119* *ஆண்டுகள்* *வாழ்ந்து* *90* *ஆண்டுகள்* *முதலமைச்சர்* *பதவியை* *வகித்தது* *முறியடிக்கப்படாத* *சாதனை

 


*மகாமக* *குளத்துக்கு* *படித்துறை* *அமைத்தவர்* .


 *119* *ஆண்டுகள்* *வாழ்ந்து* *90* *ஆண்டுகள்* *முதலமைச்சர்* *பதவியை* *வகித்தது* *முறியடிக்கப்படாத* *சாதனை* . *அந்த* *வரலாற்றுச்* *சாதனையாளர்தான்* *ஸ்ரீகோவிந்த* *தீட்சிதர்* .


 *16* *மற்றும்* *17* - *ஆம்* *நூற்றாண்டில்* *தமிழகத்தில்* *நிகழ்ந்த* *வரலாற்றுச்* *சாதனை* !


 *தஞ்சையை* *ஆண்ட* *நாயக்க* *மன்னர்கள்* *மூவருக்கும்* *இராஜகுருவாகவும்* , *முதலமைச்சராகவும்* *திகழ்ந்தவர்* *பல்துறை* *அறிஞராகிய* *கோவிந்த* *தீட்சிதர்* .


 *16* - *ஆம்* *நூற்றாண்டில்* *அச்சுததேவராயர்* *விஜயநகரப்* *பேரரசின்* *மகாராயராக* *இருந்தார்* . *அவர்* *சேவப்ப* *நாயக்கரை* *தஞ்சைப்* *பகுதியின்* *பிரதிநிதியாக* *1532* -ல் *நியமித்தார்* .


 *அதே* *காலகட்டத்தில்* *ஆரணிப்* *பகுதியை* *சின்ன* *திம்மப்ப* *பூபதி* *அரசாண்டு* *வந்தார்* .

 *கேசவ* *தீட்சிதர்* *என்பவர்* *அவருக்கு* *ராஜகுருவாக* *இருந்தார்* . *கேசவ* *தீட்சிதரின்* *சகோதரியின்* *மகன்தான்* *கோவிந்ததீட்சிதர்* .


 *தஞ்சை* *மன்னர்* *சேவப்ப* *நாயக்கர்* , *மகாராயரின்* *ஆலோசனைப்படி* *கோவிந்த* *தீட்சிதரைத்* 

 *தமது* *ராஜகுருவாகவும்* , *முதலமைச்சராகவும்* *நியமித்தார்* .


 *கோவிந்த* *தீட்சிதர்* *பதவியேற்றவுடன்* , *ஆயிரக்கணக்கான* *நூல்களைக்* *கொண்ட* 

' *சரஸ்வதி* *பண்டாரம்* '

 *என்ற* *நூல்* *நிலையத்தை* *நிறுவச்* *செய்தார்* .


 *தஞ்சை* *மக்களின்* *குடிதண்ணீர்* *தேவையைக்* *கருத்தில்* *கொண்டு* *ஓர்* *ஏரியை* *வெட்டச்* *செய்தார்* .


 *சரஸ்வதி* *பண்டாரமே* 

' *சரஸ்வதி* *மகால்* ' *என்ற* *பெயருடன்* *இன்றும்* *புகழுடன்* *செயல்பட்டு* *வருகிறது* .


 *1542* - ல் *கும்பகோணத்தில்* *காவிரிக்கரையில்* *கோவிந்த* *தீட்சிதர்* 

' *ஸாம* *யாகத்தை* *நடத்தினார்* . *மகான்* *ஸ்ரீஅப்பய்ய* *தீட்சிதர்* *அந்த* *வேள்விக்கு* வருகை *தந்து* *சிறப்பித்தார்* . அதே *யாக* *பூமியில்* *மாணவர்கள்* *குருகுல* *முறையில்* *பயிலத்தக்க* *வகையில்* *வேதபாடசாலை* *ஒன்றை* *நிறுவச்செய்தார்* .

" *ஸ்ரீராஜா* *வேதகாவ்ய* 

 *பாடசாலை* " *என்ற* *பெயரில்* *இன்றளவும்* *செயல்பட்டு* *வருகிறது* . *இந்த* *பாடசாலையை* *நிர்வகிக்க* *70* *ஏக்கர்* *நிலத்தை* *அரசர்* *அளித்தார்* .


 *கோவிந்த* *தீட்சிதர்* *மனிதநேயம்* , *மதநல்லிணக்கம்* *பேணிய* *மாமனிதர்* .

 *அவருடைய* *ஆலோசனைப்படி* *நாயக்க* *மன்னர்கள்* *மூவரும்* *செய்த* *நற்பணிகள்* *கல்வெட்டுகள்* *மூலம்* *பறைசாற்றுகின்றன* .

 *தஞ்சையில்* *ஒரு* *மசூதி* *கட்டிக்* *கொள்ள* , *தீட்சிதர்* *ஏழு* *வேலி* *நிலத்தை* *அளிக்கச்* *செய்தார்* .


 *புனித* *சேவியர்* *என்ற* *பாதிரியாருக்கு* *நாகப்பட்டினத்தில்* *கட்டடங்கள்* *கட்டிக்* *கொள்ள* *தீட்சிதர்* , *அரசரின்* *அனுமதியைப்* *பெற்றுத்* *தந்தார்* .


 *திருவண்ணாமலை* *உள்ளிட்ட* பல *கோயில்கள்* *திருப்பணிகளுக்கு* *உதவினார்* *கோவீந்த* *தீட்சிதர்* .


 *கும்பகோணம்* *மங்களாம்பிகை* *உடனுறை* *ஆதி* *கும்பேசுவரர்* *கோயிலுக்கு* *ராஜகோபுரமும்* *மதில்களும்* *கட்டி* *1580* 

 *ஆண்டு* *குடமுழுக்கையும்* *நிறைவேற்றினார்* .


 *திருவையாற்றில்* *தொடங்கி* , *மயிலாடுதுறை* *வரை* , *காவிரியின்* *இரண்டு* *பக்கங்களிலும்* *அழகிய* *படித்துறைகளைக்* *கட்டச்செய்தார்* . *அவற்றுள்* *பல* *இன்றளவும்* *உள்ளன* .


 *இசையிலும்* *மேதையாகத்* *திகழ்ந்த* *கோவிந்த* *தீட்சிதர்* 

' *ஸங்கீத* *ஸுதாநிதி* '

 *என்ற* *நூலை* *இயற்றி* , *ஆதனை* *ரகுநாத* *நாயக்கருக்கு* *அர்ப்பணம்* *செய்துள்ளார்* . *மேலும்* ' *ரகுநாத* *மேள* *வீணை* 

 *என்ற* *புதீய* *தஞ்சாவூர்* *வீணையையும்* *உருவாக்கினார்* .


 *பட்டீசுவரத்தின்* *அருகில்* *இருந்த* *சிங்கரசன்* *பாளையம்* *என்ற* *இடத்தில்* , *அச்சுதப்ப* *நாயக்கருக்கு* *வில்* , *வாள்* , *சண்டைப்* *பயிற்சி* , *குதிரையேற்றம்* , *யானையேற்றம்* *போன்ற* *போர்க்கலைப்* *பயிற்சிகளையும்* *அளித்தார்* *முதலமைச்சர்* *கோவிந்த* *தீட்சிதர்* .


 *ஆசானைப்* *பாராட்டும்* *விதமாக* *அச்சுதப்ப* *நாயக்கர்* , *சிங்கரசன்* *பாளையம்* *என்ற* *ஊரின்* *பெயரை* *மாற்றி* ' *கோவிந்தக்குடி* ' *என்று* *பெயரிட்டார்* .


 *கோவிந்த* *குடியில்* *ஒரு* *வேதபாடசாலை* *இயங்கி* *வருகிறது* . *சோழ* *நாட்டு* *வேத* *விற்பன்னர்களில்* *பெரும்பாலோர்* *கோவிந்த* *குடி* *பாடசாலை* *அல்லது* *குடந்தை* *ராஜா* *வேதபாடசாலையில்* *அத்யயனம்* *செய்தவர்களே* !


 *தஞ்சை* *தரணியில்* *ஜாதி* , *மத* *வேறுபாடு* *இல்லாமல்* *அனைத்து* *தரப்புமக்களும்* *கோவிந்த* *தீட்சிதரை* 

' *எங்கள்* *ஐயன்* ' *என்றே* *போற்றி* *வாழ்த்தினர்* .


 *அதன்* *வெளிப்பாடாக* *ஐயன்பேட்டை* , *ஐயன்குளம்* , *ஐயன்* *கடை* *வீதி* ' *என்றெல்லாம்* *பெயரிட்டு* *மகிழ்ந்தனர்* . *அப்பெயர்கள்* *இன்றும்* *நிலைத்து* *நிற்கின்றன* .


 *கும்பகோணத்தில்* *நடைபெறும்* *மகாமகத்தின்* *பொழுது* *பூமியில்* *உள்ள* *அத்தனை* *புண்ணிய* *தீர்த்தங்களும்* , *கங்கை* *முதலான* *ஒன்பது* *புண்ணிய* *நதிகளும்* *மகாமக* *குளத்திற்கு* *வந்துவிடுவதாக* *ஐதீகம்* . 


 *ஒரு* *முறை* *கோவிந்த* *தீட்சிதருடன்* *கும்பகோணத்திற்கு* *வந்திருந்த* *ரகுநாத* *நாயக்கர்* 

" *கங்கை* *முதலான* *புண்ணிய* *நதிகள்* *இப்போதும்* *மகாமகக்* *குளத்திற்கு* *வருகின்றனவா* ? *அந்த* *நதியரசிகளை* *நாம்* *காண* *இயலுமா* ?"

 *என்று* *வினவினார்* .


" *ஆம்* !  *இன்றும்* *நதி* *அரசிகள்* *இங்கு* *வருகிறார்கள்* " *என்று* *பதிலளித்து* , சிறிது *நீரை* *தெளித்து* *நதிதேவதைகளை* *பிரார்த்தித்தார்* . *அப்போது* *மகாமகக்* *குளத்தில்* *ஒரே* *நேரத்தில்* *18* *அலைக்கரங்கள்* *தோன்றின* . *1624* - *ஆம்* *ஆண்டு* *ரகுநாத* *நாயக்கர்* *அந்த* *அதிசயத்தை* *கண்டார்* . *பெரிதும்* *மகிழ்ந்த* *ரகுநாத* *நாயக்கர்* *கோவிந்த* *தீட்சிதருக்கு* *எடைக்கு* *எடை* *தங்கத்தை* *துலாபாரமாக* *தந்து* *சிறப்பித்தார்* . *அந்த* *தங்கத்தைக்* *கொண்டுதான்* *மகாமகக்* *குளத்துக்கு* *புதிய* *படித்துறைகளை* *அமைத்தார்* . *அத்துடன்* *குளத்தை* *சுற்றிலும்* *16* *சிவாலயங்களைக்* *கட்டினார்* .


 *ரகுநாத* *நாயக்கர்* , *கோவிந்த* *தீட்சிதருக்கு* *எடைக்கு* *எடை* *தங்கம்* *கொடுத்ததன்* *நினைவாக* *மகாமகக்* *குளத்தில்* *வடக்குக்* *கரையில்* *துலாபார* *மண்டபம்* *என்றே* *ஒரு* *மண்டபம்* *கட்டப்பட்டுள்ளது* . *அதில்* *இந்த* *நிகழ்ச்சிகள்* *சிற்பங்களாக* *வடிக்கப்பட்டுள்ளன* .


 *மூன்று* *மன்னர்களுக்கு* *முதலமைச்சராக* *விளங்கிய* *கோவிந்த* 

 *தீட்சிதர்* *எவ்வித* *பகட்டும்* *இல்லாமல்* *வாழ்ந்தார்* .


 *பட்டீஸ்வரத்தில்* *அருகிலுள்ள* *ஒரு* *கிராமத்தில்* *சிறிய* *ஓட்டு* *வீட்டில்* *வசித்து* *வந்தார்* .


 *ஸ்ரீராமாநுஜர்* *120* *ஆண்டுகள்* *இப்பூவுலகில்* *வாழ்ந்தார்* . *அதுபோல்* *கோவிந்த* *தீட்சிதரும்* *119* *ஆண்டுகள்* ( *கி.பி* . *1515* *முதல்* *1634* *வரை* ) *நீண்ட* *நெடிய* *வாழ்வு* *வாழ்ந்தார்* *என்பது* *வரலாற்றுச்* *சான்றுடன்* *கூடிய* *உண்மையாகும்* .

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷