தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!
தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!
தமிழக அரசியல் எத்தனையோ தைரியசாலிகளைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களது வீரம் என்பது சற்று முரட்டுத்தனம் கூடி இருந்ததே தவிர - பளிச் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லும் ஞானபலம் அவர்களிடம் இல்லை!
பிரிவினைவாத, தேசவிரோத, ஹிந்து துவேஷ சக்திகள் இந்தப் போதாமையைத்தான் இதுவரை பயன்படுத்தி விளையாடின! வேரூன்றின! வளர்ந்தன!
சொல்லுக்குச் சொல் - கருத்துக்குக் கருத்து எதிர்வாதம் வைப்பவனை - நாலு கெட்ட வார்த்தை, ஜாதிப் பெயர், குலத் தொழில் இவற்றில் ஏதோ ஒன்றைக் கொச்சைப்படுத்தி வைதால் - அவன் 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிவிடுவான்!
வெறும் முரட்டுத் தனம் மட்டுமே வீரம் என்று நினைப்பவனைத் தட்டி விழ வைப்பது எளிதானது - ஏதாவது ஒரு சொல் உணர்ச்சி வசப்பட்டு அவன் வாயை விடும்போது அதை வைத்தே எமோஷனலாக அவனை சிக்க வைக்கலாம்!
இந்த இரண்டு வகை சூட்சுமங்களைக் கையாள்வதில் திராவிடியன்ஸ் கை தேர்ந்தவர்கள்!
1) சொல்லுக்குச் சொல் இவர்களுக்கு அறிவுபூர்வமாக - தர்க்க ரீதியாக பதிலடி தந்து இவர்களை மண்டியிட வைக்கும் ஞானம்.
2) கை வைத்துப் பார்! நானாகத் தீண்ட மாட்டேன் - ஆனால் என்னைத் தீண்டினால் இறங்கி அடிப்பேன் - தைரியமிருந்தால் தொட்டுப் பார்! நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன்! - என்னும் அசலான வீரம்!
இந்த இரண்டும் கலந்த கலவை தமிழ்ச் சமூகம் நீண்ட நாளாகக் காணாதது!
அதுவும் திராவிடியன்கள், லிபரல்கள், நக்சல்கள் என்ற மூன்று முடிச்சும் ஒன்றாகச் சேர்ந்த காலச் சூழலில் - மேற்கண்ட இரண்டு அம்சங்களும் பொருந்திய ஒரு சக்தி மிக்க தலைமைக்கு தமிழக தேசிய உணர்வாளர்கள் ஏங்கிக் காத்திருந்தனர்!
நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு...
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனாரிடம் மேற்கண்ட இரண்டு அம்சங்களும் கூடி நின்றன!
தேசியம் புறங்கை - தெய்வீகம் உள்ளங்கை என்று முழங்கிய அவர் காலத்தில் - பிரிவினைவாத ஹிந்து விரோத சக்திகள் வாய் திறக்க அஞ்சி ஒடுங்கிக் கிடந்தன!
பசும்போன் தேவர் திருமகனாரைப் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு...
அவரது மறு உருவமாக...
ஞானமும் வீரமும் கலந்த தேவர் திருமகனாரின் மறு உருவமாக...
பிரிவினைவாத - ஹிந்து விரோத சக்திகளை அலற வைப்பவராக
இன்று அண்ணாமலை IPS விளங்குகிறார்!
வாழ்க அண்ணாமலை நூறாண்டு!
ஜெய் ஹிந்த்!
Comments
Post a Comment