அம்மா விடுகிற மூச்சு காற்றில் கூட பாசம் கலந்திருக்கும் "சில நேரம் அறிவை விட தைரியம் வேலை செய்யும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்க கூடாது இதுவும் கடந்து போகும் என மனதை சமாதானமாக வைத்திருக்கனும் மனம் நிம்மதியாக இருந்தால் உடல் உபாதை மட்டுப்படும்

 

"சொந்தங்களே நம் சொத்து"!


அம்மா விடுகிற மூச்சு காற்றில் கூட பாசம் கலந்திருக்கும்


"சில நேரம் அறிவை விட தைரியம் வேலை செய்யும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்க கூடாது இதுவும் கடந்து போகும் என மனதை சமாதானமாக வைத்திருக்கனும் மனம் நிம்மதியாக இருந்தால் உடல் உபாதை மட்டுப்படும் 


"முடியலையா? கோவிலுக்கு கூட போக வேண்டாம், வீடு தான் கோவில், வீட்டில் ஸ்வாமி படத்தின் முன் விளக்கேற்றி,ரெண்டு ஸ்லோகம் சொல்லி பூஜை செய்தாலே போதும்


"எல்லோரும் நல்லா இருக்கனும்னு மனசில வேண்டிக் கொண்டா போதும்


மலையத்தனை சாமிக்கு கடுகத்தனை பூ போதும்


இது போதும் என்கிற திருப்தி இருக்கனும்,மத்தவாளைப் பார்த்து இது நமக்கில்லையே என்கிற அசூயை மனம் கூடாது,நமக்குன்னு ஆண்டவன் கொடுத்துள்ள இது போதும் என்கிற திருப்தி இருந்தா வாழ்க்கை நிறைவா இருக்கும்


நல்லா படிக்கனும்,சம்பாதிக்கணும் உத்தியோகம் தான் புருஷ லட்சணம்...கல்யாணம்னு ஆன பிறகு நம்மை நம்பி வீட்டுக்கு வந்த பெண்ணை கண் கலங்காம பாத்துக்கனும், பத்து ரூபாய் சம்பாதித்தாலும் அதை பொண்டாட்டி கையில்தான் முதலில் கொடுக்கனும்,பெண்களை மதித்து நடத்தினால் அந்த குடும்பத்தில் எக் காரணம் கொண்டும் சண்டையே வராது, அந்த குடும்பம் மகிழ்ச்சியாக,பிறருக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் என்பார் என் ஸ்வீட்டி...


போகிற போக்கில்,பேச்சிற்கு நடுவில் அம்மா இப்படிப்பட்ட பாஸிட்டிவான வார்த்தைகளை  சொல்லிண்டிருப்பார், அதை கேட்டு,கேட்டு வளர்ந்ததால் என்றும் எங்கள் அனைவர் காதுகளிலும் அது ரீங்காரமிடும்  


அள்ள அள்ள குறையாத அட்ஷய பாத்திரம் போல் மாமியாரின்  நற்குணங்களை சொல்ல சொல்ல குறையாது 


ஒற்றுமையை,உறவுகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கணும்... பூஜை, பாரம்பரியம், பணத்தின் மதிப்பு, பெரியவர்களிடம் மரியாதை, சொல்லி வளர்க்கணும் செல்லம் என்கிற பெயரில் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கக் கூடாது எக்காரணம் கொண்டும்  குழந்தைகளை அடிக்கவோ,திட்டவோ கூடவே கூடாது இதமான வார்த்தைகளால் சொல்லி,புரிய வைக்கணும் தப்பு செய்தால் சொல்லி திருத்தனும்,ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிடக் கூடாது,எல்லா குழந்தைகளும் தெய்வங்கள் தான் என்பார் 


அம்மா இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு என்னை அழைத்து  வருடத்திற்கு ஒருமுறை திவசத்தன்று செய்யும் சமையல் என்னென்ன,செய்முறை,அளவு  என்னென்ன, திவசத்தன்று  வாத்தியார் வீட்டுக்கு வரும் முன் எதை எல்லாம் எடுத்து வைத்து ஏற்பாடு செய்யணும் என சொல்லிக் கொடுத்து ஒரு பேப்பரில் அதை எழுத சொன்னார் உண்மையாக அம்மா எல்லாம் பார்த்து பார் என்கிற அலட்சியத்தால் நான் இதையெல்லாம் அதுவரை கண்டுக்கலை பண்டிகைளில் என்ன முறை எப்படி செய்வது, நம் வீட்டு நடைமுறை என்ன என்பதை எழுதச் சொன்னார் " நீ வீட்டின் மூத்த மருமகள் பின்னாளில் உனக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கணும் நீ வேலைக்கு போறவ, அதனால் இத்தனை வருடம் உனக்கு இதே சொல்லலை என்றும் சொல்ல.... நிஜமாகவே நான் வேலைக்கு போவதும் வருவதுமாகவே தான் இருந்தேன் என் ஸ்வீட்டி அம்மா இறந்ததும் தான் தெரிந்தது அவர் எவ்வளவு தீர்க்கதரசி என, அவர் அன்று சொல்லி எழுதியவற்றை நான் ஜெராக்ஸ் எடுத்து என் ஓர்படிகளுக்கும்  கொடுத்துள்ளேன்.


 கூட்டு குடும்ப சொந்த வீட்டை விற்று அவரவர்கள் தனிக்குடித்தனம் ஆக வாழ்ந்தாலும் கண்டிப்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை அனைவரும் ஒன்று சேர்வோம் அம்மா எங்களிடம் இருந்ததால் எல்லோரும் என் வீடு தான் வருவார்கள் " என் குழந்தைகள் என் மச்சினர் குழந்தைகள் நாத்தனார் குழந்தைகளிடம் எப்போதும் ஒற்றுமையை வலியுறுத்துவார் அம்மா 

 

"நீங்க எல்லாம் படித்து வேலைக்கு போய் திருமணம் ஆனதும் எங்கு எந்த ஊர் ,எந்த நாட்டில்  இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் சினேகமாக இருக்கணும், அடிக்கடி  பேசிக்கனும், போக்குவரத்து இருக்கணும்,"சொந்தங்கள் தான் நம் சொத்து" என்பாராம்  " பாட்டி ஒவ்வொரு தரமும் எங்களிடம் இதைத்தான் சொல்லுவார் என குழந்தைகள் பிறகு என்னிடம் கூறும் பொழுது  எங்களுக்கு மிகப் பெருமிதமாக இருந்தது.. எவ்வளவு நல்ல மனுஷி! தெய்வப்பிறவி என் ஸ்வீட்டி அம்மா"!!


குழந்தைகள் வளர்ந்து படிப்பு வேலை என இருந்தாலும் சுயநலமாக இருக்கக்கூடாது நல்ல பதவி, பணம் காசு சம்பாதித்தாலும் அதெல்லாம் நமக்கு நம் குடும்பத்திற்கு என இருக்கக்கூடாது சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை மற்ற வசதி இல்லாதவாளின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பண உதவி செய்யணும் என்பார். உன்னால் முடியும் எனில் படித்த பிள்ளைகள் வேலை கிடைக்காமல், இல்லாமல் திண்டாடும் சமயம் உன்னால் முடியும் என்றால் சிபாரிசு செய்து வேலை வாங்கி கொடு, படிக்கவும் உதவு  என்பார் அம்மா..என் பிள்ளை,பெண்கள், மச்சினர் பிள்ளை,பெண்களும் இன்றளவும் பாட்டி சொல்படித்தான் நடக்கின்றனர்


நம் சேமிப்பு மாதத்திற்கு  100 ரூபாயாக இருந்தாலும் அதை பண்டிகைக்கு, படிப்பிற்கு, நகை வாங்க, வீடு கட்ட,கோவிலுக்கு செய்ய என நல்லதை நினைத்தபடியே  ரூபாயை சேமி...இந்த பணம் மருத்துவ செலவுக்கு, ஆஸ்பிடல் செலவுக்கு, கஷ்ட காலத்திற்கு இருக்கட்டும் என பணத்தை எடுத்து வைக்காதே,என்றோ வரும் என நினைத்து, இன்று இல்லாத ஒன்றுக்காக சேமிக்காதே நாளை உன் தேவைக்கு நீ நினைத்தபடி சேமித்தது  மருந்துகளுக்காக,ஆஸ்பிடலுக்காக செலவாகிவிடும்,அப்படித்தான்    நேரிடும் என்பார்... இது என்ன லாஜிக்? என நான் அன்று நினைத்ததுண்டு.

" அந்த காலத்தில் உண்டியலில் சேமிக்கும் பழக்கம் இருந்தது பெருமாளுக்கோ,முருகனுக்கோ இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் சுவாமி அறையில் இருக்கும் உண்டியலில் காசு  போடுவார்களாம் உண்டியலில் மஞ்சள் துணிக் கூட கட்டியிருக்கும் பிரார்த்தனை அது,உண்டியலில் சேர்த்து வைக்கும் அந்த பணம்  கோவிலுக்கு போகும்போது வழிசெலவிற்கு அந்த பணம் உபயோகிப்பார்கள், அல்லது வீட்டில் திடீரென பணத்தட்டுப்பாடு வந்தால் உண்டியலை உடைத்து பணம் எடுத்து  அவசரத் தேவைக்கு உபயோகித்துக் கொள்ளலாம் ,பின்பு பணம் சேகரித்து, எடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப உண்டியலில் போட்டு விடுவார்கள்,, உண்டியல் பணம் எடுத்து ,பிறகு போடாமல் இருந்தால் ஸ்வாமி குத்தமாயிடும் என்கிற பயம் இருந்தது சுவாமி படத்தின் முன் உண்டியல் சேமிப்பு நல்லதற்கே உபயோகப்படும் என்பது அன்றே அம்மா சொன்ன உண்மை


"இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த பெண்கள் வேலைக்குப் போறேளா? தாராளமாக போங்க பெண்கள் அனைவரும் தன் சொந்த காலில் நிற்க கத்துக்கணும் கணவனைக் கூட பணம் விஷயத்திற்காக சார்ந்து இருக்க கூடாது.... க்ரீச்,தெரிந்த வீடு, ஹாஸ்டல் என  எங்கும் சிறு குழந்தைகளை விடக்கூடாது என்னை நம்பி குழந்தைகளை வீட்டில் விட்டுட்டு வேலைக்கு போங்க, நான் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கிறேன் ஏதோ என்னால் முடிந்தது பாட்டி தாத்தா இருந்தா அவர்களிடம்தான் குழந்தைகள் வளர ஆசைப்படுவார்கள்,நம் குடும்ப வாரிசுகளை நான் வளர்ப்பது தான் எனக்கும் பிடிக்கும் என்பார்...  இப்படித்தான் என் மூன்று குழந்தைகளும் பாட்டியின் அரவணைப்பில் வளந்தவர்கள். 


யாரிடமும் அதிர்ந்து பேசவோ அதிகாரம் செய்யவோ தெரியாது என் ஸ்வீட்டி மாமியாருக்கு "என்னால் முடியாது, "எனக்கு வயசு ஆயிடுத்து, 'எனக்கு தெரியாது'! "எனக்கு உடம்பு முடியவில்லை"  "நான் செய்ய மாட்டேன்"! என  எதிர்மறையான விஷயங்களை என்றும் மறந்தும் பேச மாட்டார் சொல்லவும் மாட்டார்


எங்கள் மாமியாருக்கு நாங்கள் நான்கு மருமகள்கள் எங்கள் நால்வரையும் ஒன்று போலவே தான் நடத்துவார் எப்பொழுதும் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் சொல்வதோ அல்லது ஒருவரை தாழ்த்தி,உயர்த்தி பேசுவதோ,கம்ப்பேர் செய்ததோ கிடையவே கிடையாது. 


"என் அன்பு அம்மாவின் ,என் ஸ்வீட்டி மாமியாரின் முன் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என நான் சொல்வது கொஞ்சம் அதிகமோ? என நீங்கள் நினைத்தாலும்...நான் சொல்வது தான் சத்தியமான உண்மை.


ராதா நரசிம்மன்

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai