இந்தியா வளரும் நாடு . அடுத்த வல்லரசுக்கான இந்தியவின் முதல் அடி? ஆடிப்போன அமெரிக்கா! உடனடி விளைவு: இந்திய ரூபாய் சரியும்! வல்லரசு!
அடுத்த வல்லரசுக்கான இந்தியவின் முதல் அடி? ஆடிப்போன அமெரிக்கா!
உடனடி விளைவு: இந்திய ரூபாய் சரியும்!
அடுத்த இலங்கையைப்போல திவாலாவது இந்தியாவா என்று கேட்கும் சிலருக்கு இந்தியா சொல்லும் பதில், அடுத்த அமெரிக்காதான் இந்தியா!
அமெரிக்க $ ஏற்றம், இந்திய ₹ இறக்கம், இந்தியாதான் அடுத்து திவாலாகப்போகும் இலங்கை என்று அறிவு ஜீவிகள் முட்டு சந்துல உளறிக்கொண்டிருக்கும்போது, வருங்கால உலக பொது நாணயம் இந்தியாவின் ரூபாய் என்பது எல்லாம் அவர்களுக்கு புரியாது! ஆம் அமெரிக்க டாலருக்கு மாற்றாக உருவெடுக்கும் இந்திய ரூபாய்!
இப்படியெல்லாம் கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பு என்பது எல்லாம் புரியாது?
🐶
அமெரிக்காவின் ஏகாபத்தியத்தின் வீழ்ச்சி என்பது அதன் $ வீழ்ச்சியில்தான் ஆரம்பமாகும் என்று ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியுள்ளேன். அதன் மூலம் எப்படி உலக வர்த்தகத்தை தன் கைக்குள் அமெரிக்கா வைத்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள அதை படியுங்கள்! அந்த வீழ்ழ்ச்சியின் ஆரம்பத்தைத்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்!! அதற்கு முன்பு உலக வர்த்தக கட்டமைப்பின் உயிர் நாடியான வங்கித்துறை பற்றி புரிதல் அவசியம் தேவை!
இந்தியா ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க வேண்டுமெனில், ரஷ்யாவிற்கு ரூபாயிலிலோ அல்லது ரூபிளிலோ நேரடியாக கொடுக்கலாமே, ஏன் கொடுப்பதில்லை? அதை நேரடியாக செய்ய வேண்டுமெனில் இந்திய அரசு தனது SBI Account லிருந்து ரஷ்யாவின் வங்கியான SBER Bank க்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதை நேரடியாக செய்ய முடியாது.
இந்திய ரூபாயை அமெரிக்க டாலராக மாற்றி, அந்த அமெரிக்க டாலரை ரூபிளாக மாற்றித்தான் வர்த்தகம் செய்ய முடியும். இது போன்ற இரு நாடுகளுன் ஏதோ கால்குலேட்டர்ல போட்டு நடக்கிற செட்டில்மெண்ட் அல்ல. அதை புரிந்துகொள்ள வேண்டுமெனில் SWIFT பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் உலகில் இரு நாடுகளின் வங்கிகளுக்கு உள்ள வர்த்தகம் என்பது SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunications system) மூலம் மட்டுமே நடக்க வேண்டும், அதாவாது அதில் மறைந்திருக்கும் விஷயம் அமெரிக்க $ மூலமாக மட்டுமே நடக்க வேண்டும்.
இதை ஒரு உதாரணத்துடன் பார்க்கலம். SWIFT System மூலம் இந்தியா S400 Shield Systen வாங்க 10 பில்லியன் டாலர் ரஷ்யாவிற்கு கொடுக்க வேண்டுமெனில், இந்திய அரசு SBI ல் அதை ரூபாயில் செலுத்திவிடும். நம்ம SBI இன் பேங்க் ஒன்று அமெரிக்காவில் கிளை வைத்திருக்கும். அதற்கு இந்திய அரசு 10 பில்லியனுக்கு இணையான பணம் செலுத்திவிட்டது என்று சொல்லும். அதற்கு SBI அமெரிக்காவில் உள்ள ரஷ்ய அரசின் வங்கியின் கிளையான SBER பேங்கிற்கு அந்த 10 பில்லியன் டாலரை செலுத்திவிடும். அதை பெற்று கொண்ட அமெரிக்க SBER கிளை, உடனே அது தனது ரஷ்ய SBER கிளைக்கு பணம் பெற்றுக்கொண்டதாக சொல்லிவிடும். அதன் பின்னர் அந்த ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும்.
நம் இந்திய வங்கிகளுக்கு இடையே RBI செய்வது போல (உதாரணமாக SBI க்கும் IDBi க்கும் இடையே அந்த பண பரிமாற்றத்தை RBI செய்யும்). அதுபோல இந்த உலக நாட்டு வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகத்தை நடத்துவது இந்த SWIFT. அதற்கு அந்த SWIFT கமிஷனாக ஒரு தொகையை எடுத்துக்கொள்ளும்.
இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்திய அரசுக்கு திவாலான நிலையில் இருக்கும் இலங்கைக்கு உதவியாக 500 கோடி கொடுக்க வேண்டும் எனில், அதை நாம் நேரடியாக கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக நாம் இந்த SWIFT மூலமே கொடுக்க முடியும் என்பதால், உலகில் எந்த வர்த்தகம், பரிவர்த்தனை நடந்தாலும், அமெரிக்காவிற்கு கமிஷன் வந்துவிடும்.
சரி, நல்லாத்தானே இருக்கிறது! இதில் என்ன பிரச்சினை?
உக்ரைன் போருக்கு பின்னால், அமெரிக்காவிலுள்ள ரஷ்யாவின் வங்கிகளுக்கு தடை விதித்து விட்டது. அதனால், ரஷ்ய வங்கிகளின் 300+ பில்லியன் அமெரிக்க டாலரை அதனிடம் வைத்திருந்தாலும் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன்மூலம், ரஷ்யாவிடம் எந்த நாடும் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது, அதனால் ரஷ்யா பொருளாதாரத்தில் நசிந்து வீழ்ந்த்விடும் என்று அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால் அங்கேதான் இந்தியா, அதன் ஆசைக்கு மட்டுமல்ல, அதன் எதிர்காலத்திற்கே வேட்டு வைத்துவிட்டது.
எப்படி?
ரஷ்யாவிடம் எந்த நாடுகளும் எதுவும் வாங்க முடியாத நிலையில், அதன் ரூபிள் மதிப்பிழக்க ஆரம்பித்தது. அதனால் ரஷ்யா தங்களிடம் கச்சா எண்ணெய், கேஸ் வாங்க வேண்டுமெனில் ரூபிளில்தான் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க, ஐரோப்பிய நாடுகள் அதை ரூபிள் மூலமாக கொடுத்து வாங்க ஆரம்பித்தது. அதன் மூலம் அதுதான் அமெரிக்க தலையில் விழுந்த முதல் இடி.
அடுத்து, ரஷ்யாவின் மோசமான நிலைய பயன்படுத்திக்கொண்டு இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை மார்க்கெட்டுக்கு $30 குறைவாக வாங்க ஒப்பந்தம் செய்தது. அது ரஷ்யாவிற்கு சாதகம் என்பதை விட அமெரிக்காவிற்கு பாதகமாக மாறியது. உடனே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால், இந்தியா மீதும் பொருளாதார தடை விதிப்போம் என்றது. உடனே இந்தியா காலில் விழும் என்று எதிர்பாத்த அமெர்க்காவிடம், அப்படியா, தாராளமா செஞ்சுக்கோ, ஆனால் நாங்களும் அமெரிக்கா மீது தடை விதிப்போம் என்றதும் ஆடிப்போனது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சரி, சரி நீ என் நண்பண்டா, அதனால, நீ மட்டும் செஞ்சுக்கோ என்று பின் வாங்கியது.
சரி, அவ்வளவுதானே என்று நினைத்த அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா கொடுத்த அடிதான் அதன் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. அதாவது, என்னதான் அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் மீது பகை என்று இருந்தாலும், உலக அளவில் நடக்கும் வர்த்தகம் என்பது பொதுவானது என்று நினைக்காமல், அதை த்அன் சுய நலத்தை மட்டும் கணக்கில் வைத்து ரஷ்யாவை SWIFT Freeze மூலம் அடக்க நினைத்தது ஒரு நேர்மையற்ற அடி முட்டாள்தனம்.
அதனால், இது போன்ற விஷயங்கள் நாளை எந்த நாட்டுக்கும் நிகழலாம் என்று ஒவ்வொரு நாடுகளும் சிந்தித்து கொண்டு குழம்பி இருக்கும்போது, இந்தியா அதற்கு ஒரு மாற்று ஒன்றை முன் நிறுத்தியது. ஆம் July 11 (7/11 அன்று என்பது இதில் பல அர்த்தம் உள்ளது?) இந்தியா உலக அமெரிக்க டாலர் வர்த்தகத்திற்கு முன்பாக Vostro Account எனும் SWIFT க்கு மாற்றாக ஒரு System த்தை அறிவித்தது. அதன் மூலம் வருங்காலத்தில், இந்திய ₹ என்பது அமெரிக்காவின் $ மாற்றாக ஒரு பரிவர்த்தனையை செய்யும் வழி ஒன்றை தீர்வாக சொன்னது. அதன் மூலம், இன்று எப்படி அமெரிக்காவின் டாலர் ஆளுமை இருக்கிறதோ அதுபோல நாளை இந்தியாவின் ரூபாய் மாறும். அதாவரு இந்தியா தன்னை வல்லரசு என்று சொல்லானல் சொல்கிறது.
உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழுந்திருக்க வேண்டும். இதை ஏன் ரஷ்யாவோ, சீனாவோ செய்யவில்லை?
அருமையான கேள்வி. ரஷ்யா, சீனா எல்லாம், தங்கள் நலனை மட்டும் முன்னிறுத்தும் நாடு. அவை மற்ற நாடுகளை தன்னோடு இனைத்து கோலோச்சும் சிந்தனை கொண்டவை. நாளை அவர்களுக்கு உக்ரைன் போல ஒர் விஷயம் வந்தால், அதுவும் இதைத்தான் செய்யும். ஆனால் இந்தியா அதுபோன்ற ஒரு நாடு அல்ல. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற பரந்த எண்ணம் கொண்டது என்பதால், இந்தியா உலகின் வல்லரசாக விரும்பவில்லை, எல்லோர்க்கும் அமைதியை போற்றும் நல்லரசாகவே விரும்புகிறது. எனவே இது போன்ற சுய நலமான தடைகளை விதிக்காதி என்பது இன்று உலகம் ஏற்கிறது. அதனால்தான் Vostro or Nostro என்றால் உங்கள் பணம் எப்போதும் உங்களௌடையதே என்ற TAG உடன் இதை ஆரம்பித்தது.
அதன் முதல் முயற்சியாக , இந்திய ₹ ல் கச்சா எண்ணெய் வாங்க ரஷ்யாவை நிர்பந்தப்படுத்தி அதை ஒத்துக்கொள்ள வைத்தது. ஏற்கனவே ஈரானிடம் இது போன்ற வர்த்தகம் வழக்கத்தில் உள்ளது. அடுத்த ஆண்ட் இந்தியா உலகத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறப்போகிறது. எனவே இன்றைய உலகம் என்பது, விற்பவர் (Seller) நிர்ணயிக்கும் உலகம் அல்ல, வாங்குபவர் (Consumer) நிர்ணயிக்கும் உலகம் எனும்போது நாளை இந்த இந்தியாவின் Vostro or Nostro உலகத்தின் மையப்புள்ளியாகிறது என்பது தடுக்க முடியாத விஷயம். அதன் வெற்றியில் அமெரிக்காவின் தோல்வி புதைந்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இது நிகழும்!
இது இந்தியாவின் வளர்ச்சி என்பது மட்டுமல்ல, அமெரிக்காவின் மிக மோசமான வீழ்ச்சிக்கான முதல் படி என்பதும் தெளிவான ஒரு விஷயம் என்பதால், அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள், சீனா என்று பல நாடுகள், இந்தியாவின் ரூபாய் மதிப்பை வீழ்த்த முயற்சிக்கிறது. அது எப்படி நிகழும், இந்தியா எப்படி அதை சமாளிக்கப்போகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்!
இந்தியா வளரும் நாடு அல்ல வல்லரசு!
🐶
Indhea
Comments
Post a Comment