


 மரம், 

அரசுப் பள்ளி,

 மருத்துவமனை,

 அலுவலகங்கள்


 இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....


 அங்கு 

*கனி தரும் மரங்கள் எதுவுமே  இருக்காது.*


ஏன்? 


எங்கெல்லாம் 

*புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ*

அந்தச் சாலைகளையெல்லாம் 


விரிவு படுத்துகின்றேன் என்று 


அரசு 


அந்தப்

 புளிய மரங்களை வெட்டிவிடும்.


 விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும். 


*அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.*


பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு

சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.


 அப்பொழுதும் கூட அந்த மக்கள் 

*காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.*


எனக்குத் தெரிந்து ...


*ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர்* 

என எவரும் சிந்திக்கவில்லை.


நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் *நமது முதன்மையான உணவே பழம்தானே.*


 ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 


*மா பலா நாவல் அத்தி கொய்யா....*

 என்று எத்தனை மரங்கள் உள்ளன.


 அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?


 நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.


*காரணம்...*

MMMC: mass media mind control.


*"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.*


தொடர்ந்து 

*மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே* சொன்னார்கள்....


 அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்

 கனியை மறந்தான்.


கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .


ஆனால் இதையெல்லாம் தடுத்து 

*கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.*


 அதையெல்லாம் ஏதோ 

'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்

 தின்னு 

உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.


 கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.


நல்லா புரிஞ்சிக்குங்க...

 *'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.*


மண்ணில் பிறந்த *அனைத்து உயிரினங்களுக்கும்* இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.


அதை முழு முற்றாகத் தடுத்து,


*'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..*


நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...


கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்

 மற்றும் 

அனைத்து இடங்களிலும் 


மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 


தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.


*உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.*


நம் மனநிலையே

மகிழ்வாக இருக்கும்.


உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.


நீங்கள் 

மீண்டும் மீண்டும்

 இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....


அப்பொழுது *'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'*


ஓர் உயர்ந்த மண்ணை

 இப்படி நரகமாக்கிவிட்டு,


 ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.


*ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.*


அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.


*ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.*


கார்ப்பரேட் அறிவாளியல்ல... 


நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.


*'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."*


இப்படிக்கு..


மரங்கள்..!


🌴🌾🌳🌲🦧🍍🥬🌤️💐


படித்தது...


பட்டது..


உணர்ந்தது..!

🙁🤨😒


சிந்திக்க வைத்த Nandha Kumar K G அவர்களுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...